wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 26

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இந்துசமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்...................................... என அழைக்கின்றனர்.

a)

முருகன்

b)

விநாயகர்

c)

பரமசிவன்

d)

சக்தி

2.

தனது ...................................................... படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளையும் செய்கிறார்.

a)

சூலத்திலிருந்து

b)

உடுக்கையிலிருந்து

c)

புலி ஆடையிலிருந்து

d)

நெற்றிக்கண்ணிலிருந்து

3.

அடிப்படையான ஓம் என்ற ..................................... உருவாக்கினார் சிவன் என கருதப்படுகிறது.

a)

ஆத்மார்த்தமான மந்திரத்தை

b)

பிரணவ மந்திரத்தை

c)

உயிர் மந்திரத்தை

d)

தியான மந்திரத்தை

4.

சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து .................................. உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.

a)

பிரம்மரும்

b)

கிருஷ்ணரும்

5.

..............................என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.

a)

பிரம்மா

b)

விஷ்ணு

c)

சிவன்

6.

எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் .................................என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல்.............................. என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், ..............................எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

a)

யோகி, பித்தன், சித்தன்

b)

யோகி, சித்தன், பித்தன்

c)

சித்தன், யோகி,பித்தன்

d)

பித்தன்,சித்தன், யோகி

7.

இந்து மதத்தில் ............................................. இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார்.

a)

ருத்ரன், கிருஷ்ணன்

b)

ருத்ரன், சிவன்

c)

ருத்ரன், பிரம்மா

d)

ருத்ரன், திருமால்

8.

சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை.............................................. போக்கி வீடுபேறு அருளுகிறார்.

a)

புகழ்,பணம்,நிலம்

b)

உயிர்,உணவு,உரக்கம்

c)

ஆணவம்,கன்மம்,மாயை

9.

உலகுடையான் என்ற தமிழ்சொல்லை வட மொழியில்...

a)

ஈஷ்வரன்

b)

ஜகதீஸ்வரன்

c)

சாம்பசிவன்

10.

பரமகுரு, தென்முகநம்பி, ஆலமர்செல்வன் என்பவர்தான் வடமொழியில் ...................................................

a)

தட்சிணாமூர்த்தி ஆவார்.

b)

பிருகதீஸ்வரர் ஆவார்.

c)

கல்யாணசுந்தரர் ஆவார்.

d)

அர்த்தநாரி ஆவார்.

11.

பிறைசூடன் வடமொழியில்.......................

a)

நடராஜன்

b)

சந்திரன்

c)

சந்திரசேகரன்

12.

........................... இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

a)

நவராத்திரி

b)

மகா சிவராத்திரி

c)

தீபாவளி

d)

வைகாசி விசாகம்