NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி படிவம் 3
Total questions: 15
Worksheet time: 8mins
பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த தம்பி, அப்பா போட்ட சத்தத்தில் ____________ வென அடித்துப்பிடித்து கிளம்பினான்.
பரபர
துருதுரு
தளதள
திமுதிமு
இதுவரை ________வென இயங்கிக் கொண்டிருந்த புவியரசன் கடந்த ஒரு மாதமாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றான்.
பரபர
துருதுரு
சிலுசிலு
தளதள
பயிரிட்ட மூன்றே வாரங்களில் கீரைச் செடிகள் யாவும் _________ என வளர்ந்ததால் நிலவரசனின் தோட்டம் பச்சைப் பசேல் என்று பசுமையாகக் காட்சியளிக்கிறது.
சிலுசிலு
துருதுரு
பரபர
தளதள
'கொவிட் 19' பெருந்தொற்றுக் காரணமாக மூடிக்கிடந்த பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அடங்கிக்கிடந்த பள்ளி மாணவர்கள் ______ வென துடிப்புடன் செயல்படத் தொடங்கினர்.
சிலுசிலு
துருதுரு
கடகட
தளதள
கூட்டுப்பணியின் போது ___________ என அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அக்குழந்தை திடீரென மயங்கி விழுந்தது எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பரபர
துருதுரு
சிலுசிலு
தளதள
பின்வரும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியின் சரியான பயன்பாட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஈழவேந்தன் ஐந்தாண்டுகளில் சிலுசிலுவென வளர்ந்து தன் தந்தையைவிட உயரமாக நின்றான்.
தேர்வின்போது தன் தோழியைப் பார்த்து விடை எழுதிய வேல்விழியாள், ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டதும் பயத்தால் சிலுசிலுவென நடுங்கினாள்.
சந்தையில் காய்கறிகள் சிலுசிலுவென பசுமையாக இருப்பதைக் கண்டு மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டினர்.
மழையில் விளையாடிக்கொண்டிருந்த சோழனின் உடலைச் சிலுசிலுவென வீசிய குளிர்க்காற்றுச் சிலிர்க்கச் செய்தது.
பேரங்காடியில் பொருள்கள் மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட உள்ளன என்பதைக் கேள்விப்பட்ட ராதா ____________ என எல்லா வேலைகளையும் செய்து முடித்து முதல் ஆளாக அங்கிச் சென்றாள்.
துருதுரு
சிலுசிலு
பரபர
தளதள
கீழ்காணும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இடைவிடாது பெய்த மழையால் தளதள எனச் செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அருணன் தன் பள்ளிப் பாடங்களைச் சிலுசிலு என செய்து முடித்தான்.
பலமாக வீசிய காற்றால் மரத்தின் கிளை ஒன்று பரபர என முறிந்து விழுந்தது.
விவசாயி பயிர்களுக்கு இயற்கை உரமிட்டு வளர்ப்பதால், அப்பயிர்கள் __________ வென வளர்ந்தன.
பரபர
துருதுரு
சிலுசிலு
தளதள
கண்மணி ________ என ஓடியாடி விளையாடும் குழுந்தைகளைப் பார்த்ததும் தன் கவலைகளை மறந்தாள்.
சிலுசிலு
தளதள
துருதுரு
பரபர
பொது முடக்கக் காலத்தில் நீர் ஊற்றப்படாமல் வாடி வதங்கி இருந்த கண்ணன் தோட்டத்துத் தக்காளிச் செடிகள் நீர் ஊற்றிய இரண்டு நாள்களில் _________ என நிமிர்ந்து நிற்கின்றன.
சிலுசிலு
தளதள
துருதுரு
பரபர
காலையில் தாமதமாக் எழுந்த விமலன் ________வெனத் தன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு ஓடினான்.
பரபர
துருதுரு
சிலுசிலு
தளதள
கீழ்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?
பரபர
அவசர அவசரமாகச் செய்தல்
விரைவாக ஓடுதல் எப்போதும்
இடத்தை விட்டு செல்லுதல்
துடிப்பாகச் செயல்படுதல்
ஆசிரியர் பாடம் நடத்துக் கொண்டிருக்கும் போதும் கூட, அந்த ஒன்றாம் ஆண்டு மாணவன் ___________ என அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.
பரபர
துருதுரு
சிலுசிலு
தளதள
கீழ்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
குளிர்ச்சித்தன்மை
சிலுசிலு
தளதள
பரபர
துருதுரு
