NEW
Font size
Worksheetsஇலக்கண இலக்கிய புதிர்ப்போட்டி நான்காம் சுற்று
Total questions: 30
Worksheet time: 15mins
கீழ்க்காணும் பொருளைத் தரும் பழமொழி யாது?
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
வருந்தினால் வாராதது இல்லை
வெள்ளம் வருமுன் அணை போடு
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
இவற்றுள் கல்வியின் மேன்மையைக் கூறாத குறட்பா யாது?
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற சரியான இணைமொழியைத் தேர்வு செய்க.
பெற்றோரின் _____________ தெரியாத செழியன் அவர்களை முதியோர் இல்லத்தில்
சேர்த்தான்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
வீரம் மிகுந்த சிங்கத்தை அறிவாற்றலினால் சிறிய முயல் வீழ்த்திய கதையைப் படித்த பொழுது _____________ ஆவான் என்றும் அறிந்து கொண்டேன்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
ஆழம் அறியாமல் காலை விடாதே
வாக்கியத்திற்கு ஏற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
"எந்தக் காரியத்திலும் நாம் ______________ செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் ," என்று ஆசிரியர் கூறினார்.
முயல் கொம்பாக
முழு மூச்சாக
ஓட்டை வாயாக
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தனி மரம் தோப்பாகாது
பதறாத காரியம் சிதறாது
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
"நான் எனது என்ற செருக்குடையவர்களை அவர்களின் விருப்பம் போல் ஆடவிட்டு அரசாள்கிறான்." மேற்காணும் விளக்கத்தை உணர்த்தும் செய்யுளடி யாது?
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்குப் பொருத்தமான உலகநீதி செய்யுள் யாது?
மதி: இத்துணை நேரம் அவள் இங்குத் தானே இருந்தாள்.அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்போது அவளைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்கிறாயே!
மது: மன்னித்துவிடு நண்பா.___________ என்று படித்ததை நான் சற்றே மறந்துவிட்டேன்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
கீழ்க்காணும் ஆத்திச்சூடி செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க.
இயல்வது கரவேல்
பிறருக்குச் செய்யப்படும் உதவியைத் தடுக்கக் கூடாது.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது
கொடுக்க இயன்றதை இல்லையென்று மறைக்கக் கூடாது
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பெருமையாகப் பேசக் கூடாது
கயல்விழி கூறிய நகைச்சுவையைக் கேட்டு அபிநயா ___________ எனச் சிரித்தாள்.
தக தக
கல கல
நற நற
சல சல
சரியாக வரிசைப்படுத்திய கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஓடியும் தேடு திரைகடல் திரவியம்
மந்திரம் தந்தை இல்லை சொல்மிக்க
சிறந்ததொரு தாயிற் இல்லை கோயிலும்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
கீழ்க்காணும் குறளின் ஈற்றடியைத் தெரிவு செய்க.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
யாண்டும் இடும்பை இல
தெய்வத்துள் வைக்கப்படும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருளுக்கேற்ற கொன்றைவேந்தன் செய்யுளைத் தேர்ந்தெடுக.
கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கீழ்க்காணும் மூதுரைக்கு ஏற்ற சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
கடக்கக் கருதவும் வேண்டா
அவரை வெல்வதற்கு முயலக் கூடாது
வாய்க்காலில் சிறுமீன்கள் நீந்தியபடியே போய்க்கொண்டிருக்க
அவற்றைப் பிடிக்க எண்ணாமல் தன் இரைக்கு ஏற்ற பெரிய மீன்கள் வரும்வரை அடங்கிக் காத்திருக்கும் கொக்கு
அடக்கமாயிருப்பவரை அவரது வலிமை அறியாது அறிவற்றவர்கள் என்று கருதுதல்
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு'
இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் யாது?
