wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - பாடம் 7 & 8

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான விடையை தேர்வு செய்யவும்

1. முன்னுரிமைப் பங்கு என்பது

(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப்

பெற்ற பங்கு

(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

a)

(i) மட்டும் சரியானது

b)

(ii) மட்டும் சரியானது

c)

(i) மற்றும் (ii) சரியானது

d)

(i) மற்றும் (ii) தவறானவை

2.

நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு

அழைக்கப்படும்

a)

அங்கீகரிக்கப்பட்ட முதல்

b)

அழைக்கப்பட்ட முதல்

c)

முதலினக் காப்பு

d)

காப்பு முதல்

3.

ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

a)

முகமதிப்பு

b)

பெயரளவு மதிப்பு

c)

செலுத்தப்பட்ட தொகை

d)

அழைக்கப்பட்ட தொகை

4.

ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு

மாற்றப்படுவது

a)

பொதுக்காப்பு கணக்கிற்கு

b)

முதலினக் காப்பு கணக்கிற்கு

c)

பத்திர முனைமக் கணக்கிற்கு

d)

உபரி கணக்கிற்கு

5.

முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

a)

பத்திர முனைமக் கணக்கு

b)

அழைப்பு முன்பணக் கணக்கு

c)

பங்குமுதல் கணக்கு

d)

பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

6.

பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

a)

வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக

இருக்கக் கூடாது

b)

பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய

பங்குமுதலை விட குறைவாக இருக்கும்.

c)

காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

d)

செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்.

7.

சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு

a)

விற்பனையாளர் க/கு

b)

பற்பல சொத்துகள் க/கு

c)

பங்குமுதல் க/கு

d)

வங்கி க/கு

8.

பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்கவும்

(A) குறை ஒப்பம் - (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம்

(B) மிகை ஒப்பம் - (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது

(C) அழைப்பு நிலுவை - (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது

(D) அழைப்பு முன்பணம் - (iv) செலுத்தப்பெறாத அழைப்பு பணம்

a)

(i) (ii) (iii) (iv)

b)

(iv) (iii) (ii) (i)

c)

(iii) (ii) (iv) (i)

d)

(iii) (iv) (i) (ii)

9.

8 செலுத்தப்பட்ட, 10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

a)

பங்கொன்று 10

b)

பங்கொன்று 8

c)

பங்கொன்று 5

d)

பங்கொன்று 2

10.

சுப்ரீம் நிறுமம் பங்கொன்று 10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை 2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று 9 வீதம் மறுவெளியீடு

செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை

a)

700

b)

800

c)

900

d)

1,000

11.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?

a)

குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.

b)

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.

c)

போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.

d)

பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின்

தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படையின் சதவிகிதமதாக

காட்டப்படுகின்றன.

12.

இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய தகவல்களை வழங்குகிறது.

a)

ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

b)

ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

c)

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

d)

குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

13.

நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான

விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

a)

ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

b)

பொது அளவு அறிக்கை

c)

ஒப்பீட்டு அறிக்கை

d)

போக்கு ஆய்வு

14.

நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது

a)

பணம்சாரா தகவல்கள்

b)

கடந்தகால தகவல்கள்

c)

குறுகிய கால தகவல்கள்

d)

நீண்டகால தகவல்கள்

15.

பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

a)

போக்குப் பகுப்பாய்வு

b)

பொது அளவு அறிக்கை

c)

ஒப்பீட்டு அறிக்கை

d)

நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

16.

நிதி என்னும் சொல் குறிப்பிடுவது

a)

நடப்புப் பொறுப்புகள்

b)

நடைமுறை முதல்

c)

நிலைச் சொத்துகள்

d)

நீண்டகாலச் சொத்துகள்

17.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?

a)

நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்

b)

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.

c)

நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை.

d)

ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.

18.

ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ 1,25,000 லிருந்து 1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

a)

+ 20 %

b)

+ 120 %

c)

– 120 %

d)

– 20 %

19.

ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில்,

நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

a)

175

b)

125

c)

25

d)

100

20.

ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் 80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள்

88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

a)

10 %

b)

110 %

c)

90 %

d)

11%