Worksheets+1 வணிகவியல் ஒரு மதிப்பெண் வினாடி வினா L 1 - L 3
Total questions: 14
Worksheet time: 7mins
1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ................... என்று பெயர்.
(அ) அங்காடி
(ஆ) சந்தை
(இ) நாளங்காடி
(ஈ) அல்லாங்காடி
2. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகின்றது.
(அ) போக்குவரத்து
(ஆ) பண்டகசாலை
(இ) விற்பனையாளர்
(ஈ) காப்பீடு
3. அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
(அ) கௌடில்யர்
(ஆ) சாணக்கியர்
(இ) திருவள்ளுவர்
(ஈ) இளங்கோவடிகள்
4. வியாபாரம் மற்றும் வணிகம் .............. பேரரசில் பொதுவானவையாக இருந்தது.
(அ) பல்லவர்
(ஆ) சோழர்
(இ) பாண்டியர்
(ஈ) சேரர்
5. ............. முதன் முதலில் சுல்தனாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்.
(அ) பால்பன்
(ஆ) வாஸ்கோடகாமா
(இ) அக்பர்
(ஈ) அலாவுதின் கில்ஜி
6. தொழிலின் முதன்மைக் குறிக்கோள்....................
(அ) இலாபம் ஈட்டுதல்
(ஆ) இலாபம் ஈட்டாமல் இருத்தல்
(இ) சிறப்புத் தேர்ச்சி
(ஈ) மேற்கூறிய ஏதுவுமில்ல
7. மருத்துவர் தொழில் என்பது
(அ) வேலைவாய்ப்பு
(ஆ) தொழில்
(இ) சிறப்புத் தொழில்
(ஈ) தனியார் வணிகம்
8. பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
(அ) பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
(ஆ) இடர் ஏற்றல்
(இ) பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் (அ) விற்பனை
(ஈ) சம்பளம் (அ) கூலி
9. அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள்
(அ) பொருளாதாரச் செயல்பாடுகள்
(ஆ) பண நடவடிக்கைகள்
(இ) பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள்
(ஈ) நிதி நடவடிக்கைகள்
10. இரும்பிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது.
(அ) கட்டுமானத் தொழில்கள்
(ஆ) தயாரிப்புத் தொழில்கள்
(இ) பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
(ஈ) மரபுசார் உற்பத்தித் தொழில்கள்.
11. வியாபாரத்திற்கு உறுதுணைபுரிபவை என்பது.
(அ) வியாபாரம்
(ஆ) விளம்பரம்
(இ) பண்டகசாலை
(ஈ) கட்டுமானம்
12. ஒரு முழுப் பொருள் தயாரிக்கப் பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது
(அ) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்
(ஆ) செயற்கை பொருள் உற்பத்தி தொழில்
(இ) தொடர் முறை உற்பத்தித் தொழில்
ஈ) ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்
13. அதிக அளவு அபாயத்தைக் கொண்டது.
(அ) உற்பத்தித் தொழில்
(ஆ) வணிகம்
(இ) வியாபாரம்
(ஈ) இவை அனைத்தும்.
14. வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது?
அ) பொருட்களை அளித்தல்
(ஆ) பொருட்கள் விலையிடல்
(இ) பொருட்களைக் கொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
(ஈ) பொருட்களை தயாரித்தல்
