wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இரட்டைக்கிளவி வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.


தான் மனனம் செய்த திருக்குறளை முகிலன் ஒப்புவித்தான். ஆனால், மனனம் செய்யத் தவறிய இளங்கோ ஆசிரியர் முன் நடுங்கினான்.

a)

கிடுகிடுவென, கடகடவென

b)

கடகடவென, கிடுகிடுவென

c)

கடகடவென, வெடவெடவென

d)

விறுவிறுவென, வெடவெடவென

2.

இரட்டைக்கிளவி வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.


பேரங்காடியில் தீப்பற்றிக் கொண்டதால் அங்கிருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறினர்.

a)

விறுவிறுவென

b)

திமுதிமுவென

c)

கிடுகிடுவென

d)

பரபரவென

3.

இரட்டைக்கிளவி வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.


கீழ்க்காணும் இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க:

பரபர

a)

அவசர அவசரமாகச் செய்தல்

b)

எப்போதும் துடிப்பாகச் செயல்படுதல்

c)

விரைவாகச் செய்தல்

d)

விரைவாக

4.

பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான இணைமொழி எது?


உங்கு உசேன் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் நடைபெறும் முத்தமிழ் விழா நடைபெற மிகச் சிறப்பாகச் செயலாற்றினர்.

a)

தங்கு தடையின்றி

b)

உயர்வு தாழ்வின்றி

c)

ஈடு இணையின்றி

d)

ஊண் உறக்கமின்றி

5.

கொடுக்கப்பட்டுள்ள சூழலில் கோடிப்பட்டுள்ள சொற்றொடருக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


எஸ்.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கம் பாகுபாடு காட்டாமல் உபகாரச் சம்பளம் வழங்கியது.

a)

கள்ளங்கபடு

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

d)

சட்ட திட்டம்

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சூழலுக்கு ஏற்ற சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

வீட்டுக்கு வந்த விருந்தினர்களை அமுதா வரவேற்று உபசரித்தாள். (அகமும் புறமும்)

b)

திரு. கணபதிக்கு நோய் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றார். (வாடி வதங்கி)

c)

பிள்ளைகள் சிறப்பாக வாழ, பெற்றோர்கள் உணவு உறக்கமின்றிப் பாடுபடுகின்றனர். (ஏழை எளியவர்)

d)

தன் மனைவி சிறிதளவும் பணிவு இல்லாமல் நடந்துகொள்வதால், அரவிந்தன் கோபம் கொண்டான். (ஈடு இணை)

7.

உவமைத்தொடர் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.


இராமன் வனவாசம் சென்றபோது அவனோடு சேர்ந்து சீதையும் காட்டுக்குச் சென்றாள்.

a)

இலைமறை காய் போல

b)

தாயைக் கண்ட சேயைப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

மலரும் மணமும் போல

8.

பின்வரும் உரையாடலுக்கு ஏற்ற உவமைத்தொடர் எது?


அப்பா: குமார், இனியும் இப்படி இருக்காதே! விளையாடுகிற நேரத்தில் விளையாடு, படம் பார்க்கிற நேரத்தில் படம் பார். ஆனால், தேர்வை மறந்துவிடாதே! திட்டமிட்டுக் கருத்தாய்ப் படி. அப்போதுதான் நீ எதிர்பார்த்தது நடக்கும்.


குமார்: நிச்சயமாக அப்பா.

a)

இலவு காத்த போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

பசுமரத்தாணி போல

9.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு மிகப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டியது இராணுவத்தினரின் கடமையாகும்.


ஆனால், அவர்களே அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுவது வேதனைக்குரியது.

a)

இலைமறை காய் போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

10.

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு ஏற்ற விளக்கத்தினைக் கொண்டுள்ள சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

வாழையடி வாழை - பெரியவர் முதல் சிறியவர் வரை

b)

வெட்டிப் பேச்சு - ஏசப்படுதல்

c)

கானல் நீர் - நிறைவேறாத எண்ணம்

d)

இடித்துரைத்தல் - திட்டப்படுதல்

11.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருந்தும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


‘கோவிட் 19’ நோய்ப் பேரிடரைக் களைய மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கி வருகிறது.

a)

உச்சி குளிர்தல்

b)

தோள் கொடுத்தல்

c)

தலை வணங்குதல்

d)

கானல் நீர்

12.

உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


இளமாறன்: அரவிந்தா, நீ இனிமேலும் தொடர்ந்து கள்ள மோட்டார் பந்தயத்தில் பங்கெடுத்து வந்தால் நானே போலிசாரிடம் உன்னைப் பற்றிச் சொல்லிவிடுவேன்.


அரவிந்தன்: நான் வெற்றிபெறுவது உறுதி. என்னுடன் யார் போட்டியிட முடியும்?


இளமாறன்: வெற்றி முக்கியமன்று! சட்ட விதிமுறைகளை நீ மீறி வருகிறாய். உனக்கே ஆபத்து வரும்.

a)

உடும்புப் பிடி

b)

ஈயாடவில்லை

c)

ஏட்டிக்குப் போட்டி

d)

இடித்துரைத்தல்

13.

பின்வரும் வரலாற்றுச் செய்திக்குப் பொருந்தும் பழமொழி யாது?


ஒரு சாதாரணத் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் தாமே பாடுபட்டுப் படித்து முன்னேறி அமெரிக்காவின் ஈடு இணையற்ற அதிபரானார்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

14.

பின்வரும் விளக்கத்திற்கு மிகப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

d)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

15.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


முதலீட்டுத் திட்டங்களை நன்கு அறிந்திராத திரு. பேரமுதன் தம் நண்பரின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்து நட்டப்பட்டார்.

a)

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது

b)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

16.

கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

a)

பேராசை

b)

கர்வம்

c)

கடுஞ்சொல்

d)

பொறாமை

17.

கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே _____________________ .

a)

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

b)

வாய்ச் சொல்ஒழுக்க முடையார்

c)

வாய்ச் சொல்உடையார் ஒழுக்கம்

d)

ஒழுக்கம் வாய்ச்சொல் உடையார்

18.

கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


இனிமையாகப் பேசக்கூடிய ஆற்றல் உடைய ஒருவர் இடுகின்ற வேலையைப் பிறர் உடனே செய்து முடித்திடுவர்.

a)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை

b)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்

c)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

d)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று

19.

கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்டுள்ள வரியின் பொருளைத் தெரிவு செய்க.


எப்பிறப் பாயினும் ஏமாப்பொருவதற்கு

மக்கட் பிறப்பில் பிறிதில்லை-அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்

a)

எப்பிறவியில் பிறந்தவராக இருந்தாலும்

b)

ஏழையாகவும் பொளில்லாதவராகவும்

c)

எந்தப் பிறவியில் நாம் பொருள் தேடினாலும்

d)

மற்ற எந்தப் பிறப்புகளையும் விடவும்

20.

பின்வரும் நாலடியார் செய்யுளை நிறைவு செய்க.


பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

___________________________________

தானே சிறியார் தொடர்பு.

a)

வானூர் வைகலும் மதியம்போல் தேயுமே

b)

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

c)

வைகலும் வானூர் மதியம்போல் தேயுமே

d)

மதியம்போல் வானூர் வைகலும் தேயுமே