ஒழுக்கமுடைமை
அறிவுடைமை
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
காலத்திற்கேற்ப சரியான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
நேற்று நான் பள்ளிக்குச் _______________
செல்கிறேன்
செல்வேன்
சென்றேன்
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
அவன் குற்றம் புரியவில்லை.___________ அவனுக்குத் தண்டனை கிடைத்தது.
இருப்பினும்
எனினும்
மேலும்
அதற்காக
கீழ்க்காணும் வாக்கியங்களில் அயற்கூற்று அல்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க
தான் வேலை தேடி பட்டணம் செல்லவிருப்பதாக யாழினி கூறினாள்
இராவணனைப் பார்த்த இராமன்,அவனை மறுநாள் திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டான்
நவம்பர் மாதத்தில் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெறுவதாக கல்யாணி கூறினாள்.
''நான் நூல்நிலையத்திற்கு நாளை செல்லவிருக்கிறேன்," என்றான் குசேலன்.
பிழையாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.
i) இய்யாழ்
ii)தீப்பந்தம்
iii)மென்றுத் தின்றான்
iv) கல்தூண்
i,ii,iii
iii,iv
i,iii,iv
ii,iv
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் செயல்பாட்டு வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பாலன் பழம் சாப்பிட்டான்
அக்கம்பத்து மக்கள் கூட்டுப்பணி செய்தனர்
சித்திரம் ஓவியர் அறிவுடைநம்பியால் வரையப்பட்டது
மாணவரை ஆசிரியர் கட்டுரை எழுதும்படி பணித்தார்
பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தெரிவு செய்க.
அ+ யானை= அய்யானை
சில + சில= சிலச்சில
பொன் + தாமரை=பொற்றாமரை
மண்+ கலம்=மற்கலம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு ஏற்ற சரியான இலக்கண விதி யாது?
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
தனிக்குறிலை அடுத்து வல்லின மெய் வரின் வலிமிகும்
உயிரோடு உயிர் சேரும் பொழுது வலிமிகும்
ஓரெழுத்து ஒரு மொழியுடன் வல்லெழுத்து சேர்தல்
ஓரெழுத்து ஒரு மொழியுடன் மெல்லினம் சேர்தல்
விழைவு வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மலேசியா அழகிய நாடு
மரங்கள் பெருகிட எவ்வாறு நீ உதவுவாய்?
என் நாட்டு மக்கள் இறந்த பின் நான் மட்டும் உயிர்வாழ்ந்து பயனென்ன?
அன்பு கூர்ந்து என் இல்லம் வந்து செல்க.
கீழ்க்காணும் வாக்கியம் எந்த வினையைக் குறிக்கின்றது?
'அவன் உதைத்தான்'
குன்றிய வினை
.குன்றா வினை
வினை எச்சம்
பெயர் எச்சம்
இவற்றுள் அஃறிணை சொல் இருக்கும் பட்டியல் எது?
மன்னர்,அமைச்சர்,தளபதி,சேவகன்
சிறுவன்,சிறுமி,குழந்தை,பொம்மை
படகோட்டி,ஓட்டுனர்,மாலுமி,விமானி
முதலாளி,தொழிலாளி,வியாபாரி,பணியாள்
சேர்தெழுதுக
பல + ஆறு
பலாறு
பல்லாறு
பலவாறு
பலவ்வாறு
பிரித்தெழுதுக
அம்மாலை = __________ + _____________
அ + மாலை
அம் + மாலை
அம் + ஆலை
அம்மா + ஆலை
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
5
நன்மை + கொடை = நன்கொடை இந்தப் புணர்ச்சியில் நிலைமொழி 'நன்மை' எந்த வகை பெயர்ச் சொல்லாகும்?
எண்ணுப் பெயர்
திசைப்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
பின்வரும் வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
'அச்சுதன் மகிழுந்தைச் சுத்தமாகக் கழுவினான்.
அச்சுதன்
மகிழுந்தைச்
கழுவினான்
சுத்தமாகக்
