Worksheetsஅறிவியல் மீள்பார்வை
Total questions: 15
Worksheet time: 8mins
ஊசல் குண்டின் நீளம் அதிகரிக்கும் போது ஊசலாட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
(மேற்காணும் கூற்று எதனைக் குறிக்கின்றது)
ஓர் ஆய்வின் நோக்கம்
ஓர் ஆய்வின் கருதுகோள்
ஓர் ஆய்வின் முடிவிற்கான காரணம்
ஓர் ஆய்வின் முன் அனுமானம்
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எந்த மாணவர் கற்ற அறிவியல் கைவினைத் திறனை வீட்டில் பயன்படுத்துகிறார்?
சாலினி வீட்டில் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறாள்.
சிவா படுக்கையறையைச் சுத்தம் செய்கிறாள்.
ராணி சமையல் பொருள்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கிறாள்.
வளர்மதி பயன்படுத்திய சமையல் பொருள்களை மீண்டும் அதே இடத்தில் வைக்கிறாள்.
மாணவர்கள் அறிவியல் ஆராய்விற்கு ஆய்வு கருவிகளைப் பயன்படுத்தினர். ஆய்வுக்குப் பின் அக்கருவிகளை என்ன செய்ய வேண்டும்?
பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
மேசையின் மீது வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.
கழுவும் இடத்தில் வைக்க வேண்டும்.
சுத்தமாகக் கழுவி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
அமுதன் பொருள்களின் நீரை ஈர்க்கும் தன்மையை ஆராய்ந்தான். இவ்வாராய்வில் எது தற்சார்பு மாறி?
பொருளின் வகை
நீரின் அளவு
ஈர்க்கப்பட்ட நீரின் அளவு
நீரை ஈர்க்கும் தன்மை
கீழ்க்காணும் எலும்புகளில் எது மனிதனின் நுரையீரல் மற்றும் இருதயத்தைப் பாதுகாக்கின்றது?
முதுகெலும்பு
கை எலும்பு
கால் எலும்பு
விலா எலும்பு
பூடல் எலும்புகளுக்குச் சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது?
புரதம்
கால்சியம்
ஊட்டச்சத்து
கொழுப்புச்சத்து
மனித உடல் முழுவதும் உயிர்வளி நிறைந்த இரத்தத்தைக் கொண்டு செல்வது எது?
நுரையீரல்
இருதயம்
தசை
இரத்தக் குழாய்
மருத்துவர் மணிமாறனின் இருதயம் பலவீனமாக இருப்பதாகக் கூறினார். மணிமாறன் தன் இருதயத்தை வலிமையாக்குவதற்கான சிறந்த வழி எது?
விலை உயர்ந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
நீண்ட நாள் ஓய்வு எடுக்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ன வேண்டும்.
இருதயத்துடிப்பின் வீதம் என்பதன் பொருள் என்ன?
இதயம் துடிக்கும் சத்தத்தின் அளவு.
இதயம் ஒரு நாளில் துடிக்கும் அளவு.
இதயம் ஒரு நிமிடத்திற்குத் துடிக்கும் அளவு
விதயம் துடிக்கும் வேகத்தின் அளவு.
கீழ்க்காண்பவை அனைத்தும் மனிதனின் முதன்மை உடல் கூட்டின் செயல்பாடுகளாகும். ஒன்றைத் தவிர...
மண்டை ஓடு மூளையைப் பாதுகாக்கிறது
விலா எலும்பு உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது
கை எலும்புகள் உடலுக்கு உறுதுணையாக அமைகின்றன.
முதுகெலும்பு உடலுக்கு உறுதுணையாக அமைகின்றது.
உணவு சங்கிலி என்பது....
ஒரு விலங்கின் உணவு முறை
பல உயிரினங்களின் உணவு வகை
உயிரினங்களிடையே ஏற்படும் உணவு தொடர்பு
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு சங்கிலியைக் கொண்டது.
கீழ்க்காணும் தகவல்களில் எது விலங்குகளின் நீடுநிலவலைப் பற்றிய மிகச் சரியான கூற்று?
விலங்குகள் இனவிருத்தி செய்கின்றன
விலங்குகள் தன் குட்டிகளைப் பாதுகாக்கின்றன.
விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உணவு தொடர்பு உண்டு.
தன் இனம் அழியாமல் இருப்பதை விலங்குகள் உறுதி செய்கின்றன.
கீழ்க்காணும் விலங்குகளில் எது உணவு சங்கிலியில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பயனீட்டாளராக இருக்கும்?
வெட்டுக்கிளி
நத்தை
மீன்
பூனை
கோடைக் காலத்தில் நொய்வ மரம் ஏன் இலைகளை உதிரச் செய்கின்றது?
மீண்டும் செழிப்பாக வளர்வதற்கு
தரமான நொய்வ பாலை உருவாக்குவதற்கு
தண்டில் உள்ள நீரை இழக்காமல் இருக்க
பலத்த காற்றினால் சாயாமல் இருக்க
கீழ்க்காணும் தாவரங்களுள் எது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள இலைகளைச் சுருட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது?
மிளகாய்ச் செடி
மஞ்சள் செடி
தென்னை மரம்
மூங்கில்
