NEW
Font size
Worksheetsஏறு தழுவுதல் ஒன்பதாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
ஏறுதழுவுதல் ______ நிலத்து மக்களின் அடையாளம்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
சிந்துவெளி கல்முத்திரை ஏறுதழுவுதலைக் குறிக்கிறது என்று கூறியவர்______.
ஹீராஸ் பாதிரியார்
சகாதேவன் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன்
திருவாரூர் மகாதேவன்
'எருது பொருதார் கல்' உள்ள இடம்_________.
கரிக்கையூர்
மதுரை
தேனி
சேலம்
சொற்றொடர்களை முறைப்படுத்த.
அ. ஏறுதழுவுதல் என்பதை
ஆ. தமிழ் அகராதி
இ. தழுவிப்பிடித்தல் என்கிறது.
ஆ- அ- இ
ஆ -இ -அ
இ -ஆ -அ
இ -அ- ஆ
முறையான தொடர் அமைப்பை குறிப்பிடுக.
தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறுதலுவுதல்.
தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான.
தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்.
"எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு" என்று கூறும் நூல்.
சிலப்பதிகாரம்
கலித்தொகை
புறப்பொருள் வெண்பாமாலை
பள்ளு இலக்கியம்
திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்ட இடம்________
சித்திரக்கல் புடவில்
கரிக்கையூர்
சேலம்
உசிலம்பட்டி
வேறுபட்டதை கண்டறிந்து எழுதுக.
மஞ்சுவிரட்டு
சல்லிக்கட்டு
மாடு ஓட்டுதல்
மாடு அணைத்தல்
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு_____.
அமெரிக்கா
ஜப்பான்
ஸ்பெயின்
ஆஸ்திரேலியா
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் _________ஆண்டுகாலத் தொன்மையானது.
1000
2000
2500
3000
