wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் STUDY GROUP

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?

a)

நுரையீரல்

b)

சுவாசக் குழாய்

c)

இருதயம்

d)

மூக்கு

2.

மேற்கண்ட படத்தில் உள்ள எழுத்துகளைச் சுவாசத்தை வெளியேற்றுவதற்கு ஏற்ப நிரல்படுத்துக.

a)

Q -------> R -------> P

b)

P -------> R -------> Q

c)

Q -------> P -------> R

d)

P -------> Q -------> R

3.

---------------------- நாம் ஈடுபடும் நடவடிக்கையின் வேகத்தைப் பொருத்தே அமையும்.

a)

மலங்கழிவின் வீதம்

b)

தூங்குதலின் வீதம்

c)

சுவாசித்தலின் வீதம்

d)

நடவடிக்கையின் வீதம்

4.

மேற்கண்ட படம், மனிதனின் உடல் உறுப்பைக் காட்டுகிறது. இந்த உறுப்பு வெளியேற்றும் கழிவு யாது?

a)

கரி வளி + நீராவி

b)

சிறுநீர்

c)

வியர்வை

d)

மலம்

5.

மேற்கண்ட படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத் திறனைக் குறிப்பிடுக.

a)

அறிவியல் பொருள்களை முறையாகக் கையாளுதல்

b)

ஆராய்வு பொருள்களை முறையாக வரைந்து காட்டுதல்

c)

அறிவியல் கருவிகளை முறையாகப் பாதுகாத்தல்

d)

ஆராய்வு பொருள்களை முறையாகச் சுத்தம் செய்தல்

6.

இவற்றுள் எந்தச் செயற்பாங்கின் மூலம் மனிதனுக்கு உயிர்வளி கிடைக்கின்றது?

a)

தாவரங்களின் ஒளிச் சேர்க்கை

b)

கழிவுப் பொருள்களை அகற்றுதல்

c)

உணவு உண்ணுதல்

d)

வியர்வை அகற்றுதல்

7.

எலுமிச்சைச் சாறு பூஞ்சுத்தாளை _______________ நிறத்திற்கு மாற்றும்.

a)

நீல நிறத்திலிருந்து சிவப்பு

b)

சிவப்பு நிறத்திலிருந்து நீலம்

c)

வெள்ளை நிறத்திலிருந்து நீலம்

d)

சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை

8.

கீழ்க்காண்பவைகளில் எது காடித் தன்மையைக் கொண்டது?


i. அன்னாசிச் சாறு

ii. பற்பசை

iii. எலுமிச்சைச் சாறு

iv. வழலை

a)

i, iv

b)

i, iii

c)

ii

d)

i, ii, iii

9.

படம், பல்லின் ஒரு வகையைக் காட்டுகிறது. படத்தில் காணும் பல்லைப் பற்றிய சரியான கூற்றைக் தேர்ந்தெடுக.

a)

இறைச்சி போன்ற உணவுகளைக் கடித்துக் கிழிக்க உதவுகிறது.

b)

உணவை அரைத்து மென்று உண்ண உதவுகிறது.

c)

உணவைக் கடித்து சிறுசிறு துண்டுகளாக்க உதவுகிறது.

d)

பால் பற்களிலும் நிரந்தர பற்களிலும் இப்பல்லின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கும்.

10.

கீழ்க்காணும் விலங்குகளில் குட்டிப்போட்டு இனவிருத்தி செய்யும் விலங்குகளைத் தெரிவுச் செய்க.


i. கடலாமை

ii. முதலை

iii. எலி

iv. வெளவால்

a)

i, ii

b)

ii, iii

c)

iii, iv

d)

i, iv

11.

படம், ஒரு செம்பருத்தியைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது இத்தாவரத்தின் தன்மையைக் குறிக்கின்றது

a)

மென்தண்டு

b)

பூக்காது

c)

கிளைப்பின்னல் நரம்பு

d)

சல்லிவேர்

12.

படம், தாவரத்தின் அடிப்படைத் தேவைகளை ஆராய மேற்கொண்ட ஒரு பரிசோதனையைக் காட்டுகிறது.

ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சளாகக் காணப்பட்டன. இப்பரிசோதனையின் உற்றறிதலுக்கு ஏற்ற ஊகித்தலைத் தெரிவுச் செய்க.

a)

தாவரத்திற்குப் போதிய நீர் கிடைக்கவில்லை

b)

தாவரத்திற்குப் போதிய காற்று கிடைக்கவில்லை

c)

தாவரத்திற்குப் போதிய தாது சத்து கிடைக்கவில்லை

d)

தாவரத்திற்குப் போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை

13.

படம், ஒரு நிழல் கூத்தினைக் காட்டுகிறது. நிழல் எவ்வாறு உருவாகிறது?

a)

ஒளி, ஒளி புகும் பொருளினுள் ஊடுருவும் போது

b)

ஒளி, ஒளிப்புகா பொருளால் தடை படும் பொழுது

c)

ஒளி வழவழப்பான தரைமீது பட்டு பிரதிபலிக்கும் போது

d)

ஒளி நீருக்குள் ஊடுருவும்போது

14.

பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் நிழலை உருவாக்கும்?

a)

தெளிவான கண்ணாடி

b)

நெகிழிக் குவளை

c)

பாத்திரத்திலுள்ள நீர்

d)

ஆடிக் குவளை

15.

