Worksheetsquiz 1
Total questions: 15
Worksheet time: 21mins
விமலா நடனம் ஆடும் பொழுது அவளுடைய கால்களில் கட்டியிருந்த சலங்கை மணிகள்________________ வென ஓசை எழுப்பின.
கிலு கிலு
பள பள
மள மள
கல கல
தாமதமாகப் படுக்கையை விட்டு எழுந்த கயல்விழி _________________ பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
அரக்கப் பரக்க
முழு மூச்சாகப்
முழு கவனமாகப்
கண்ணும் கருத்துமாகப்
சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
கார்மேகன் மனத்தில் உள்ள கவலையை மறைக்க முயற்சித்தும் அவன் முகம் அதனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
அறிவுடையோரை அரசனும் விரும்பும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் செற்றிலெ ஒரு கால்
கீழ்க்காணும் குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
நிற்க அதற்குத் தக.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
உள்ளத்தால் பொய்ய தொழுகின் உலகத்தார்
இப்படத்திற்கு எற்ற சரியான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அறஞ்செய விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
ஐயமிட்டுண்
பின்வரும் செய்யுளின் மூன்றாவது வரிசைத் தெரிவு செய்க.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிகொளல் வேண்டும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
பிழையான விளக்கத்தைக் கொண்ட உலக நீதியைத் தெரிவு செய்க
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் - ஓதாமல் ஒவ்வொரு நாளும் இருக்கவேண்டும்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்-செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறக்கக்கூடாது
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்-ஒருவரைப் போகவிட்டு பின் அவரைப்பற்றிக் குறைக்கூறி திரிதல் கூடாது
கோடிட்ட செய்யுள் அடியின் பொருளைத் தெரிவு செய்க
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஏசன் எந்தை இணையடி நிழலே
குற்றமற்ற வீணையின் இசை
பெரிதான வீணையின் ஓசை
இனிமையான வீணையின் ஓசை
மாசு கொண்ட வீணையின் ஓசை
திரு.ரவி வறுமையான குடும்பத்தில் பிறந்து இன்று நாடே போற்றும் ஒரு தலை சிறந்த பல் மருத்துவராகத் திகழ்கிறார்.
மேற்கண்ட சூலுக்கு எற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனிபோல
இலை மறை காய் போல
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் _______________ உயிர்நெடில் எழுத்துகள் உள்ளன.
18
12
7
5
சரியான வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கோபுரத்தை உச்சியில் கொடிய பறக்கிறது.
மணிமேகலை பாடிய பாடலை முதல் பரிசு கிடைத்தது
கம்பர் சமையல்காரனின் கவிதைக்குப் பொருள் கூறினார்.
மலாக்கா மாநிலத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலம்
சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க
இளவேந்தன் அனைத்துப்பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றான் ,______________________,புறப்பாட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தவறிவிட்டான்
ஏனெனில்
எனினும்
ஆகவே
ஆனால்
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ?
வான்புகழ் கண்ட வள்ளுவப் பெருமான் வாழ்க !
அமரர்கள் போற்றி வணங்கியப் பெண் தெய்வம் கண்ணகி
ஆதிபகவானை உள்ளன்போடு வணங்குமாறு''அப்பா அண்ணனிடன் கூறினார்
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வேல்விழி பாட்டுப் பாடினாள்
கோமளம் அம்மாவோடு பட்டணம் சென்றாள்
மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றான்
வள்ளியம்மையின் தமிழ்ப்பற்று என்னை வெகுவாகக் கவர்ந்தது
சேர்த்தெழுதுக
கடுமை+தவம்
கடுதவம்
கடுந்தவம்
கடுமை தவம்
கடுமையான தவம்
