wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறஞ்செய ______________

a)

சினம்

b)

விரும்பு

c)

கரவேல்

d)

விலக்கேல்

2.

படத்திற்கேற்ற ஆத்திசூடி யாது?

a)

இயல்வது கரவேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

உடையது விளம்பேல்

d)

ஒளவியம் பேசேல்

3.

ஐய மிட்டுண்

a)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

b)

பசியென வந்தவர்க்கு உணவுக் கொடுக்காமல் நாம் முதலில் உண்ண வேண்டும்.

c)

பசியென இல்லாதவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

4.

ஒப்புர வொழுகு

a)

உலக நடைமுறை அறியாமல் நடந்து கொள்ள வேண்டும்.

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள கூடாது.

c)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

5.

முயற்சியை விட்டு விடக்கூடாது.

a)

உடையது விளம்பேல்

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

ஊக்கமது கைவிடேல்

d)

எண்ணெழுத் திகழேல்

6.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

7.

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா


மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஐயமிட்டு உண்

b)

அறம் செய விரும்பு

c)

ஒப்புர ஒழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

8.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

9.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


தனலெட்சுமி : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?


சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே!

a)

ஒப்புர ஒழுகு

b)

ஔவியம் பேசேல்

c)

ஓதுவதொழியேல்

d)

ஊக்கமது கைவிடேல்

10.

குமரன் : அம்மா, இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து வீட்டு அகிலன் மிதிவண்டி இரவல் கேட்க வருவான், அவனிடம் மிதிவண்டி பழுதாகிவிட்டது என்று கூறிவிடுங்கள்.

அம்மா : குமரா, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டுமே தவிர இல்லையென்று சொல்லக் கூடாது.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

இயல்வது கரவேல்