Worksheetsஇறுதிச் சுற்று
Total questions: 40
Worksheet time: 30mins
பொருட்பாலில் உள்ள இயல்களில் தவறானது எது?
அரசியல்
துறவறவியல்
நட்பியல்
அமைச்சியல்
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் 1812-இல் வெளியிட்டவர் யார்?
ஞானப்பிரகாசம்
தாமத்தர்
மணக்குடவர்
பரிமேலழகர்
திருக்குறளின் பெருமையை “இந்திய வளர்ச்சி சிந்தனை" என்ற நூலில் சிறப்பாக எடுத்து ஆராய்ந்து விளக்கியவர் யார்?
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
பாரதிதாசன்
பாரதியார்
பேரறிஞர் ஆல்பர்ட் சுவைட்சர்.
திருக்குறளில் ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் என்ன?
ள . ஓ
ளீ,ங
ள்.ங்
ஞ . ளீ
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள்?
சித்திரை-6
தை-2
மாசி-4
பங்குனி - 3
திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கும் பணி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1980
1973
1890
1873
திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரு மலர்கள் யாவை?
குவளை-அனிச்சம்
நெருஞ்சி - அனிச்சம்
தாமரை - நெருஞ்சி
நெருஞ்சி - குவளை
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் பாராட்டியவர் யார்?
பாரதியார்
கண்ணதாசன்
பாரதிதாசன்
கி.ஆ.பெ.விசுவநாதம்
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்தக் குறள்" எனத் திருக்குறளைப் போற்றிப் பாடியவர் யார்?
பாரதியார்
இடைக்காடனார்
ஒளவையார்
கி.ஆ.பெ.விசுவநாத
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
48
70
80
60
இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?25
55
70
25
10
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை என்ன?
32,194
40, 194
38,194
42,194
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
தாமத்தர்
திருமலையர்
தருமர்
ஃ என்னும் ஆய்த எழுத்து திருக்குறளில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது?
34 இடம்
13 இடம்
23 இடம்
14 இடம்
திருக்குறளைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர் யார்?
எஸ்.எஸ்.பெர்வி
வைத்தியநாத தேசிகர்
தால்சுதாய்
இராமலிங்க ராவ்
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் நெருங்கிய தொடர்புண்டு?
5
7
9
8
மதசார்பற்ற இலக்கியம் என்ற வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் யாது?
எந்த ஒரு குறிப்பிட்ட மத மதிப்பீட்டிற்கான இலக்கியமாகவுமில்லாது மானுடம் முழுமைக்கும் பொருந்தும் தனித்துவம்
மானுட நலனை முன்நிறுத்தும் தனித்துவம்
திருக்குறள் வாசிப்பு நமது நாட்டைக் கட்டமைத்த தலைவர்களின்
மதச்சார்பற்ற தன்மையை வலிமைப்படுத்தியது
மேற்கண்ட அனைத்துமே.
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின்
தன்மை மற்றும்_____________________ ஆராய்ந்து செயலை செய்ய வேண்டும் என்று வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகின்றார்.
கோடிட்ட இடத்தை சரியான விடையுடன் நிரப்புக.
ஏற்ற இடம்.
சிறந்த அணி
தேவையான செல்வம்
சத்தான உணவு
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்'
வாழ்க்கையில் தோல்வியடைவோரின் தீய குணங்களில் வள்ளுவர் முதலில் பட்டியலிடுவது எதனை?
அதிகபட்ச உறக்கம்
சோம்பல்
மறதி
காலந்தாழ்த்துதல்
'கடலோடா சால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து'
இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் காண்க.
காலமறிதல்
தெரிந்து தெளிதல்
வினைசெயல் வகை
இடனறிதல்
'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"
இக்குறட் கருத்தோடு பொருத்தமான புகழ்மிக்க கூற்று எது?
பிச்சை புகினும் கற்கை நன்றே
எழுமையும் ஏமாப் புடைத்து
கல்வி கரையில்
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
யாருடைய நட்பு கீழ்க்கண்ட திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது?
'அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு'
பாரி, கபிலர்
அதியமான், ஒளவையார்
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையா.
