wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE

Total questions: 17

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது அறுவடை இயந்திரத்தின் நன்மையைக் காட்டுகிறது?

a)

வேலையாட்களின் செலவைக் குறைக்க

b)

காற்று தூய்மைக்கேட்டைக் குறைக்க

c)

வெட்டுமர நடவடிக்கையைக் குறைகிறது

d)

பெட்ரோலியம் பயன்பாட்டைக் குறைக்கிறது

2.

பல்லியும் இராட்சத கணவாயும் எவ்வாறு தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து கொள்கிறது?

a)

கருப்பு மையை வெளியேற்றுதல்

b)

கூட்டமாக வாழும்

c)

தன் உடலைச் சுருட்டிக் கொள்ளும்

d)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளும்

3.

ஒரு மாணவன் இரண்டு வடிவுரு படகுகளை வெவ்வேறு பொருள்களைப் பயன்படுத்தி தயாரித்தான். அவ்விரு படகுகளையும் நீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்தான். அப்படகுகள் நீரில் மிதக்கும் ஆற்றலை உற்றறிந்தான்.

இந்த ஆய்வின் கட்டுப்படுத்தப்பட்ட மாறி எது?

a)

வடிவுறு படகுகளின் அளவு

b)

படகுகள் நீரில் மிதக்க எடுத்துக் கொண்ட நேரம்

c)

பொருளின் வகை

d)

வடிவுறு படகுகளின் எடை

4.

குளிர்காலங்களில் இடம் பெயர்க்கும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

காண்டா மிருகம்

c)

கரடி

d)

திமிங்கிலம்

5.

ஒரு மாணவன் கொதித்த நீரை வெப்பமானியைக் கொண்டு அளந்தான். கொதித்த நீரில் சில பனிக்கட்டிகளைப் போட்டான். வெப்பமானியின் வெப்பநிலையை அனுமானி.

a)

0 °C

b)

100 °C

c)

100 °C க்கும் குறைவு

d)

100 °C க்கும் அதிகம்

6.

கீழ்க்கண்பனவற்றுள் எது பூமியின் சுழற்சியை ஒட்டி சரியான கூற்றாகும்?

a)

தன் அச்சில் முழுமையாகச் சுழன்று வர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது

b)

தன் அச்சில் முழுமையாகச் சுழன்று வர 365 1/4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது

c)

கிழக்கிலிருந்து மேற்காக சுழல்கிறது

d)

வடக்கிலிருந்து தெற்காகச் சுழல்கிறது

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது புணரமைத்தலைக் குறிகிறது?

a)

பாதுகாக்கப்பட்ட காடுகளை அமைத்தல்

b)

பராமரிப்பு மையங்களை அமைத்தல்

c)

தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களை வெட்டுதல்

d)

முற்றழிவை எதிர்நோக்கும் உயிரினங்களைப் பாதுகாத்தல்

8.

யானை முற்றழிவை எதிர்நோக்கும் காரணம் என்ன?

a)

தோலுக்காக வேட்டையாடப்படிகிறது

b)

தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது

c)

கொம்புக்காக வேட்டையாடப்படுகிறது

d)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது

9.

கீழ்காண்பனவற்றுள் எது சரி?

a)

புரோட்டோசோவா - நொதிமம்

b)

நச்சியம் - அமீபா

c)

பூஞ்சணம் - பூஞ்சணம்

d)

அல்கா - ஸ்த்ரெப்டோகோக்குஸ்

10.

அஸ்மான் 6 மிளகாய்ச்செடியை ஒரு சாடியில் நட்டான். ஒவ்வொரு நாளும் அச்சாடிகளுக்கு நீர் ஊற்றி சூரியஒளி படும்படி வைத்தான். இருப்பினும் ஒரு செடி மட்டுமே செழிப்பாக வளர்ந்திருந்தது.

அனைத்துச் செடிகளும் செழித்து வளர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

a)

அச்செடிகளை மூடிய அலமாரியில் வைக்க வேண்டும்

b)

ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீர் உற்ற வேண்டும்

c)

சாடியில் உரம் போட வேண்டும்

d)

அச்செடிகளை வெவ்வேறு தனி சாடிகளுக்கு மாற்ற வேண்டும்

11.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில், உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றி தொடர்ந்து நிலைநாட்டும் நடவடிக்கை எது?

a)

மறுநடவு செய்ய வேண்டும்

b)

மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும்

c)

கடலைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்

d)

அழிவை எதிர்நோக்கும் விலங்குகளுக்கு புணரமைப்பு மையங்களை உருவாக்க வேண்டும்.

12.

மரத்தில் வளரும் ஆர்கிட் செடி எந்த வகையான தாவரத்தின் தொடர்பினைக் குறிக்கிறது?

a)

பரிமாற்று வாழ்வு

b)

ஒத்துழைப்பு

c)

வேற்றின இணை வாழ்வு

d)

ஒட்டுண்ணி வாழ்வு

13.

சல்மி கனவுந்தை வீட்டிலிருந்து காலை 7:30க்கு செலுத்தி அலுவலகத்திற்குக் காலை 8:30க்கு வந்தடைந்தார். சல்மி 80 km/h, வேகத்தில் கனவுந்தைச் செலுத்தினால் அவரின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் உள்ள தூரம் என்ன?

a)

30 km

b)

50 km

c)

80 km

d)

100 km

14.

தொற்று நோய் என்றால் என்ன?

a)

மருந்தால் குணமாக்க முடியாத நோய்

b)

யிறப்பை ஏற்படுத்தும் நோய்

c)

விலங்குகளால் பரவக்கூடிய நோய்

d)

ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக் கூடியது

15.

கீழ்க்கண்ட தகவல் ஒரு ரொட்டி செய்வதற்காக மாவு பிசைய தேவைப்படும் பொருள்களைக் காட்டுகிறது.

~கோதுமை மாவு

~நீர்

~சீனி

~காய்ந்த நொதிமம்

~உப்பு


இவற்றில் மாவு உப்புவதற்கு எது காரணமாகிறது?

a)

நீர்

b)

சீனி

c)

கோதுமை மாவு

d)

காய்ந்த நொதிமம்

16.

~ சுறா மீன் மற்றும் ரெமோரா ~


இது எம்மாதிரியான தொடர்பு?

a)

ஒட்டுண்ணி வாழ்வு

b)

வேற்றின இணை வாழ்வு

c)

பரிமாற்று வாழ்வு

d)

போராட்ட வாழ்வு

17.

வாகன வட்டயத்தில் ஏன் வடிவத் தோரணிகள் காணப்படுகின்றன?

a)

வாகனத்தௌ மேலும் நிலைத்தன்மை உடையதாக மாற்றுவதற்கு

b)

உராய்வு சக்தியை அதிகமாக்குவதற்கு

c)

வட்டயத்தை மேலும் அழகுபடுத்துவதற்கு

d)

வட்டயம் நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதற்கு