NEW
Font size
Worksheetsதமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா
Total questions: 30
Worksheet time: 15mins
அப்பா சொல்லைக் கேட்காமல் பல தவறுகளைத் தொடர்ந்து செய்து வந்த குமரன் இப்போது சிறையில் இருக்கிறான். இதற்குப் பொருத்தமான கொன்றை வேந்தனை தெரிவு செய்க.
சூதும் வாதும் வேதனை செய்யும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
புது மணத்தம்பதியினரை பெரியவர்கள் ______________________________ வாழ வேண்டும் என வாழ்த்தினர். இதற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
சிலை மேல் எழுத்து போல்
இலைமறை காய் போல
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
தொட்டுப் பார்த்தாள்
கொண்டுச் சென்றாள்
செய்துப் பார்த்தார்
வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிர்நோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.
கங்கணம் கட்டினான்
ஒரு கை பார்த்தான்
தோள் கொடுத்தான்
உச்சிக் குளிர்ந்தான்
ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்
சிலை மேல் எழுத்து போல
சூரியனைக் கண்ட பனி போல
இலைமறை காய் போல
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்
சிறு துளி பெரு வெள்ளம்
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிவா சோதனைக்குப் படிக்காமல் __________ அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.
காது குத்தியதால்
முட்டு
க்கட்டையானதால்
தட்டிக் கழித்ததால்
மனப்பால் குடித்ததால்
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
உடலினை உறுதி செய்
ஐம்பொறி ஆட்சிக்கொள்
வாணி பள்ளி போட்டி விளையாட்டில் ____________வென ஓடி முதல் பரிசை வென்று நற்பெயரை தனது குழுவிற்கு தேடிக் கொடுத்தாள்
கலகல
குடுகுடு
தடதட
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இரவு நிகழ்வில் சிறுவர்கள் _______________ மகிழ்ந்தனர்
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.
மள மள, தட தட
மள மள , குடு குடு
மட மட, குடு குடு
____________களில் சிறந்த விளங்கிய விலாசினி, இன்று சிறந்த விஞ்ஞானியாக விளங்குகிறாள்
கல்வி கேள்வி
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை. சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும்
அக்கறையெடுத்துக் கொண்டால், நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வ
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
அருமை பெருமை
குறை நிறை
கல்வி கேள்வி
நன்மை தீமை
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்
மயங்க
மயங்கிய
மயங்கும்
மயங்கி
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
ஆகையால்
ஏனெனில்
ஆனால்
அல்லது
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது
ஒப்பர வொழுகு
ஒதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்
காமினி பணிச்சுமையால் தனக்கு வரவேண்டிய உயர் பதவியைத் தவிர்த்தாள்.
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்யவும்
ஈவிரக்கம்
தட்டிக் கழித்தல்
கை கொடுத்தல்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக
தீயச் செயல்கள்
கோபம்
நெருப்பு
ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும். மற்ற பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது
தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
__________ துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்காகப் போராடியதால் ________
மக்கள் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர்.
என்று , இன்று
அன்று , இன்று
அன்று , என்று
என்று , அன்று
சரியான சொற்களை எழுதி நிறைவு செய்க.
பாரதி .......... உணவுகள் உண்பதைப் பழக்கமாகக் கொண்டான். கடுமையான ......... வலியால் துடித்தான்.
எல்லா
தலை
சத்துள்ள
கை
பதப்படுத்தப்பட்ட
வயிற்று
டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________
வலியுறுத்தியது
வலியுறுத்தும்
வலியுறுத்துகிறது
வானில் கரிய மேகங்கள் தெரிவதால்,சிறிது நேரத்தில் மழை ______________
பெய்தது
பெய்கிறது
பெய்யும்
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை எழுத்துகள்? *
247
246
248
சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க ...... திருடனின் கையில் இருந்த கத்தி_____________ வென மின்னியது.
மினு மினு
தக தக
பள பள
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் _________________________________________________
மெய்ப் பொருள் காண்பதறிவு
இன்மை புகுத்தி விடும்
தீமை இலாத சொலல்
எப்போதும் அண்ணனுடன் சண்டைப் போடும் உமா அவன் படிப்புக்காக வெளிநாடு சென்றப் பிறகு அவனை நினைத்து வருத்தப்பட்டாள். வாக்கியத்திற்கு பொருத்தமான பழமொழியை தெரிவு செய்க
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
