NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
சீருடற்பயிற்சி என்பது வலிமை, ................. , ஒருங்கியக்கம் ஆகியவை இணைந்த சீரான உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது.
சுறுசுறுப்பு
வேகம்
நிலைத்தன்மை
வளைவுத்தன்மை
கீழே கொடுக்கப்பட்ட திறன்கள் தொடர் இயக்கப் பயிற்சிகள் ஆகும். ஒன்றைத்தவிர..
இடப்பெயர்ச்சி
நடைப்பயிற்சி
சமனித்தல்
சுழற்சி
கீழே கொடுக்கப்பட்ட நடனங்களில் எது தமிழர்களின் பாரம்பரிய நடனம் அல்ல.
கரகாட்டம்
பொய்க்கால் குதிரை
மயிலாட்டம்
ஜோகெட் நடனம்
ஆண்கள் குழுவாகக் கைக்குட்டை வைத்துச் சுழற்றி தங்கள் ஆண்மை வெளிப்படும் வண்ணம் ஆடும் ஆட்டம். கோயில் விழாக்களிலும் கத்தோலிக்க, கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட நடனம் .................. ஆகும்.
கோலாட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
கும்மியாட்டம்
கீழே உள்ளவை நம் நாட்டில் ஆடப்படும் கிராமிய நடனங்கள் ஆகும். ஒன்றைத் தவிர.
போர்த்துகீசிய நடனம்
சிங்க நடனம்
சுமாசாவ் நடனம்
சாப்பின் நடனம்
அடிப்படை விளையாட்டு திறன்களில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட, கல்வியமைச்சு TGFU என்ற புதிய பயிற்றுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. TGFU என்றால் என்ன?
Teaching Games For Unemployed
Teaching Games For Unfit
Teaching Games For Understanding
Teaching Games For Umpires
அடிப்படை விளையாட்டுத் திறன்கள் மூவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை..
திடல்சார், வலைசார், தாக்குதல்சார்
திடல்சார், தாக்குதல்சார், நிலம்சார்
தாக்குதல்சார், நிலம்சார், தற்காப்புசார்
தடுப்புசார், வலைசார், திடல்சார்
கீழே உள்ளவற்றுள் எது தாக்குதல்சார் விளையாட்டு?
முடைப்பந்து
பூப்பந்து
கூடைப்பந்து
மென்பந்து
கீழே உள்ளவற்றுள் எது திடல்சார் விளையாட்டு?
சரமாரி ( voli )
மென்பந்து
முடைப்பந்து
கைப்பந்து
கீழே உள்ளவற்றுள் எது வலைசார் விளையாட்டு அல்ல.
டென்னிஸ்
சரமாரி ( voli )
பூப்பந்து
ரஃபி
