Worksheetsதமிழ் மொழி இலக்கணம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
*ஒரு வினையை எழுவாயே முன்னின்று செய்வது.
*எழுவாய்க்கு முதன்மை கொடுக்கப்படும்.
மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக.
செயப்பாட்டுவினை
வினைமுற்று
வினையெச்சம்
செய்வினை
செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
கடிதம் மாறனால் எழுதப்பட்டது.
நேற்று காற்று வீசியது.
தோட்டக்காரர் செடியை நட்டார்.
செடியைத் தோட்டக்காரரால் நட்டார்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை 'ஆல்' உருபை ஏற்று வருவது யாது?
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
செய்வினை
கயல்விழி நடனம் ஆடினாள்.
இச்செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நடனத்தை கயல்விழியால் ஆடப்பட்டது.
கயல்விழி நடனத்தை ஆடப்பட்டது.
கயல்விழியால் நடனம் ஆடினாள்.
நடனம் கயல்விழியால் ஆடப்பட்டது.
சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டப்பட்டது.
ராஜ ராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான்.
ராஜ ராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலால் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
செய்வினை வாக்கியம் எதன் அடிப்படையில் அமைய வேண்டும்.
எழுவாய், பயனிலை என்ற அடிப்படையில் அமைய வேண்டும்.
எழுவாய், செயப்படுபொருள், என்ற அடிப்படையில் அமைய வேண்டும்.
செயப்படுபொருள், பயனிலை என்ற அடிப்படையில் அமைய வேண்டும்.
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற அடிப்படையில் அமைய வேண்டும்.
செயப்படுபொருளோடு, எந்த வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.
'ஆல்' வேற்றுமை உருபை
'கு' வேற்றுமை உருபை
'ஐ' வேற்றுமை உருபை
'இல்' வேற்றுமை உருபை
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எதற்கு முதன்மை கொடுக்கப்படும்.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாயும் செயப்படுபொருளும்
வயல் உழவரால் உழப்பட்டது.
இவ்வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
உழவரால் வயலை உழுதார்.
உழவர் வயலை உழுதப்பட்டது.
உழவர் வயலை உழுதார்.
உழுதப்பட்டது உழவரால் வயல்.
சிற்பி சிலையைச் செதுக்கினார்.
செயப்பாட்டுவினையில் இவ்வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் சொல் யாது?
சிற்பியை
செதுக்கினால்
சிற்பியால்
சிலையால்
