NEW
Font size
WorksheetsGRADE - 10 இயல் - 1 BY Ms. NIRMALA DEVI . J
Total questions: 40
Worksheet time: 20mins
அன்னை மொழியே பாடலின் ஆசிரியர்
நாமக்கல் கவிஞர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
சந்தக்கவிமணி தமிழழகனார்
திரு.வி.கலியாண சுந்தரனார்
அன்னை மொழியே என்ற கவிதையில் குறிப்பிடப்படாத நூல் எது ?
திருக்குறள்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
தொல்காப்பியம்
பொருந்தாதவற்றைக் கண்டறிக
தமிழ்ச்சிட்டு
பள்ளிப் பறவைகள்
எண்சுவை எண்பது
உலகியல் நூறு
' முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ' - என்று பாடியவர்
பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
வாணிதாசன்
கண்ணதாசன்
மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே ! - எஞ்சியுள்ள பெருங்காப்பியம் எத்தனை ?
ஐந்து
மூன்று
இரண்டு
எட்டு
' முந்துற்றோம் யாண்டும் ' என்னும் தலைப்பு எடுத்தாளப்பட்ட தொகுப்பு
எண்சுவை எண்பது
உலகியல் நூறு
நூறாசிரியம்
கனிச்சாறு
உந்தி உணர்வெழுப்ப
உள்ளக் கனல் மூள - இவ்வடியில் காணும் நயம்
முரண்
மோனை
எதுகை
இயைபு
செந்தாமரை - இலக்கணக் குறிப்பு தருக
வினைத்தொகை
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
தென்மொழி , தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
துரை.மாணிக்கம்
திரு.வி.க
சாகும்போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் - என்று பாடியவர்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
ஆறுமுகநாவலர்
செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல்
அரும்பு
மலர்
போது
வீ
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர்
பாவாணர்
கால்டுவெல்
இளங்குமரனார்
திரு.வி.க
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
அல்லூர்
திருவள்ளுவர்
கல்லூர்
நெல்லூர்
பொருத்துக
1. கவை - அ) அடிமரத்திலிருந்து பிரியும் கிளை
2. கொம்பு - ஆ) கிளையின் பிரிவு
3. சினை - இ) கவையின் பிரிவு
4. போத்து - ஈ) சினையின் பிரிவு
1 - அ , 2 - இ , 3 - ஆ , 4 - ஈ
1 - ஈ , 2 - இ , 3 - அ , 4 - ஆ
1 - ஆ , 2 - அ , 3 - ஈ , 4 - இ
1 - இ , 2 - ஆ , 3 - அ , 4 - ஈ
பொருந்தாதவற்றைக் கண்டறிக
தூறு
கழை
கழி
கவை
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக
தோகை , ஓலை , சண்டு , சருகு
துளிர் , முறி , கொழுந்து , கொழுந்தாடை
பூம்பிஞ்சு , பிஞ்சு , வடு , கவ்வை
கருக்கல் , கச்சல் , கொத்து , குலை
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
திரு.வி.க
இளங்குமரனார்
மறைமலையடிகள்
பாரதியார்
நாடும் மொழியும் நமதிரு கண்கள் - எனப் பாடியவர்
பாரதிதாசன்
பாவாணர்
பெருஞ்சித்திரனார்
பாரதியார்
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
செம்மொழி மாநாட்டு மலர்
தமிழிலக்கிய வரலாறு மு.வ
பொருத்துக
1. சிவியல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு
2. அளியல் - பதராய்ப் போன மிளகாய்
3. சொண்டு - குளுகுளுத்த பழம்
4. வெம்பல் - சுருங்கிய பழம்
3 , 2 , 1 , 4
1 , 3 , 4 , 2
4 , 3 , 2 , 1
1 , 2 , 3 , 4
மெத்த வணிகலன் - பிரித்து எழுதுக
மெத்த + வணிகலன்
மெத்த + அணி + கலன்
மெத்த + அணிகலன்
மெத்த + வணி + கலன்
தமிழையும் , கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர்
ஒட்டக்கூத்தர்
சந்தக்கவிமணி
சொக்கநாதப்புலவர்
இரட்டைப் புலவர்கள்
ஒரு சொல்லோ , தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது
உருவகம்
உவமை
இணை ஒப்பு
இரட்டுற மொழிதல்
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார் ?
பன்னிரண்டு
பத்து
பதினான்கு
இருபது
இரட்டுற மொழிதலின் வேறு பெயர்
இரட்டைக் கிளவி
அடுக்குத் தொடர்
சிலேடை
வேற்றுமை
முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு
எட்டுத்தொகை
தனிப்பாடல் திரட்டு
கனிச்சாறு
சிற்றிலக்கியம்
முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
1983
1938
1893
1980
புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
க . அப்பாத்துரை
எழில் முதல்வன்
தண்டி
தொல்காப்பியர்
எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர் ?
இலக்கணை
சொல் முரண்
இணைவொப்பு
முரண்படு மெய்ம்மை
மா.இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாதெமி - பரிசை பெற்றுத் தந்த நூல்
இனிக்கும் நினைவிகள்
யாதுமாகி நின்றாய்
எங்கெங்கு காணினும்
புதிய உரைநடை
பொருத்துக
1. ஓஒதல் - அ) இன்னிசை அளபெடை
2. கெடுப்பதூஉம் - ஆ) செய்யுளிசை அளபெடை
3. உரனசைஇ - இ) ஒற்றளபெடை
4. எஃஃகிலங்கிய - ஈ) சொல்லிசை அளபெடை
1 - ஈ , 2 - இ , 3 - ஆ , 4 - அ
1 - ஆ , 2 - அ , 3 - ஈ , 4 - இ
1 - ஆ , 2 - இ , 3 - ஈ , 4 - அ
1 - இ , 2 - ஈ , 3 - அ , 4 - ஆ
பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க
தம்பீஇ
ஓஒதல்
உறாஅர்க்கு
படாஅபறை
அளபெடை என்னும் சொல்லின் பொருள்
நீண்டு ஒலித்தல்
இனிய ஓசை
குறுகி ஒலித்தல்
அளவாக ஒலித்தல்
இசைநிறை அளபெடையின் வேறு பெயர்
சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
ஒற்றளபெடை
விகுதி பெற்ற தொழிற்பெயருக்குச் சான்று
நடவாமை
வாழ்க்கை
நடத்தியவர்
இனிமை
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
தனிமொழி
பொதுமொழி
தொடர்மொழி
சொல்
' கெடு ' - முதனிலைத் திரிந்த தொழிற்பெயராக மாற்றுக
காடு
கொடு
கோடு
கேடு
அடவி - என்னும் சொல்லின் பொருள்
காடு
பள்ளம்
வயல்
முதுகு
சார்பெழுத்துகளின் வகைகள்
முப்பது
இருபது
மூன்று
இரண்டு
