NEW
Font size
Worksheetsஇயல்-5 செய்யுள்,உரைநடை, இலக்கணம், துணைப்பாடம்
Total questions: 25
Worksheet time: 13mins
1. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
அ) பெருஞ் + செல்வம்
ஆ) பெரும் + செல்வம்
இ) பெருமை + செல்வம்
ஈ) பெரு + செல்வம்
2. பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. __________
அ) பண் + புடைமை
ஆ) பண்பு + புடைமை
இ) பண்பு + உடைமை
ஈ) பண் + உடைமை
3. இவ்விரண்டும் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........................................
அ) இவ்+இரண்டும்
ஆ) இ+ இரண்டும்
இ) இவ்+ விரண்டும்
ஈ) இ+ விரண்டும்
4. மக்கட்பண்பு- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........................................
அ) மக்கட்+பண்பு
ஆ) மக்க+பண்பு
இ) மக்கள்+பண்பு
ஈ) மக்கப்+ பண்பு
5. தன் + காப்பு –இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .....................................
அ) தன்காப்பு
ஆ) தண்காப்பு
இ) தனிகாப்பு
ஈ) தற்காப்பு
6. அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________
அ) அதுஇன்றேல்
ஆ) அதுயின்றேல்
இ) அதுவின்றேல்
ஈ) அதுவன்றேல்
7. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் ...................................................
அ) உயர்ந்த
ஆ) பொலிந்த
இ) அணிந்த
ஈ) அயர்ந்த
8. நேர்மை என்னும் பொருள் தரும் சொல் __________
அ) நயன்
ஆ) நன்றி
இ) பயன்
ஈ) பண்பு
9. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ...................................................
அ) சிலம்பம்
ஆ) மற்போர்
இ) மட்டைப்பந்து
ஈ) நீர் விளையாட்டு
10. ‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ...................................................
அ) மற்போர்
ஆ) ஏறுதழுவுதல்
இ) சிலம்பாட்டம்
ஈ) வில்வித்தை
11. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ...................................................
அ) சிலம்பாட்டம்
ஆ) வில்வித்தை
இ) ஏறுதழுவுதல்
ஈ) வழுக்கு மரம் ஏறுதல்
12. இன்பம் எதிர்ச்சொல் தருக.
மகிழ்ச்சி
ஆனந்தம்
துன்பம்
களிப்பு
13. இயற்கை எதிர்ச்சொல் தருக
வனப்பு
பசுமை
இளமை
செயற்கை
14. இன்சொல் எதிர்ச்சொல் தருக
இனியச்சொல்
மதுரச்சொல்
வன்சொல்
இனிமைச்சொல்
15. போற்றும் எதிர்ச்சொல் தருக
தூற்றும்
நாற்றும்
மாற்றும்
சாற்றும்
16. முதலாம் இராசேந்திர சோழன், வடநாட்டிலிருந்து எந்த நீரைக் கொண்டு வந்தான்.....
அ) கங்கை நீர்
ஆ) காவிரி நீர்
இ) நர்மதை நீர்
ஈ) தபதி நீர்
17. சோழ கங்கத்தின் இன்றைய பெயர் என்ன?
அ)செம்பரம் பாக்கம் ஏரி
ஆ)பொன்னேரி
இ)முக்கனேரி
ஈ )மதுராந்தக ஏரி
18. இராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?
அ )ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில்
ஆ )தஞ்சைப் பெரிய கோவில்
இ ) மாமல்லபுரம் குடவரைக் கோவில்
ஈ )மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
19. சிங்க வடிவத்தில் இருக்கும் சிற்பத்தின் பெயர்......
அ )வட்ட வடிவடிவக் கிணறு
ஆ )முக்கோண வடிவக் கிணறு
இ )சதுர வடிவக் கிணறு
ஈ )சிங்க முகக்கிணறு
20. கலையழகும் புதுப்பொலிவும் கொண்ட சிற்பக் கூடம் எங்கு அமைந்துள்ளது.......
அ )திருச்சி
ஆ )தருமபுரி
இ )கங்கைகொண்ட சோழபுரம்
ஈ )சேலம்
21. அதனால் என்பது.......
அ )பெயர்ச்சொல்
ஆ )வினைசொல்
இ )உரிச்சொல்
ஈ )இணைப்புச் சொல்
22. கருமேகங்கள் வானில் திரண்டன....... மழை பெய்யவில்லை இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச் சொல்
அ )எனவே
ஆ )ஆகையால்
இ )ஏனெனில்
ஈ )ஆயினும்
23. வள்ளி எழுதி முடித்து விட்டாள்......... எழிலி எழுத வில்லை
அ )பிற
ஆ)மற்றும்
இ)அப்படியானால்
ஈ )ஆனால்
24. கமல் நன்கு படித்தான்......... தேர்வில் வெற்றி பெற்றான்.
அ) அதனால்
ஆ)எவ்வாறெனில்
இ)அப்படியானால்
ஈ)பிற
25. ராமன் தமிழ்....... ஆங்கிலம் நன்றாகப் பேசுவார்.
அ)மற்றும்
ஆ)அதனால்
இ)எனவே
ஈ)எனில்
