wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

மகாகவி

d)

விவேகானந்தர்

2.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் _________________________

சான்றோன் எனக்கேட்ட தாய்

a)

தன்மகனைச்

b)

தன்மகளைச்

c)

அவன்

d)

நற்பண்பு

3.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

___________________________________________

a)

மிகைநாடி மிக கொளல்

b)

மிகவும் மிக்க கொளல்

c)

மிக மிக கொளல்

d)

மிகைநாடி மிக்க கொளல்

4.

_____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

a)

அழுக்காறு வெகுளி இன்னாச்சொல் நான்கும்

b)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் மூன்றும்

c)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

d)

அழுக்காறு அவாவெகுளி நான்கும்

5.

______ , _____ , _______ , __________ ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

a)

பொறாமை, பேராசை, கோபம், மகிழ்ச்சி

b)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

c)

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல்

d)

வருத்தம், பேராசை, கோபம், கடுஞ்சொல்

6.

"ஈன்ற பொழுதிற்" என தொடங்கும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க

a)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் குறைவாக மகிழ்ச்சி அடைவாள்

b)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய் மகிழ்ச்சி அடைவாள்

c)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

d)

ஒரு தாய் மகனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

7.

ஒருவனுடைய __________ ஆராய்ந்து, பிறகு ______________ ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்

a)

நன்மை , தீமை

b)

குணங்களை , குற்றங்களையும்

c)

நல்லது , கெட்டது

d)

நற்பண்பு, நல்ல குணம்

8.

"ஈன்ற பொழுதிற்" எனும் சொற்றொடரின் பொருளைத் தெரிவு செய்க.

a)

பெற்ற பொழுதினும்

b)

மகனை

c)

இறந்த காலத்தில்

d)

கர்ப காலத்தில்

9.

"உவக்கும்" எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

கவலை

b)

மகிழும்

c)

பெருமிதம்

d)

பொறாமை

10.

"இன்னாச்சொல்" எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

சினம்

b)

தீயமொழி

c)

பேராசை

d)

பொறாமை

11.

"இழுக்கா" எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

விளக்குதல்

b)

இழுப்பது

c)

இழுத்தல்

d)

இழுக்கி அதாவது விலக்கி

12.

"குணம்நாடி" எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

குணங்களைக் குறிக்கொண்டு

b)

குற்றங்களை

c)

குற்றங்களையும் தேடி அறிந்து

d)

குணங்களை

13.

"நாடி" எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

நாடுதல்

b)

ஆராய்ந்து

c)

மிகுதி

d)

மிக்கவை

14.

மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் _____________________ அடைவாள்

a)

பெருமகிழ்ச்சி

b)

பெருமிதம்

c)

மகிழ்ச்சி

d)

சந்தோசம்

15.

மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்த்தூக்கின்

______________________________________________________

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு

a)

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

b)

மன்னனிற் கற்றோன் தகுதியுடையன் - மன்னற்குத்

c)

மன்னனிற் படிப்போர் சிறப்புடையன் - மன்னற்குத்

d)

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

16.

மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்த்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

____________________________________________________

a)

சென்றவிட மெல்லாம் சிறப்பு

b)

சென்ற இடம் எல்லாம் சிறப்பு

c)

சென்றவிட மெல்லாம் நன்று

d)

சென்றது மெல்லாம் சிறப்பு

17.

"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்த்தூக்கின்" எனத் தொடங்கும் செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க

a)

ஒரு நாட்டின் மன்னைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிட்டும். ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெறுவர்.

b)

ஒரு நாட்டின் கற்றறிந்தவனைவிட மன்னனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிட்டும். ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெறுவர்

c)

ஒரு நாட்டின் மன்னைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் சிறப்பு கிட்டும்.

d)

மன்னைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிட்டும். ஆனால், கற்றறிந்தவர்கள் ஒரு இடத்தில் மட்டுமே சிறப்பு பெறுவர்

18.

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

_________________________________________________

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

b)

உறவு கோல்நட்டு உணர்வு கயிறு

c)

உறவு கோல் உணர்வு கயிற்றினால்

d)

உறவு கோல்நட்டு உணர்ச்சி கயிற்றினால்

19.

___________________________________________________

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

b)

விறகில் தீயினன் பாலில் படுநெய்

c)

விறகில் தீ பாலில் படுநெய்போல்

d)

விறகில் தீயினன் பால் படுநெய்போல்

20.

"விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்" எனத் தொடங்கும் செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க

a)

விறகில் தீயும், பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல மிகப்பெரிய மாணிக்கத்தைப் போன்ற பேரொளியாகிய இறைவன் அங்கும் எதிலும் மறைந்துள்ளான். அவன்பால் உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால், பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.

b)

இறைவன்பால் உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால், பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.

c)

விறகில் தீயும், பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல மிகப்பெரிய மாணிக்கத்தைப் போன்ற பேரொளியாகிய இறைவன் அங்கும் எதிலும் மறைந்துள்ளான்.

d)

இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டும்

21.

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்த்தூக்கின்" எனும் மூதுரையை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

திருநாவுக்கரசர்

c)

திருஞானசம்பந்தர்

d)

திருவள்ளுவர்

22.

"விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்" எனும் திருமுறையை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

திருநாவுக்கரசர்

c)

திருஞானசம்பந்தர்

d)

திருவள்ளுவர்