NEW
Font size
Worksheetsஆகிய, முதலிய
Total questions: 12
Worksheet time: 6mins
மல்லிகை, ரோஜா ______________ மலர்களைக் கொண்டு இந்தத் திருமண மாலை கட்டப்பட்டுள்ளது.
ஆகிய
முதலிய
இயல், இசை, நாடகம் _____________ மூன்றும் முத்தமிழ் ஆகும்.
முதலிய
ஆகிய
இயல், இசை _______________ மூன்றும் முத்தமிழ் என்று அழைக்கப்படும்.
முதலிய
ஆகிய
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ______________ நான்கும் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளாகும்.
ஆகிய
முதலிய
தாலாட்டுப் பாடல், உழவுப் பாடல், விளையாட்டுப் பாடல் ____________________ பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்பார்கள்.
முதலிய
ஆகிய
பாலா புத்தகம், பேனா, பென்சில் __________________ பொருள்களைப் புத்தகக் கடையிலிருந்து வாங்கி வந்தான்.
ஆகிய
முதலிய
சந்தையில் மாம்பழம், ஆப்பிள் ___________________ பழங்கள் விற்கப்படுகின்றன.
முதலிய
ஆகிய
அம்மா சந்தையில் கீரை, தக்காளி, வெண்டைக்காய் _________________ காய்கறிகளை வாங்கினார்.
ஆகிய
முதலிய
சனி, ஞாயிறு __________________ நாள்களை நாம் வார இறுதி நாள்கள் எனக் கூறுகிறோம்.
ஆகிய
முதலிய
தமிழர்கள் மங்கல விழாக்களின்போது வெற்றிலை, பாக்கு, சந்தனம், பன்னீர் ______________________ பொருள்களைப் பயன்படுத்துவார்கள்.
ஆகிய
முதலிய
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் __________________ மூன்று பழங்களும் முக்கனிகள் எனப்படும்.
ஆகிய
முதலிய
ஆடு புலியாட்டம், கபடி, பல்லாங்குழி ________________ விளையாட்டுகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளாகும்.
முதலிய
ஆகிய
