wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம் - அடைமொழி P5/

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நான் சூரியன் கிழக்கில் உதிக்கும் காட்சியைப் புகைப்படம் ______________ விரும்பினேன்.

a)

பிடிக்க

b)

எடுக்க

c)

காட்ட

d)

பார்க்க

2.

வாகனங்கள் தடையின்றிச் சாலையில் நீண்ட தூரம் பயணம் செல்ல __________________ ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

a)

ஆழமான

b)

நீளமான

c)

அகலமான

d)

உயரமான

3.

சிலர் காப்பி, தேநீர் போன்ற பானங்களில் ________________ சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.

a)

சேர்க்க

b)

சேர்த்து

c)

சேர்க்கிற

d)

சேர்க்கும்

4.

இயக்குனர் கதையை __________________ கூறியதால் கதாநாயகன் கதையை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

a)

சத்தமாக

b)

விரைவாக

c)

சுவாரசியமாக

d)

தெளிவாக

5.

குடியானவன் தன் தோட்டத்தில் ___________________ திராட்சைப் பழங்களை மன்னனுக்கு வழங்க அரசவைக்கு வந்தான்.

a)

விளைந்த

b)

விளைகின்ற

c)

விளையும்

d)

விளைந்து

6.

மோகன் தன் வீட்டு வாசலின் முன் செடிகளை _________________ திட்டமிட்டான்.

a)

வளர

b)

வளர்ந்த

c)

வளர்க்க

d)

வளர்ந்து

7.

பல நாள் கழித்து _______________ தோழனை மாறன் இன்முகத்துடன் கட்டி அணைத்தான்.

a)

பார்த்து

b)

பார்க்கிற

c)

பார்த்த

d)

பார்க்க

8.

மரத்தில் ஏறிய சிறுவன், ________________ பழங்களைச் சுறுசுறுப்பாகப் பறித்துப் போட்டான்.

a)

பழுத்த

b)

சிவந்த

c)

காய்த்த

d)

இனித்த

9.

திருடன் _______________ கத்தியை இடுப்பில் மறைத்து வைத்தான்

a)

கூர்மை

b)

கூர்மையாக

c)

கூர்மையாய்

d)

கூர்மையான

10.

ரகு கடிதத்தை ________________ உறையில் வைத்தான்.

a)

கிழித்து

b)

மடித்து

c)

மடக்கி

d)

கசக்கி

11.

நீச்சலில் சாதித்த விளையாட்டு வீரரைப் பற்றி ______________ பேசப்பட்டது.

a)

பரவலாக

b)

துரிதமாக

c)

பலமாக

d)

தீவிரமாக

12.

சிறுவர்களின் கூச்சல் சத்தம் மாமாவின் ______________ சிந்தனையைக் கலைத்தது.

a)

பரந்த

b)

உயர்ந்த

c)

ஆழ்ந்த

d)

நிறைந்த

13.

தவறு செய்த ராமு தன் பழியை என் மீது ________________பார்க்கிறான்

a)

சுமத்த

b)

சுமக்க

c)

சுமத்தி

d)

சுமந்து

14.

அம்மா தன் மகளுக்கு ___________________ பலகாரத்தைச் செய்தார்.

a)

விருப்பமாக

b)

விரும்புகிற

c)

விருப்பமான

d)

விரும்பிய

15.

பனி ___________________ நேரத்தில் திறந்த வெளியைக் காண மனத்திற்கு இதமாக இருந்தது.

a)

சூழ்ந்து

b)

சூழ்ந்த

c)

சூழும்

d)

சூழ்கிற

16.

தனது பணப்பையை __________________ திருமதி ராணி காவலரிடம் புகார் செய்தார்.

a)

இழந்த

b)

இழப்பு

c)

இழந்து

d)

இழக்கிற

17.

இயக்குனர் கதையை __________________ கூறியதால் கதாநாயகன் கதையை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

a)

சத்தமாக

b)

விரைவாக

c)

சுவாரசியமாக

d)

தெளிவாக

18.

திபெத்திய மக்கள் குழந்தைகளைத் துணியால் __________ முதுகில் சுமந்து செல்வார்கள்.

a)

கட்டிய

b)

கட்ட

c)

கட்டி

d)

கட்டும்

19.

பழைமையைப் பறைசாற்றும் _________________ ஈப்போ திகழ்கிறது.

a)

நகர

b)

நகரமாக

c)

நகரமான

d)

நகரமாகி

20.

தந்தை, தம் மகனின் ________________ கைவண்ணத்தைப் பார்த்துப் பூரித்தார்.

a)

நுட்பமாய்

b)

நுட்பமான

c)

நுட்பமாக

d)

நுட்பமாகி