Worksheetsபூமி
Total questions: 20
Worksheet time: 10mins
1. பூமிக்கு ________________ உண்டு.
புவி ஈர்ப்பு சக்தி
எதிர்ப்பு சக்தி
2. சங்கர் குதிக்கிறான். அவன் குதித்தப்பின் அவனால் அந்தரத்தில் மிதக்க முடியும்.
சரி
தவறு
3. புவி ஈர்ப்புச் சக்தி என்றால் என்ன?
ஒரு பொருள் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசை
ஒரு பொருள் அந்தரத்தில் மிதத்தல்.
ஒரு பொருள் மேலே செல்லுதல்
4. பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
5. பூமியில் இருந்து ஒரு பொருள் தூரமாக செல்ல செல்ல அதன் ஈர்ப்புச் சக்தி ______________
குறையும்
அதிகரிக்கும்
6. மேலே செல்லும் பொருட்கள் கீழே வந்தடைவதே ஈர்ப்புச் சக்தி ஆகும்
சரி
தவறு
7. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மிதக்கின்றனர். ஆனால், பூமியில் நடக்கின்றனர். ஏன்?
அங்கு புவி ஈர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால்
அங்கு புவி ஈர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால்
8. வெவ்வேறு அளவுகளில் பொருள்கள் இருந்தாலும், புவி ஈர்ப்புச் சக்தி ஒரே வேகத்தில் பொருட்களைக் கீழே ஈர்க்கும்.
சரி
தவறு
9. பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
10.பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
தெற்கு
வடக்கு
மேற்கு
கிழக்கு
11.பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.
23 மணி நேரம்
24 மணி நேரம்
22 மணி நேரம்
25 மணி நேரம்
12. 24 மணி நேரம் எத்தனை நாள்?
1 நாள்
0.5 நாள்
1.5 நாள்
2 நாள்
13. பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
14. பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?
வாயு
மேகம்
இரவு
பகல்
15. பூமியின் மீது சூரிய ஒளி படாமால் இருந்தால் என்ன நிகழும்?
இரவு
பகல்
புயல்
வானம்
16. பூமியைப் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
சூரியனைச் சுற்றி வருவதில்லை
பூமி தன் அச்சில் சுழலுகிறது
இரவு, பகல் ஏற்படுவதில்லை
17. மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?
பூமி
சூரியன், நிலவு
பூமி, நிலவு
சூரியன், பூமி , நிலவு
18. பூமி தன் அச்சில் எவ்வாறு சுழல்கிறது?
கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து கிழக்காக
19. பூமி சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் ஏற்படும் விளைவினை தேர்ந்தெடுத்திடுக.
பூமியில் வெளிச்சம் குறையும்
பூமியின் நீர் நிலைகள் உறையும்
பூமியின் வெப்பம் குறையும்
பாலைவனங்கள் தோன்றும்
20. படம், ஒரு தென்னை மரத்தின் கீழே சில தேங்காய்கள் தானாகவே விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது. இச்சூழல் ஏற்படுவதன் வழி அறிந்த தகவல் என்ன?
காந்த சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
காற்று சக்தி
தள்ளும் சக்தி
