NEW
Font size
Worksheets10 இயக்க விதிகள் & அணு
Total questions: 22
Worksheet time: 11mins
கிழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
பொருளின் எடை.
பொருளின் நிறை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
அ மற்றும் ஆ
ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் -----
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
கிழ்கண்டவற்றுள் நீயூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது ?
ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
ஒரு கிலோகிராம் எடை என்பது எதற்கு சமம்?
9.8 டைன்
98x104டைன்
980டைன்
9.8x104 டைன்
உந்த மதிப்பை xஅச்சிலும் காலத்தினை y அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம்வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு ------
கணத்தாக்கு
விசை
முடுக்கம்
விசை மாற்றவீதம்
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
4M
2M
M/4
M
ஒரு மோல் நைட்ரஜன் அணுவின் நிறை ----
28 amu
14 amu
28கி
14கி
கிழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
குளுக்கோஸ்
ஹிலியம்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
கிழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
6.023X1023 ஹிலியம் அணுக்கள்
1 ஹிலியம் அணு
2 கி ஹிலியம்
மோல் ஹிலியம் அணு
1 amu என்பது ----
1. C-12 ன் அணு நிறை
ஹைட்ரஜனின் அணு நிறை
ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
O-16 ன் அணு நிறை
20ca40 தனிம உட்கருவில் -----
20 புரோட்டான் 40 நியூட்ரான்
20 புரோட்டான் 20 நியூட்ரான்
20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை ----
16கி
18கி
32கி
17கி
இரு வேறு தனிமங்களின் அணுக்கள்------ நிறை எண்ணையும் ------அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்
ஒத்த, வேறுபட்ட
வேறுபட்ட,ஒத்த
மாறுபட்ட,சம
இவை அனைத்தும்
ஒரே ----எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசடோன்கள் எனப்படும்
எலெக்ட்ரான்களின்
நியூட்ரான்களின்
புரோட்டான்களின்
நியூரான்களின்
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக -----முறையில் மாற்றலாம்
செயற்கை மாற்று சேர்மமாக்கல்
செயற்கை மாற்று கலவையாக்கல்
செயற்கை மாற்று தனிமமாக்கல்
இயற்கை மாற்று தனிமமாக்கல்
புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் -----எனப்படும்
அணு எண்
பரும எண்
பின்ன எண்
நிறை எண்
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை----எனப்படும்
ஒத்த அணு மூலக்கூறு
மாறுபட்ட அணு மூலக்கூறு
வேறுபட்ட அணு மூலக்கூறு
இவை அனைத்தும்
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் -----ஆகும்
நிறைக்கட்டு எண்
மூலக்கூறு கட்டு எண்
அணுக்கட்டு எண்
இவை அனைத்தும்
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண்----
3
2
4
1
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ----தேவை
நிறை
எடை
விசை
வேகம்
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால் ,பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு----மூலம் விளக்கப்படுகிறது
இயக்கத்திற்கான நிலைமம்
ஓய்விற்கான நிலைமம்
இயக்க ஓய்விற்கான நிலைமம்
ஏதுவுமில்லை
100 கி,கி நிறையுள்ள மனிதனின் எடை புவிப்பரப்பில்
-------அளவாக இருக்கும்
98N
9.8N
980N
9800N
