NEW
Font size
WorksheetsBahasa Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
மின் தண்டவாளத்தில் அதிவரைவு இரயில்,------- என விரைந்து ஓடி மறைந்தது
குடு குடு
தட தட
மல மள
கிடு கிடு
சிறுமியைக் கடத்த முயன்றவனைக் கையும் களவுமாய் பிடித்த போது மக்கள் சாலையில்------- என காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
மள மள
தர தர
பள பள
தட தட
கதவைத் தட்டும் ஓசை
தக தக
தட தட
கடு கிடு
குடு குடு
தனக்கு அந்தக் கரடி பொம்மைதான் வேண்டும் என்று அடம்பிடித்தாள் மீனா
கிள்ளுக் கீரை
காது குத்துதல்
கரி பூசுதல்
ஒற்றைக் காலில் நிற்றல்
ஒரு காரியத்தைக் காலந் தாழ்த்திச் செய்தல்
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
ஆறப் போடுதல்
ஆழம் பார்த்தல்
கல்வியில் சிறந்து விளங்கினாலும் என் ஆசிரியர் மேலும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கியதால் இன்று நான் ஒரு மருத்துவராக இருக்கிறேன். பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
அவனன்றி ஓரணுவும் அசையாது
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க
எலும்பும் தோலும் - உடல் பருமன்
சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
மேடு பள்ளம் - சமமான நிலப்பகுதி
ஆடிப்பாடி - கவலையுடன்
செய்யுளுக்குப் பொருந்தும் பொருளைத் தெரிவு செய்க.
(போகத விடந்தனிலே போக வேண்டாம்)
செல்லத் தகுந்த இடங்களுக்குச் செல்லலாகாது.
செல்லத் தகுந்த இடங்களுக்குச் செல்லக் கூடாது
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்ல வேண்டும்
ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்புகொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும். பொருளுக்கேற்ற செய்யுளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிக்கெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளைக் கொண்டு கூட ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான். விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க. *
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
