Font size
Worksheetsவெப்பம்
Total questions: 15
Worksheet time: 8mins
வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?
அ. வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.
ஆ. சூரியன் வெப்பத்தின் சக்தி.
இ. வெப்பத்தைப் பார்க்க இயலாது.ஆனால்,
உணர முடியும்.
ஈ. பொருள்களைச் சூடேற வெப்பம் தேவை.
அ, ஆ மற்றும் இ.
ஆ, இ மற்றும் ஈ
அ, இ மற்றும் ஈ
அ, ஆ, இ மற்றும் ஈ
வெப்ப நிலை என்பது என்ன?
வெப்பத்தின் சூட்டைக் குறிக்கும்
வெப்பத்தின் பாகை அளவைக் குறிக்கும் குறியீடு.
வெப்பச் சக்தியாகும்.
வெப்பம் குளிர்ச்சியை உண்டாக்கும்
இது எதைக் குறிக்கிறது?
வெப்பநிலையை அளக்கும் கருவி
வெப்பநிலையின் அளவு
வெப்பநிலையை அளக்கும் வெப்பம்
வெப்பநிலையை அளக்கும் தர அளவை.
ஏன் இரயில் தண்டவாளம் இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது?
வெயில் காலத்தில் தண்டவாளம் துருப்பிடிக்காமல் பாதுகாக்க
மழை காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க
வெயில் காலத்தில் தண்டவாளம் அழகாக இருப்பதற்கு
வெயில் காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க
மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்போது தளர்வாகப் பொருத்தப்படுகின்றன.ஏன்?
குளிர் காலங்களில் மின் கம்பிகள் அறுந்துவிடாமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் மின் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் மின் கம்பிகள் நீளமாகாமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் மின் கம்பிகள் இறுக்கமாக இருப்பதற்கு
ஏன் இரும்புப் பந்து வெப்பப்படுத்திய பின் இரும்பு வளையத்தில் நுழையவில்லை?
சிறிய இரும்பு வளையம் என்பதால்
இரும்புப் பந்து பெரியதாக உள்ளது
இரும்புப் பந்து வெப்பமடைந்ததால் விரிவடைந்து விட்டது.
இரும்புப் பந்து குளிர்ச்சியடைந்ததால் சுருங்கி விட்ட்து.
ஒரு திரவம் வெப்பத்தை இழக்கும்போது என்ன நிகழும்?
திரவம் நீராவியாக மாறும்
திரவம் வெப்பமடையும்
திரவம் குளிர்ச்சியடையும்
திரவம் வெதுவெதுப்பாக மாறும்
படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல வெப்பப்படுத்தப்பட்ட இரும்பு குண்டு இரும்பு வளையத்தினுள் நுழைய முடியவில்லை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் எது இரும்பு குண்டை வளையத்தினுள் நுழையச் செய்யும்?
இரும்ப்பு குண்டை வெப்பப்படுத்துதல்
இரும்பு வளையத்தை குளிர்படுத்துதல்
இரும்பு குண்டை குளிர்படுத்துதல்
இரும்பு சங்கிலியை குளிர்படுத்துதல்
படம் ஒரு ஊறுகாய் புட்டியைக் காட்டுகிறது?
அந்த புட்டியின் இரும்பு மூடியை எவ்வாறு சுலபமாக திறக்கலாம்?
புட்டியை வெந்நீர் உள்ள பாத்திரத்தில் வைத்தல்
இரும்பு மூடியை வெந்நீரில் வைத்தல்
இரும்பு மூடியின் மேலே பனிக்கடிகளை வைத்தல்
நமது வெதுவெதுப்பான கைகளை புட்டியின் மூடியின் மேல் வைத்தல்
படத்தில் காட்டியுள்ள போத்தலை சுடு நீரில் வைத்தால் நிகழக்கூடியதை முன் அனுமானி.
பலூனின் அளவு பெரிதாகும்
பலூன் விரிவடையும்
சுடு நீர் விரிவடையும்
பலூனின் அளவு சிறிதாகும்
மேற்காணும் ஆராய்வின் இறுதி முடிவு என்ன?
இரும்பு குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும்
இரும்பு குண்டை குளிரச் சுருங்கும்
இரும்புக் குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும் , குளிரச் செய்தால் சுருங்கும்
இரும்புக் குண்டு ஒரு சிறந்த வெப்பக் கடத்தி
படம் , ஒட்டியுள்ள இரண்டு ஆடிக்குவளைக் காட்டுகின்றது.
இரண்டு குவளைகளையும் சுலபமாக பிரிக்கும் முறை எது?
K குவளையில் சில பனிக்கட்டிகளைப் போடுதல்.
இரண்டு குவளைகளயும் வெப்ப நீரில் வைத்தல்.
L குவளையை எண்ணெயில் ஊறவைத்தல்
K குவளையில் வெந்நீரை ஊற்றுதல்.
தண்டவாளத்தின் இடைவளி எதுக்கு பயன்படும்?
வெயில் காலத்தில் தண்டவாளம் விரிவடையும்போது வளையாமல் பாதுகாப்பதற்கு
தண்டவாளம் விரிவடைவதற்கு
தண்டவாளம் பிரிவதற்கு
தண்டவாளம் சுருங்குவதற்கு
உலோக உருளை
வெப்பம் ஊடுருவும் பொருள்
வெப்பம் ஊடுருவாப் பொருள்
வெப்பத்தைப் பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும்.
ஆம்
இல்லை
