wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் / இலக்கியம் ஒரு கண்ணோட்டம்..

Total questions: 30

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்காணும் விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.


__________________________________________

உள்ளத்து ளெல்லாம் உளன்

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

b)

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

c)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

d)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

3.

படத்திற்குப் பொருத்தமான செய்யுள் எது?

a)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

c)

போகவிட்டுப் புறஞ் சொல்லித் திரிய வேண்டாம்

d)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

4.

கொடுக்கப்பட்ட செய்யுளடி உணர்த்தும் கருத்து யாது? மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

a)

காலத்தின் அருமையையும் கருதாது செயலில் கருத்தூன்றி இருத்தல்

b)

ஒருவர்தான் நினைத்த செயலை முடித்திடும் உறுதி

c)

செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம்

d)

உடல்நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல்

5.

கீழே உள்ளவற்றுள் பிழையான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

சுற்றும் முற்றும் - சில இடங்களில்

b)

ஆடை அணிகலன் - உடையும் ஆபரணமும்

c)

தான தர்மம் - கொடை தருதல்

d)

மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி

6.

இஃது எவ்வகை எழுத்தாகும் ?

கோ

a)

உயிர்மெய் குறில் எழுத்து

b)

உயிர்மெய் நெடில் எழுத்து

c)

கிரந்த எழுத்து

d)

மெய் எழுத்து

7.

கீழ்காண்பனவற்றுள் வினையடையை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

மங்கை இனிமையான பாடலைப் பாடினாள்

b)

மங்கை இனிய பாடலைப் பாடினாள்

c)

மங்கை பாடலை இனிமையாகப் பாடினாள்

d)

மங்கை பாடிய பாடல் இனிமையானது.

8.

சேர்த்தெழுதுக :

வேதம் + ஆகமம்

a)

வேதஆகமம்

b)

வேதாகமம்

c)

வேதியாகமம்

d)

வேதமாகமம்

9.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது தவறான இணை?

a)

சினைப்பெயர் - காய்

b)

இடப்பெயர் - பள்ளி

c)

பொருட்பெயர் - வாகனம்

d)

தொழிற்பெயர் - மருத்துவர்

10.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது தவறான இணை?

a)

அஃறிணை - குரங்கு

b)

பன்மை - காகம்

c)

உயர்திணை - கேஸ்வின்

d)

பெண்பால் - கீர்த்தனா

11.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது தவறான இணை?

a)

நிகழ்காலம் - சாப்பிடுகிறான்

b)

இறந்தகாலம் - சாப்பிட்டாள்

c)

இறந்தகாலம் - கத்தினான்

d)

இறந்தகாலம் - காய்க்கும்

12.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பிழையான இணை?

a)

எரிந்த கட்டடம் - பெயரெச்சம்

b)

விழுந்த மரம் - பெயரெச்சம்

c)

எழுதி முடித்தான் - பெயரெச்சம்

d)

வீசிய பந்து - பெயரெச்சம்

13.

விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்

a)

அவசரக் குடுக்கை

b)

மினு மினு

14.

இலக்கணப் பிழைகளை அடையாளங்காண்க :

அருள் வீசிய வலையில் மீன் சிக்கிக் கொண்டன

a)

கொண்டன

b)

அருள்

c)

மீன்

d)

வீசிய

15.

இலக்கணப் பிழைகளை அடையாளங்காண்க :

பறவை உயரமாகப் பறந்துச் சென்றது

a)

சென்றது

b)

பறவை

c)

பறந்துச்

d)

உயரமாகப்

16.

இலக்கணப் பிழைகளை அடையாளங்காண்க :

மலர்விழி ஒரு அழகிய பூமாலையைத் தொடுத்தாள்.

a)

மலர்விழி

b)

பூமாலையைத்

c)

தொடுத்தாள்.

d)

ஒரு

17.

அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.

b)

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.

c)

தருமம் மற்றும் நன்மைதரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.

d)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

18.

கொடுக்கப்பட்டுள்ளசொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

சகோதரர்கள்

c)

சுற்றியுள்ள உறவினர்கள்

d)

செல்வந்தர்கள்

19.

படத்திற்குப் பொருத்தமான சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

ஆடிப்பாடி

d)

ஆதி அந்தம்

20.

உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

5

c)

18

d)

7

e)

96

21.

மேற்காணும் படம் எந்தத் திணையைக் குறிக்கின்றது?

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

ஒன்றன்பால்

d)

ஆண்பால்

22.

விண்ணுலகம் என்பது எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது?

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

கெடுதல்

d)

இயல்பு புணர்ச்சி

23.

இலக்கண பிழைகளை அடையாளமிடுக.

முருகன் வகுப்பறையை சுத்தம் செய்தான்.

a)

சுத்தம்

b)

வகுப்பறையை

c)

முருகன்

d)

செய்தான்

24.

இலக்கண பிழைகளை அடையாளமிடுக.

அக்காள் கோவிலுக்குப் பூக்கள் நிறைந்த கூடையைக் கொண்டுச் சென்றாள்.

a)

கூடையைக் .

b)

அக்காள்

c)

சென்றாள்.

d)

கொண்டுச் .

25.

இலக்கண பிழைகளை அடையாளமிடுக.

விட்டுக்கு வெளியே பட்டுப் பூச்சியின் சத்தம் கேட்டது.

a)

வெளியே

b)

பட்டுப் பூச்சியின்

c)

கேட்டது.

d)

விட்டுக்கு

26.

இலக்கண பிழைகளை அடையாளமிடுக.

தங்கை அண்ணனோடு பள்ளிக்கு சென்றாள்.

a)

சென்றாள்.

b)

தங்கை

c)

பள்ளிக்கு

d)

அண்ணனோடு

27.

கீழ்காணும் திருக்குறள்களை நிறைவு செய்க.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

a)

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

c)

புண்ணுடையர் கல்லா தவர்

d)

எழுமையும் ஏமாப் புடைத்து

28.

திருக்குறள்களை நிறைவு செய்க : ______________________________________________

நிற்க அதற்குத் தக

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

b)

புண்ணுடையர் கல்லா தவர்

c)

எழுமையும் ஏமாப் புடைத்து

d)

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

29.

திருக்குறள்களை நிறைவு செய்க.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

b)

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

c)

எழுமையும் ஏமாப் புடைத்து

d)

புண்ணுடையர் கல்லா தவர்

30.

வாக்கியத்தைச் சரியான அடையைக் கொண்டு நிறைவு செய்க .

ஆசிரியர் ______________ பெட்டியை மேசையில் சிரமப்பட்டு வைத்தார்.

a)

இனிப்பான

b)

பலமான

c)

கனமான

d)

ஆழமான