படம், நீருக்குள் போடப்பட்ட இரண்டு தேங்காய்களைக் காட்டுகிறது. இப்பரிசோதனையின் உற்றறிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.

a)

தேங்காய் கனமாக இருப்பதால் நீரில் மூழ்கி விட்டது.

b)

தேங்காய் மட்டையில் காற்றறை உள்ளதால் மிதக்கிறது.

c)

மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் இலேசாக உள்ளது.

d)

மட்டை உரிக்கப்படாத தேங்காய் வழவழப்பாக உள்ளது.

16.

நெல் பயிர் நீர் பாங்கான மண்ணில் செழித்து வளரும். நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்ட மண்ணே நெல்லைப் பயிரிட ஏற்றது.


மேற்காணும் கூற்றின் அடிப்படையில் நெல் பயிரிட ஏற்ற மண்ணைத் தெரிவுச் செய்க.

a)

மணல்

b)

தோட்ட மண்

c)

களி மண்

d)

செம்மண்

17.

தாவரங்கள் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய தூண்டலுக்குத் துலங்குகின்றன. ஒன்றைத் தவிர,

a)

சூரிய ஒளி

b)

தொடும் தூண்டல்

c)

காற்று

d)

நீர்

18.

படம், ஓர் சூழலைக் காட்டுகிறது. 2 நிமிடத்திற்குப் பிறகும் ஏன் அந்த கரப்பான்பூச்சி இறக்கவில்லை.

a)

கரப்பான் பூச்சி நீரில் சுவாசித்தது.

b)

கரப்பான்பூச்சிக்கு நீரில் மூழ்க முடியும்.

c)

கரப்பான்பூச்சியின் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்

d)

கரப்பான்பூச்சிக்கு சுவாசிக்கும் சக்தி அதிகம்

19.

கீழ்க்காணும் படம் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆராய்வின் வழி உற்றறியப்பட்டதைக் காட்டுகின்றது.


ஆராய்வின் முடிவு: ___________________

a)

தாவரத்தின் தளிர் ஒளிக்குத் துலங்குகிறது.

b)

தாவரத்தின் பூ ஒளிக்குத் துலங்குகிறது.

c)

தாவரத்தின் வேர் ஒளிக்குத் துலங்குகிறது.

d)

தாவரத்தின் நுனி ஒளிக்குத் துலங்குகிறது.

20.

கீழ்க்காணும் படம், ஒரு பரிசோதனை முடிவைக் காட்டுகிறது.

இரண்டு வாரத்திற்குப் பிறகு அத்தாவரத்திற்கு என்ன நேரிடும்?

a)

தாவரம் மிகவும் பெரியதாக இருக்கும்.

b)

தாவரம் உயிரோடிருக்கும்

c)

தாவரம் மஞ்சள் நிறத்திற்கு மாறி பிறகு இறந்து விடும்.

d)

தாவரம் செழிப்பாக இருக்கும்.

21.

படத்தில் காணும் தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?

a)

ஊற்றுக்கன்று

b)

வெட்டுத்துண்டு

c)

சிதல்விதை

d)

விதை

22.

தாவரங்கள் ஏன் இனவிருத்தி செய்கின்றன?

a)

தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய

b)

பூமியின் வெப்பத்தை அதிகரிக்க

c)

கரிவளி தருவதற்கு

d)

சுயமாக உணவு தயாரிக்க

23.

தாவரத்தின் எப்பகுதி புவி ஈர்ப்புச் சக்திக்குத் துலங்குகிறது?

a)

தளிர்

b)

தண்டு

c)

விதை

d)

வேர்

24.

அறிவியல் அறையில் கொண்டு செல்லக் கூடாதப் பொருளைத் தெரிவு செய்க.

a)

புத்தகம்

b)

கத்தரிக்கோல்

c)

பென்சில்

d)

உணவு

25.

அட்டவணையை ஒட்டி உன் உற்றறிதல் என்ன?

a)

செடி வளர்ந்துள்ளது

b)

வாரம் குறைந்துள்ளது

c)

செடியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது

d)

செடி உயரமாக உள்ளது

26.

படம் ஒரு பட்டைக் குறிவரைவைக் காட்டுகிறது.

நீரின் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றமைவைக் குறிப்பிடுக.

a)

குறைகிறது

b)

மாற்றமில்லை

c)

அதிகரித்துள்ளது

d)

குறைந்து அதிகரித்துள்ளது

27.

கீழ்காணும் படம் தாவரத்தின் எந்தப் பயன்பாட்டை விளக்குகின்றது?

a)

உறைவிடமாதல்

b)

நிழல் தருதல்

c)

உணவு தருதல்

d)

உயிர்வளி தருதல்

28.

சூடான தேநீரில் ஐஸ்க்கட்டிகளைப் போட்டால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.

a)

தேநீர் மேலும் சூடாகும்

b)

தேநீர் உறைந்து விடும்

c)

தேநீர் வெப்பத்தை விரைவாக இழக்கும்

d)

எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது

29.

மேற்காணும் படங்களில் எந்தக் கருவியைக் கொண்டு நீரின் கொள்ளளவைச் சரியாகக் கணக்கிட முடியும்.

a)

A

b)

B

c)

C

d)

D

30.

படம், விலங்குகளை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

மேற்காணும் விலங்குகளை எத்தகைத் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது?

a)

உடல் அமைப்பு

b)

கால்கள் உள்ளவை மற்றும் கால்கள் இல்லாதவை

c)

இனவிருத்தி முறை

d)

வாழுமிடம்