Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2NA_வாசித்தல் வினாடி வினா 1_மரபுத்தொடர் (2B புத்தகம்)

Total questions: 7

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

குமார் உள்நாட்டில் மட்டுமே வேலை பார்க்க விரும்பினான். அதனால் வெளிநாடுகளில் கிடைத்த ஒருசில வேலை வாய்ப்புகளை எல்லாம் ________ வந்தான்.

a)

தட்டிக்கொடுத்து

b)

தட்டிப்பறித்து

c)

தட்டிக்கேட்டு

d)

தட்டிக்கழித்து

2.

தட்டிக்கழித்தல் என்பது நமக்கு வரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தாமல் அவற்றை (a)   என்று ஒதுக்குவதாகும்.

3.

ஒருவரின் பொருளையோ அல்லது வாய்ப்பையோ மற்றொருவர் அநீதியான (முறையற்ற) வழியில் அபகரிப்பது __________ எனப்படும்.  

a)

தட்டிப்பறித்தல்

b)

தட்டிக்கொடுத்தல்

c)

தட்டிக்கேட்டல்

d)

தட்டிக்கழித்தல்

4.

தவறு செய்பவர்களைத் துணிச்சலாகக் கண்டிப்பது (a)   எனப்படும். 

5.

சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும், சாதாரண நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான் அமரன்.அவனது சாதனையை அறிந்த வகுப்பு ஆசிரியர் அவனை _________.

a)

தட்டிப்பறித்தார்

b)

தட்டிக்கேட்டார்

c)

தட்டிக்கொடுத்தார்

d)

தட்டிக்கழித்தார்

6.

தட்டிக்கொடுத்தல் என்பது ஒருவரை உற்சாகப்படுத்துவது அல்லது (a)   ஆகும். 

7.

பள்ளிக்குப் போகும்போது தன் தம்பி ரகுவைக் கேலி செய்த மாணவர்களை அண்ணன் பரத் ____________. 

a)

தட்டிப்பறித்தான்

b)

தட்டிக்கேட்டான்

c)

தட்டிக்கொடுத்தான்

d)

தட்டிக்கழித்தான்