NEW
Font size
Worksheetsஐந்தாம் வகுப்பு - 1
Total questions: 15
Worksheet time: 30mins
பிள்ளைகள் __________ தந்த பரிசை அம்மா ஏற்றுக்கொண்டார்.
அன்புக்கு
அன்பின்
அன்பை
அன்புடன்
என் __________ இந்தப் பதில் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நண்பனோடு
நண்பனால்
நண்பனிடம்
நண்பனிடமிருந்து
ஔவையார் தமது பாடல்கள் வழி பல அறநெறிகளை _________ எடுத்துரைத்து உள்ளார்.
மக்களை
மக்களுக்கு
மக்களால்
மக்களுடன்
அம்மா __________ வந்ததும், தாம் வாங்கிய பொருள்களைக் குளிர்பதனப்பெட்டியில்
வைத்தார்.
சந்தைக்கு
சந்தையில்
சந்தையை
சந்தையிலிருந்து
அன்னை திரேசா __________ வாழ்க்கையை மேம்படுத்த அயராது உழைத்தார்.
ஏழைகளின்
ஏழைகளை
ஏழைகளில்
ஏழைகளால்
சிறப்பு விருந்தினர் __________ தலைமையாசிரியர் தமது உரையைத் தொடங்கினார்.
அமர்ந்தால்
அமர்ந்ததும்
அமரும்போது
அமர்ந்ததால்
குழியில் விழுந்த சிறுவன், __________ வேரைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தான்.
உறுதியான
உறுதியாக
உறுதியாக்க
உறுதியாகும்
ஆசிரியர் கூறிய கதை __________ இருந்ததால், மாணவர்கள் அதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சோகமாக
மர்மமாக
சுருக்கமாக
சுவாரசியமாக
மூதாட்டி தனக்கு நேர்ந்த பயங்கரமான திருட்டுச் சம்பவத்திலிருந்து இன்னும் __________ வரவில்லை.
மீண்டு
மீளாமல்
மீட்டு
மீறி
இரு மொழிகளை __________ சிங்கப்பூரர்கள் மற்ற நாட்டினருடன் தொடர்புகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதில்லை.
கற்ற
கற்றால்
கற்காத
கற்பித்த
என் அண்டைவீட்டில் நிகழ்ந்த __________ சம்பவம் அனைவரையும் பீதி அடைய வைத்தது. காவலர்கள் இதற்குக் காரணமானவர்களைத் தேடி வருகிறார்கள்.
கொல்லை
கொள்ளை
நேற்று பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுத் தினத்துக்குத் திரு மாறன் வந்திருந்தார். அவர் எங்கள் பள்ளியின் ________ தலைமையாசிரியர் ஆவார்.
முன்னால்
முன்னாள்
உணவகத்தில் நீர் ________ சென்ற மாணவன் வழுக்கி விழுந்தான். இதைக் கண்ணுற்ற மாணவியர் சிலர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.
அருந்த
அறுந்த
சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்ததால் என் தொண்டை வறண்டு போனது. குளிர்ந்த ________ ஒன்றை வாங்கிக் குடிக்க எனக்குள் ஆசை தோன்றியது.
பானம்
பாணம்
அம்மா மஞ்சளை _________ தம் முகத்தில் தடவிக்கொள்வார். இவ்வாறு செய்வது தோலுக்கு நன்மை பயக்கும் என அவர் சொன்னார்.
இளைத்து
இழைத்து
