wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?

a)

அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.

b)

அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.

c)

அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.

d)

அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.

2.

படம் எதனை விளக்குகின்றது?

a)

ஒளிச்சேர்க்கை

b)

சுவாசித்தல்

c)

தூண்டலுக்குத் துலங்குதல்

d)

கழிவுகளை அகற்றுதல்

3.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

தாவரங்கள் கழிவுகளை அகற்றும் முறை

b)

தாவரங்கள் சூரிய ஒளியின் துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கும் முறை

c)

தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்கும் முறை

d)

தாவரங்கள் வெயிலில் வாடுவது

4.

மேற்காணும் பொருள்களில் எது தாவரங்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தும் காற்று?

a)

P

b)

Q

c)

R

d)

S

e)

T

5.

தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?

a)

அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.

b)

அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.

c)

தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.

d)

விலங்குகள் மடிந்து விடும்.

6.

காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவு என்ன?

a)

கரிவளியின் அளவு அதிகரிக்கிறது.

b)

உயிர்வளியின் அளவு அதிகரிக்கிறது.

c)

கடலின் நீர் மட்டம் குறைகிறது.

d)

உலகம் குளிர்ச்சி அடைகிறது.

7.

எது வேரில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

8.

எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

9.

__________________________ தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

விலங்குகள்

b)

தாவரங்கள்

c)

தாவரங்களும் விலங்குகளும்

10.

தாவரத்தின் வேர் ___________________க்குத் துலங்குகின்றது.

a)

புவி ஈர்ப்பு சக்தி

b)

காற்று

c)

சூரியன்

11.

தாவரம் நீர், சூரிய ஒளி, ________________________, புவி ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் தூண்டலுக்குத் துலங்குகிறது.

a)

பச்சையம்

b)

காற்று

c)

தொடுதல்

12.

தாவரத்தின் _______________________ சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

தளிர்

b)

பழம்

c)

தண்டு

13.

தொட்டாற்சிணுங்கிச் செடியின் இலைகள் உதிரும்.

a)

சரி

b)

தவறு

14.

மேற்கண்ட ஆராய்வில் கண்டறியப்படும் தூண்டல் யாது?

a)

தொடுதல்

b)

புவி ஈர்ப்பு சக்தி

15.

தாவரங்கள் பின்வரும் தூண்டலுக்குத் துலங்கின்றன. சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

காற்று

b)

நீர்

c)

புவி ஈர்ப்பு சக்தி

d)

மண்

16.

இந்த ஆராய்வில் தற்சார்பு மாறி __________________

a)

ஒளியின் வருகை

b)

செடியின் நிலை

17.

ஒளிச்சேர்க்கை தாவரத்தின் _______________ப் பகுதிகளில் நடைபெறுகிறது.

a)

இலை

b)

வேர்

c)

தண்டு

18.

தாவரங்கள் உணவு தயாரிக்கத் தேவைபடுகிறது.

a)

சூரிய ஒளி

b)

நீர், பச்சையம்

c)

கரிவளி

d)

அனைத்தும்

19.

ஒளிச்சேர்க்கையின்போது தாவரம் எவை வெளியிடுகின்றது?

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

பச்சையம்

20.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம் எவற்றை உணவாகப் பெறுகின்றது?

a)

சர்க்கரைப் பொருள்

b)

சூரிய ஒளி

c)

நீர்