Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 23
Total questions: 15
Worksheet time: 8mins
நாயன்மார்கள் என்போர் ................................ எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவர்.
மகாபாரதம்
பெரிய புராணம்
ரிக் வேதம்
இவர்களின் வரலாறு ............................ எழுதப்பட்டது.
திருமூலரால்
சுந்திரமூர்த்தியால்
சேக்கிழாரால்
நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் முதன்மையானவர்கள்.இந்த நால்வரும் ................................... என்று அழைக்கப்படுகிறார்கள்.
சுவாமிகள்
நால்வர்
சைவ சமய குரவர்
நாயன்மார்களில் பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் .......................................... என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
செல்வம் அடையலாம்
புகழ் அடையலாம்
இறைவன் திருவடிகளை அடையலாம்
அறுபத்துமூன்று நாயன்மாரில் ........................ பெண்கள் ஆவர்.
இரண்டு
மூன்று
நான்கு
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் .................................. ஆகும்.
மங்கையர்க்கரசி
புனிதவதியார்
திலகவதியார்
மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி .................................... என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார்.
மங்கையர்க்கரசியார்
திலகவதியார்
புனிதவதியார்
திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி ............................மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
ஔவையார்
ஆண்டாள்
இசைஞானியார்
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் .................................. என அழைக்கின்றனர்.
சதாசிவன்
பரமசிவன்
ருத்திரன்
எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் .............................. என்றும், சுடுகாட்டில் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.
சித்தன்
இறைவன்
போகன்
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என ................... வடிவங்களில் உள்ளார். அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவ உருவத்திருமேனிகள் ஆகியவை உருவத் திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
இரண்டு
மூன்று
பல வடிவங்களில்
பத்தாம் திருமுறை .......................... அருளிய திருமந்திரம்.
அப்பர்
சேக்கிழார்
திருமூலர்
முதல் திருமுறை ............................ அருளியது.
சம்பந்தர்
அப்பர்
திருமூலர்
நான்காம், ஐந்தாம் ,ஆறாம் திருமுறை.....................அருளியது.
அப்பர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அம்மையப்பன்,சாம்பசிவன்,உடையான்,ஈஸ்வரன்,உலகுடையான்,ஜகதீஸ்வரன்,ஒருமாவன்,ஏகாம்பரன்கேடிலி அட்சயன்,சொக்கன்,சுந்தரன்,தாயுமானவன்- இவைகள்:
இறைவனின் பெயர்கள்
நாயன்மார்களின் பெயர்கள்
சிவனின் பெயர்கள்