மேற்கண்ட எவருமிலர்
திருக்குறளின் சிறப்பைப் போற்றும் திருவள்ளுவமாலையில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?
52
53
54
55
அச்சுவடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் திருக்குறள் நூலை அச்சிட்டவர் யார்?
காளிங்கர்
வீரமாமுனிவர்
எல்லிஸ்துரை
கால்டுவெல்
திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
மாக்ஸ்முல்லர்
வீரமாமுனிவர்
டாக்டர் கிரவுள்
காளிங்கர்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை யாது?
குன்றிமணி
பனைவிதை
நெல்
மூங்கில்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் யாது?
நெருஞ்சிப்பழம்
அத்திப்பழம்
கோவைப்பழம்
எதுவுமில்லை
திருக்குறளை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
எ.எல்.பெர்விக்
ஆறுமுக நாவலர்
மிசிகாமி அம்மையார்.
அயோத்தியதாச பண்டிதர்
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று" என்ற குறளில் மருத்துவம் எத்தனை வகைகளில் அடங்கும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
3
4
5
6
தமிழ் சான்றோர்கள் முடிவு செய்த திருவள்ளுவரின் காலம் எது?
கி.பி.32
கி.மு.32
கி.மு.31
கி.பி.31
'பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற'
மேற்கூறிய திருக்குறளில் மனிதனுக்கு சிறந்த அணிகலன்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?
கல்வியும் செல்வமும்
நகை
பணிவும் இனிமையான சொற்களைப் பேசுவதும்.
பணிவும் கடுஞ்சொல் பேசுவதும்
‘விருந்து புறத்ததொத் தொனுண்டல் சொவொ ைருந்பதனினும் மவண்டற்பொற் றன்று’
'சாவா மருந்து' என்பது எதைக் குறிக்கின்றது?
பிணி தீர்க்கும் மருந்து
சாகாவரமளிக்கும் மருந்து
அமிழ்து
விருந்து
'அறிவினான் ஆகுவது உண்டோ பிரிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை'
மேற்கூறிய திருக்குறளில் 'நோய்' என்பதன் பொருள் யாது?
வருமை
பகை
துன்பம்
முழலை
'படைகுடி கூழ்அமைச்சு ________________________________________________ உடையான் அரசருள் ஏறு'
இக்குறளில் எத்தனை அங்கங்களை உடைய அரசனே, அரசர்களில் ஆண் சிங்கத்தைப் போன்றவன் என வள்ளுவர் கூறுகிறார்?
12
8
6
4
ஒரு அரசன் பிறப்பினால் மனிதனாக இருந்தாலும் செயலினால் கடவுள் என்று மதிக்கப்படுவான் என்று கூறும் திருக்குறள் எது?
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்...
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா..
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்..
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்..
வருவாயைப் பெருக்குவதற்கான நான்கு வழிவகைகளைக் கூறும் திருக்குறள் எது?
செல்வத்தைத் தேய்க்கும் படை' என்று முடியும் குறள்
'தூங்காமை கல்வி துணிவுடைமை' என்று துவங்கும் குறள்
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் என்று துவங்கும் குறள்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்' என்று துவங்கும் குறள்.
'__________________________உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்'
இக்குறளில் சோர்வில்லாது முயற்சி செய்யும்போது எது இடையூறாக வந்தாலும் அதைத் தோற்கடித்து வெல்லலாம் என திருவள்ளுவர் கூறுகிறார்?
முன்வினை
சூழ்ச்சி
பகைவரின் தந்திரம்
தோல்வி
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போர்றி உணின்'
இக்குறளில் 'யாக்கை' என்பதன் பொருள் யாது?
மருந்து
உணவு
உடம்பு
தன்ணீர்
'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு'
இக்குறட் கருத்தோடு பொருத்தமான சீவக சிந்தாமணியின் வரி எது?
பிச்சை புகினும் கற்கை நன்றே
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும்
பொன்றுக பசியும் நோயும்.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்'
இக்குறட் கருத்தோடு பொருத்தமான புகழ்மிக்கக் கூற்று எது?
கல்வி கரையில
எழுமையும் ஏமாப் புடைத்து
பிச்சை புகினும் கற்கை நன்றே
பணிந்து கற்றவரே உயர்ந்தவ
