wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7ம் வகுப்பு- பருவம் - 3- இயல் -1

Total questions: 36

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

பொருள் தருக: புகவாக

a)

உணவாக

b)

மருந்தாக

c)

செயலாக

d)

மழையாக

2.

பொருள் தருக: மடமகள்

a)

முதுமையான மகள்

b)

இளமகள்

c)

பொன்மகள்

d)

திருமகள்

3.

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்

a)

காரியாசன்

b)

பெருவாயின் முள்ளியார்

c)

முன்றுரை அரையனார்

d)

மாறன் பொறையனார்

4.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ள நூல்

a)

சிறுபஞ்சமூலம்

b)

நாலடியார்

c)

முதுமொழி காஞ்சி

d)

பழமொழி நானூறு

5.

தொல்காப்பியர் பழமொழியை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

a)

பழஞ்சொல்

b)

முதுசொல்

c)

மூத்தோர் சொல்

d)

இன்சொல்

6.

பழமொழி நானூறில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

32

b)

33

c)

34

d)

35

7.

பிரித்து எழுதுக: நீருலையில்

a)

நீர் + உலையில்

b)

நீர் + இலையில்

c)

நீரு + உலையில்

d)

நீரு + இலையில்

8.

வாய்மொழி இலக்கியம் எனப்படுவது

a)

கதைப்பாடல்

b)

நாட்டுப்புறப்பாடல்

c)

இசைப்பாடல்

d)

கும்மிபாட்டு

9.

பொருத்துக:

1) நாற்று - பறித்தல்

2) நீர் - அறுத்தல்

3) கதிர் - நடுதல்

4) களை - பாய்ச்சுதல்

a)

4 3 1 2

b)

3 4 1 2

c)

2 4 1 3

d)

3 4 2 1

10.

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகராக விளங்கிய ஊர்

a)

கொற்கை

b)

அழகர்மலை

c)

திருநெல்வேலி

d)

திருப்பரங்குன்றம்

11.

'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என்று கூறியவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

சேக்கிழார்

12.

'தண்பொருநைப் புனல்நாடு' என்று திருநெல்வேலியைப் புகழ்ந்தவர் யார்?

a)

சேக்கிழார்

b)

திருஞானசம்பந்தர்

c)

திரிகூட இராசப்பக் கவிராயர்

d)

சுந்தரர்

13.

"பொதியி லாயினும் இமய மாயினும்

பதியெழு அறியாப் பழங்குடி" - என்று பொதிகைமலையை புகழ்ந்தவர்

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருத்தக்கத்தேவர்

c)

இளங்கோவடிகள்

d)

திரிகூட இராசப்பக் கவிராயர்

14.

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" - என்று குற்றால மலையைப் பற்றி குறிப்பிடும் நூல்

a)

பெரிய புராணம்

b)

சிலப்பதிகாரம்

c)

குற்றாலக் குறவஞ்சி

d)

தேவாரம்

15.

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு

a)

மணிமுத்தாறு

b)

வைகை

c)

சேர்வலாறு

d)

தாமிரபரணி

16.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்

a)

தூத்துக்குடி

b)

திருநெல்வேலி

c)

மதுரை

d)

தேனி

17.

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம்

a)

கொற்கை

b)

தூத்துக்குடி

c)

காயல்பட்டினம்

d)

பூம்புகார்

18.

"முத்துப் பரப்பிற் கொற்கை முன்றுறை" - என்று கொற்கையைப் பற்றி குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

அகநானூறு

b)

நற்றிணை

c)

குறுந்தொகை

d)

ஐங்குறுநூறு

19.

"கொற்கையில் பெருந்துறை முத்து" - என்று கொற்கை முத்துகளைப் பற்றி குறிப்பிடும் நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

புறநானூறு

d)

அகநானூறு

20.

"திங்கள் நாள்விழா மல்கு திருநெல்

வேலியுறை செல்வர் தாமே " - என்று நெல்லையப்பர் கோயில் திருவிழா பற்றி கூறியவர்

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

21.

காவற்புரை என்பது

a)

பள்ளிச்சாலை

b)

தானியம் விற்கும் தெரு

c)

தங்க நகைகள் உருவாக்கும் சாலை

d)

சிறைச்சாலை

22.

பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்

a)

கூழைக்கடை

b)

காவற்புரை

c)

அக்கசாலை

d)

நகைச்சாலை

23.

திருநெல்வேலி ____ மன்னர்களோடு தொடர்பு உடையது

a)

சேர

b)

சோழ

c)

பாண்டிய

d)

பல்லவ

24.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

a)

திருநெல்வேலி

b)

பாளையங்கோட்டை

c)

தூத்துக்குடி

d)

பத்தமடை

25.

பண்டைய காலத்தில் வணிகம் நடைபெறும் பகுதியை எவ்வாறு அழைப்பர்?

a)

ஊர்

b)

தெரு

c)

சாலை

d)

பேட்டை

26.

தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்

a)

சீவைகுண்டம்

b)

நெல்லை

c)

சீவலப்பேரி

d)

கொற்கை

27.

பொருத்துக:

1) கடிகைமுத்துப் புலவர் - சீவைகுண்டம்

2) பிள்ளைப்பெருமாள் - காயல்பட்டினம்

3) நம்மாழ்வார் - எட்டையபுரம்

4) சீதக்காதி - திருக்குருகூர்

a)

2 4 3 1

b)

4 2 3 1

c)

1 3 2 4

d)

3 1 4 2

28.

"நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று குற்றாலத்தைப் பற்றி பாடியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

திரிகூட இராசப்பக் கவிராயர்

d)

மாணிக்கவாசகர்

29.

"குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!" - என்று குற்றாலநாதரை வணங்கியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

30.

திரிகூடராசப்பக் கவிராயர் வாழ்ந்த ஊர்

a)

குற்றாலம்

b)

மேலகரம்

c)

பெரிய அகரம்

d)

பத்தமடை

31.

குற்றால முனிவர் என்று அழைக்கப்படுபவர்

a)

தினிகூடராசப்பக் கவிராயர்

b)

இரசிகமணி டி. கே. சி

c)

அண்ணாமலையார்

d)

நமச்சிவாயப் புலவர்

32.

'வாடா' என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! - என்று சங்கரன்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் கோமதித்தாயைப் பாடியவர்

a)

அருணகிரிநாதர்

b)

அண்ணாமலையார்

c)

அழகிய சொக்கநாதர்

d)

திருஞானசம்பந்தர்

33.

தமிழிசைக் காவலர் எனப்படுபவர்

a)

அருணகிரிநாதர்

b)

அண்ணாமலையார்

c)

திரிகூடராசப்பக் கவிராயர்

d)

இரசிகமணி டி.கே.சி

34.

'மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது' என்னும் வரியில் உள்ள அணி

a)

உவமையணி

b)

இல்பொருள் உவமையணி

c)

எடுத்துக்காட்டு உவமையணி

d)

ஏகதேச உருவக அணி

35.

அகத்தியர் வாழ்ந்த மலை

a)

குற்றால மலை

b)

போடி மலை

c)

பொதிகை மலை

d)

திருப்பரங்குன்றம் மலை

36.

உழவியல்

a)

Agriculture

b)

Irrigation

c)

Cultivation

d)

Agronomy