wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 10 - இலக்கணம் இயல்2

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது _______ எனப்படும்.

a)

தொடர்

b)

சொற்றொடர்

c)

வாக்கியம்

d)

அனைத்தும்

2.

வேற்றுமை,வினை,பண்பு போன்றவற்றின் உருபுகள் நோக்கி இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் ஒரே சொல்போல காட்சி தருவது _________ எனபபடும்.

a)

அன்மொழித்தொகை

b)

வேற்றுமைத்தொகை

c)

தொகைநிலைத் தொடர்

d)

தொகாநிலைத் தொடர்

3.

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ________.

a)

வேற்றுமைத்தொகை

b)

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உவமைத்தொகை

4.

தமிழ்த்தொண்டு - இலக்கண குறிப்பு தருக.

a)

நான்காம் வேற்றுமைத்தொகை

b)

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

c)

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

d)

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

5.

காலம் காட்டும் இடைநிலை மற்றும் பெயரெச்ச விகுதி மறைந்து நிற்க,வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப்போல் நடப்பது _________.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

வினைத்தொகை

d)

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

6.

சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' எனும் பண்புருபு தொக்கிவருவது _________.

a)

பண்புத்தொகை

b)

குணப்பெயர்

c)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

d)

அனைத்தும்

7.

எண்ணல்,எடுத்தல், முகத்தல்,நீட்டல் எனும் அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது _______.

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

எண்ணும்மை

d)

பண்புத்தொகை

8.

இலக்கணக் குறிப்பு தருக.- பூங்குழல் வந்தாள்.

a)

இரண்டாம் வேற்றுமைத் தொகை

b)

பண்புத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உவமைத்தொகை

9.

இரு சொற்களுக்கும் இடையலும் இறுதியிலும் 'உம்' எனும் இடைச்சொல் மறைந்து வருவது _______.

a)

எண்ணும்மை

b)

உம்மைத்தொகை

c)

முற்றும்மை

d)

உவமைத்தொகை

10.

பலாமரம் - இலக்கணக் குறிப்பு தருக.

a)

அன்மொழித்தொகை

b)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வினைத்தொகை

11.

வினைப்பகுதியும்,அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே ________ தொகை அமையும்.

a)

பண்புத்

b)

வினைத்

c)

வேற்றுமைத்

d)

உவமைத்

12.

இன்மொழி - இலக்கணக் குறிப்பு தருக.

a)

பண்புத்தொகை

b)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

c)

வினைத்தொகை

d)

அன்மொழித்தொகை