NEW
Font size
Worksheetsசெய்யுள் மொழியணி (form 1)
Total questions: 15
Worksheet time: 8mins
இரவு நேரத்தில் தன்னந்தனியாக சாலையில்
நடந்து வந்தபோது, திடீரென நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும் மேனகா ________________________
என நடுங்கினாள்.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
அத்தியாவசியப் பொருட்கள் பல ______________________ என விலை உயர்ந்து வருவதை நாம் இன்று கண்கூடாகக் காண முடிகின்றது.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
மழைத் தூறலில் நனைந்தபடி வீட்டிற்குத் திரும்பிய குமுதனுக்கு உடல் __________________________ என இருந்தது.
நசநச
கிடுகிடு
கடகட
படபட
ஆசிரியர் கற்பித்த செய்யுளடிகளை மாணவன் _________________ என ஒப்புவித்தான்.
கிடுகிடு
வெடவெட
கடகட
நசநச
நாம் நமது உணவுகளில் அதிகமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சேர்த்துக் கொண்டால் _________________ இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
தங்குதடை
உயர்வு தாழ்வு
நோய்நொடி
கள்ளங்கபடு
கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
'வெட்டிப் பேச்சு'
கருத்தை வெட்டிப் பேசுதல்
வெட்கப்படும்படி பேசுதல்
வீண் பேச்சு
வேகமான பேச்சு
அன்பான நண்பர்கள் ___________________________________ இன்றி உண்மையாக இருந்தால்தான் அந்நட்பு எந்நாளும் தொடர்ந்து நிலைத்து நிற்கும்.
நோய்நொடி
தங்குதடை
கள்ளங்கபடு
அரைப்படிப்பு
வீட்டிற்கு வரும் உறவினரை _____________________ மலர வரவேற்பது தமழர்களின் உயரிய பண்பாடாகும்.
கள்ளங்கபடு
அகமும் புறமும்
தங்கு தடை
உயர்வு தாழ்வு
நடன ஆசிரியர்களுக்கான பயிற்சியை முழுமையாக முடிக்காமலே, ரேவதி குழந்தைகளுக்கு நடனம் வகுப்பு ஆரம்பிக்க முடிவு செய்தாள்.
வெட்டிப் பேச்சு
அரைப்படிப்பு
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
கீழ்க்காணும் இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
'தங்கு தடை'
இடையூறு
போராட்டம்
சீராக நடத்தல்
வெற்றி பெறுதல்
துளசியிலை ஒன்றினை நாளும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்கு நிவாரணமாய் அமையும் என _______________________________-யாக தமிழர்கள் நம்பி வருகின்றனர்.
வெட்டிப் பேச்சு
தோள் கொடுத்தல்
அரைப்படிப்பு
வாழையடி வாழை
பல்வேறு இனத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் அந்தக் காற்பந்து குழுவில் பயிற்சிப் பெற்று வந்தாலும், அனைவரும் _____________________ இன்றி அன்பாகப் பழகி வருகின்றனர்.
தங்குதடை
நோய்நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
மாணவர்கள் வகுப்பில் ______________________ பேசியே தங்கள் பொன்னான பொழுதைக் கழித்து வருவது மனதிற்கு வருத்தததை அளிக்கிறது.
வாழையடி வாழை
அரைப்படிப்பு
தோள் கொடுத்து
வெட்டிப் பேச்சு
குயில் திருக்குறள் மனனப் போட்டியில் தனுஷ் அனைத்து திருக்குறளையும்
________________ என ஒப்புவித்து முதல் பரிசைப் பெற்றான்.
கடகட
விறுவிறு
கிடுகிடு
பரபர
கம்பரும் ஒட்டக்கூத்தரும் ______________ தமிழின் வளர்ச்சிக்குப் பல செயல்களைச் செய்து ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்துக் கொண்டனர்.
உடும்புப்பிடியாக
எள்ளளவும்
ஏட்டிக்குப் போட்டியாக
வெட்டிப் பேச்சாக
