Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6, ஆக்கம் திருமதி சு.கமலா, STS. தேவி,
Total questions: 13
Worksheet time: 7mins
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.
ஆயினும்
ஏனென்றால்
ஏனெனில்
இன்னும்
கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?
அ, இ , உ
வினா எழுத்து
மெய் எழுத்து
நெட்டெழுத்து
சுட்டெழுத்து
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்
அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?
சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?
நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?
உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
வானில் பருந்து பறந்து சென்றது
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
மாணவர்கள் யாழ் பயிற்சி நூல்களை நேற்று _____________.
வாங்கும்
வாங்கினர்
வாங்குகின்றனர்
வாங்குவோம்
படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.
கடகட
கிடுகிடு
மடமட
சரசர
கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.
I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
I, II, IV, III
I, IV, III, II
I, II, III, IV
II, I, III, IV
