NEW
Font size
Worksheetsஎஸ்பிஎம் தமிழ் இலக்கியப் புதிர்ப்போட்டி - கவிதை
Total questions: 20
Worksheet time: 9mins
‘தமிழரின் தற்கால நிலைமை’ எனும் கவிதையை இயற்றியவர் யார்?
புரட்சிக்கவி பாரதிதாசன்
மகாகவி பாரதியார்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
கவிவாணர் ஐ. உலகநாதன்
‘தமிழரின் தற்கால நிலைமை’ எனும் கவிதையின் பாடுபொருள் யாது?
தமிழினம்
சமுதாயத்தின் அவலம்
சமுதாயம்
தமிழ்மொழி
‘எதுகை’ என்பதன் பொருள் யாது?
சீர்களின் முதல் எழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றி வருதல்
சீர்களின் முதல் எழுத்தின் ஓசையும் இரண்டாம் எழுத்தின் அளவும் ஒன்றி வருதல்
கீழ்க்காணும் அடிகளில் காணப்படும் எதுகையைத் தேர்ந்தெடு
சின்ன சின்ன அகல்விளக்கு – கண்
சிமிட்டி அழைக்கும் பொன்விளக்கு
எண்ணில் அடங்காப் பலகோடி! – அவை
எண்ணெய் இல்லா மின்விளக்கு
சின்ன – சின்ன
சின்ன – கண்
சின்ன – எண்ணில்
எண்ணில் – எண்ணெய்
‘மோனை’ என்பதன் பொருள் யாது?
அடிகளில் முதல் எழுத்து ஓசையால் ஒன்றி வருவதே மோனை
சீர்களில் முதல் எழுத்து ஓசையால் ஒன்றி வருவதே மோனை
கீழ்க்காணும் கண்ணியில் காணப்படும் மோனையைத் தேர்ந்தெடு
உட்கார் நண்பா நலந்தானா? – நீ
ஒதுங்கி இருப்பது சரிதானா?
சுட்டும் விரல்நீ சுருங்குவதா? –உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
உட்கார் – நண்பா
சுட்டும் – சுயபலம்
ஒதுங்கி – சுட்டும்
சுட்டும் – விரல்நீ
“உவமையைப் பொருளில் ஏற்றல்” என்பது என்ன அணி?
உவமை அணி
தன்மை நவிற்சி அணி
திரிவு அணி
உருவக அணி
“உயர்வு நவிற்சி அணிக்கு’ ஏற்ற சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடு
மிக உயர்த்திப் பாடுதல்
இயல்பாகப் பாடுதல்
ஒத்ததைப் ஒப்பிடுதல்
வந்த சொல் மீண்டும் வருதல்
“தங்கமகன் ஒளியாலும் கங்கையவள்
அருளாலும் செம்மை உறி” என்ற அடிகளில் காணப்படும் அணிச் சிறப்பு யாது?
உவமை அணி
உருவக அணி
திரிபு அணி
தற்குறிப்பேற்றல் அணி
மோனையை ஓசையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். கீழ்க்காண்பவற்றில் எது அவற்றில் பொருந்தாதது?
பிரித்தல்
இளித்தல்
குவித்தல்
பிளத்தல்
‘திரிபு அணி’ அடங்கிய இணையைத் தேர்ந்தெடு
குருபத்தி – தருபுத்தி
உணர வேண்டும் – காக்க வேண்டும்
ஆசான் – பேசான்
வற்றாத – வயிராற
“உள்ளத்தில் எழும் உணர்வு வெளிபாட்டை” உணர்த்துவது
இயல்பு நவிற்சி அணி
ஐய அணி
சுவை அணி
திரிபு அணி
‘தன்னிலை விளக்கம்’ என்பது எந்தக் கவிதையின் பாடுபொருள்
விண்மீன்
தமிழரின் தற்கால நிலைமை
ரப்பரும் தமிழரும்
நான் ஒரு பித்தன்
“வாழ்ந்து காட்டுவோம்’ என்ற கவிதையின் மையக்கரு யாது?
தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல்
விண்மீன் காட்டும் பேரழகு
ஊக்கமிருப்பின் வெற்றி கிட்டுவது உறுதி
தொழில் வளம் பெருக்கித் துலங்கச் செய்தல்
மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்
முதுகினில் வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனந்தான் வாழ்க்கையென – வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்? என்ற கவிதைக் கண்ணி உணர்த்தும் கருத்து யாது?
மூலையில் ஒதுங்கி நல்ல வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது
மூலையில் கிடப்பதால் நல்ல வேலை கிடைக்காது
சோம்பித் திரிபவர்கள் விரிந்த செயல்பாடின்றி இருப்பர்
சோம்பல் அதிகரிப்பதால் நல்லை வாய்ப்புகளை இழந்துவிடுவர்
" எண்ணிலா நோயுடையார் –இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் – பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார் " என்ற அடிகள் எந்தக் கவிதையில் இடம்பெற்றவை
வெறுங்கை என்பது மூடத்தனம்
பத்திரிகை
தமிழரின் தற்கால நிலைமை
வாழ்ந்து காட்டுவோம்
கீழ்க்காணும் கவிதை அடியில் விடுபட்ட சொல்லை நிரப்புக
பண்பிழந்து பாவையரை
_______________ ஆணுலகில்
பெண்மையினைத் தெய்வமென்று
பேசவந்த பித்தனடா!
போய்த்தழுவும்
பதராக்கும்
நிகழ்த்துகின்ற
வலியுறுத்தும்
“மந்திர வாதியென்பார் – சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்” இவ்வடியில் கிலிப்பிடிப்பார் என்ற சொல்லின் பொருள் யாது?
பயப்படுவார்
ஒடிவிடுவார்
துன்பப்படுவார்
துவண்டுவிடுவார்
கவிதையில் “சொல் நயம்” என்பது யாவை?
தாக்கம், படிப்பினை, பாதிப்பு
கருத்து, புதைப் பொருள், தெரிப்பொருள்
இயைபு,எதுகை, மோனை
பாடுபொருள், மையக்கரு, கவிஞர்
கீழ்க்காண்பவற்றில் எது கவிதை ஏற்படுத்திய தாக்கம்/பாதிப்பு எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய கூறு அல்ல?
கருத்து
சிறப்பு
உணர்வு
தீர்வு
