wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தோன்றல் விகாரம் கடினம் (ஆண்டு 5) சுட்டு+உயிர்மெய்

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சரி பிழையெனக் குறிப்பிடுக.

தோன்றல் விகாரத்தில் நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்,

a)

ஆம்

b)

இல்லை

2.

சுட்டெழுத்து என்றால் என்ன ?

a)

உயர்திணை அல்லது அஃறிணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.

b)

உயர்திணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.

c)

அஃறிணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.

3.

சோமுவின் குழந்தைகள் இருவரும் தூரத்தில் இருக்கின்ற _____________________ பயில்கின்றனர்.

a)

அப்பள்ளியில்

b)

அபள்ளியில்

c)

இப்பள்ளியில்

4.

இரகுவின் அம்மா, "இரகு உன்னுடைய பிறந்தநாள் பரிசுகளை அருகில் இருக்கும் _______________ வைத்துள்ளேன்." என்றார்.

a)

அப்பெட்டியில்

b)

இப்பெட்டியில்

c)

இபெட்டியில்

5.

அதிக வெப்பத்தின் காரணத்தால் அ + காடு தீப்பற்றி எரிந்தது.

a)
  • அகாடு

b)

அக்காடு

c)

அகடு

6.

இ + படை போரில் வெல்லும் என அரசர் உறுதியாகக் கூறினார்.

a)

இபடை

b)

இப்பாடை

c)

இப்படை

7.

கருமையாக்கப்பட்டுள்ள சொல்லைப் பிரித்தெழுதுக.

ஒரு நாட்டின் செழிப்பு அந்நாட்டை ஆட்சிப் புரியும் மன்னரைப் பொருத்தே அமையும்.

a)

அ+நாட்டை

b)

அ+நாட்டினை

c)

அந்+நாட்டை

8.

ஒரு நாட்டின் செழிப்பு அந்நாட்டை ஆட்சிப் புரியும் மன்னரைப் பொருத்தே அமையும்.

கருமையாக்கப்பட்டுள்ள சொல்லைப் பிரித்தெழுதுக.

a)

அ+நாட்டை

b)

அ+நாட்டினை

c)

அந்+நாட்டை

9.
  • கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல்லினைப் பிரித்துக்காட்டுக.

  • "இக்கிராமம் யாருக்குச் சொந்தமானது?" என்று மன்னர் காவலனைப் பார்த்துக் கேட்டார்.

a)

இ+கிராமம்

b)

இக்+கிராமம்

c)

இ+கிராமம்

10.

(கருமையாக்கப்பட்ட சொல்லினைப் பிரித்துக்காட்டுக)

சிவகாந்தன்: வா, நாம் இப்பூங்காவிலேயே அமர்ந்து ஓய்வெடுப்போம்.

a)

இ+பூங்கா

b)

இப்+பூங்கா

c)

இ+பூகா

11.

கீழ்க்காணும் சொற்களில் சுட்டினைக் கொண்டுள்ள புணர்ச்சியைக் குறிப்பிடுக.

(இரண்டு விடைகள் உள்ளன)

a)

அக்குடும்பம்

b)

ஈக்கள்

c)

இக்குழந்தை

d)

அக்காள்

12.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சுட்டு + உயிர்மெய் கொண்டுள்ள வாக்கியம்.

a)

அச்சிறுவன் முருகனின் முதல் மகன்.

b)

பூஞ்சோலையில் சிறுவர்கள் விளையாடினார்கள்.

c)

பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.

d)

அனைவரும் கைகுட்டை எடுத்துவர வேண்டும் என ஆசிரியர் கூறினார்.

13.

அந்தப் பூங்காவில் காணப்படும் ________ மிக அழகாக இருக்கின்றனவே," என்று கமலா தன் தோழியிடம் கூறினாள்.

a)

இப்பூக்கள்

b)

அப்பூக்கள்

c)

இபூகள்

d)

அபூகள்

14.

'சுட்டு' தோன்றால் விகாரம் பற்றிய சரியான கூற்று எது?

(இரண்டு விடைகள் உள்ளன)

a)

அ, இ, எ, ஒ என்கிற சுட்டெழுதுக்களைக் கொண்டிருக்கும்

b)

குறிப்பிட்ட உயர்திணை மற்றும் அஃறினையைச் சுட்டு குறிக்கும்.

c)

தூரத்தில் இருக்கும் மற்றும் அருகில் இருப்பதைக் குறிக்கும்

d)

அருகில் இருக்கும் பொருளை மட்டுமே குறிக்கும்.

15.

பின்வருபவற்றுள் எது சுட்டெழுத்துக் கொண்ட தோன்றல் விகாரம் கிடையாது.

a)

இக்குளம்

b)

அக்கிராமம்

c)

இத்திடல்

d)

இன்னிசை