Worksheetsஇலக்கியப் புதிர் கேள்விகள் ஆண்டு 3 திருமதி வசந்தா
Total questions: 10
Worksheet time: 3mins
பலமாகக் காற்று வீசியதால் அந்த மரம் ............................. வெனச் சாய்ந்தது .
திரு திரு
பள பள
மட மட
கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்ட அந்த திருடன் .......................................... வென விழித்தான் .
நற நற
திரு திரு
சல சல
அந்தத் தங்க தட்டு சூரிய ஒளியில் ................................... வெனப் பிரகாசித்தன.
மள மள
தக தக
பள பள
................................... வென நீர் ஓடிக் கொண்டிருந்த அந்தக் கால்வாயில் அவர் இறங்கினார்.
மள மள
சல சல
பள பள
அச்சிறுவன் அங்குமிங்கும் ......................................வென ஓடித் திரிந்தான்.
மட மட
குடு குடு
மள மள
தம்பி கீழே விழுந்த நாணயத்தைச் ............................... தேடினான்.
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
அன்றும் இன்றும்
கனரக வாகனங்கள் செல்வதால் அச்சாலை ......................... -ஆக இருக்கிறது.
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
மேடு பள்ளம்
தோழர்கள் மூவர் ......................... பழகி வந்தனர்.
எலியும் பூனையும் போல
நகமும் சதையும் போல
தாயும் சேயும் போல
பேசும் குதிரை ஒன்றனை வளர்ப்பதாக முதியவர் ............................ .
அள்ளி விட்டார்
கம்பி நீட்டினார்
கரி பூசினார்
வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ........................... .
கரி பூசினார்கள்
கம்பி நீட்டினார்கள்
கங்கணம் கட்டினார்கள்
