wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் பழமொழி

Total questions: 55

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

பழமொழியை நிறைவு செய்யவும்.


______________________ வெயிலில் தெரியும்

a)

நீரின் அருமை

b)

நிழலின் அருமை

c)

வெயிலின் அருமை

2.

பழமொழியை நிறைவு செய்யவும்.


இமைக் ____________ கண்ணுக்குத் ______________

a)

கண் , தெரியும்

b)

குற்றம் , தெரியாது

c)

கும்முன் , தெரியாது

3.

பழமொழியை நிறைவு செய்யவும்.


நிறைக்குடம் _________________________________

a)

தளும்பும்

b)

தளும்பாது

c)

நிறம்பும்

4.

பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


வருந்தினால் வாராதது இல்லை

a)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

b)

அக்கறையில்லாமல் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.

c)

அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

5.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தோல்வி என்பது நம்மை நெருங்காது.

a)

வருந்தினால் வாராதது இல்லை

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

6.

கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?


நகுலன் வீட்டின் அருகில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டினான். இப்பொழுது வெயில் காலத்தில் வெப்பம் அதிகரித்து வாட்டியது.

a)

வருந்தினால் வாராதது இல்லை

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

7.

படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.

a)

A. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

B. வருந்தினால் வாராதது இல்லை

c)

C. நிறைக்குடம் தளும்பாது

8.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு குற்றமாகத் தெரியாது.

a)

நிறைகுடம் தளும்பாது

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

வருந்தினால் வாராதது இல்லை

9.

வருந்தினால் வாராதது இல்லை


அக்கறையெடுத்துக் கொண்டால் ___________________

a)

நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

b)

நாம் அடைய நினைத்தது கிடைக்கும்.

c)

நாம் அடந்தே தீருவோம்

10.

விவசாயம் தொழில் பற்றி தெரிந்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்ட திரு.முரளி வெற்றி கண்டார்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

வருந்தினால் வாராதது இல்லை

11.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும் .

a)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

b)

பதறாத காரியம் சிதறாது

c)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?

12.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் .

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே .

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் .

c)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?

13.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


சூழல் : மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான் . இதனால் , படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை . மேலும் வேலையிலும் சோர்ந்து போனான் .

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே .

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .

c)

வெள்ளம் வருமுன் அணை போடு .

14.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது .

a)

வெள்ளம் வருமுன் அணை போடு .

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே .

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .

15.

வாக்கியத்திற்கு ஏற்ப பழமொழியை தெரிவு செய்க .


அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர் . ஆனாலும் , எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார் .

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

b)

நிறைகுடம் தளும்பாது

c)

வருந்தினார் வராதது இல்லை .

16.

வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க .


முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் .

a)

வருந்தினால் வராதது இல்லை .

b)

நிறைகுடம் தளும்பாது

c)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

17.

வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க ‌.


கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம் .

a)

வருந்தினார் வராதது இல்லை .

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

c)

நிறைகுடம் தளும்பாது .

18.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை .

a)

வருந்தினார் வராதது இல்லை

b)

நிறைகுடம் தளும்பாது .

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

d)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

19.

பொருக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை , அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும் .

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

b)

நிறைகுடம் தளும்பாது .

c)

வருந்தினால் வராதது இல்லை .

20.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


நமக்கு வேண்டியவர்கள் , நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு குற்றமாகத் தெரியாது .

a)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

b)

வருந்தினால் வராதது இல்லை .

c)

நிறைகுடம் தளும்பாது .

21.

நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.

இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

விளையும் பயிர் முளையில் தெரியும்

c)

அறியுடையாரை அரசனும் விரும்பும்

d)

இளமை கல்வி சிலை மேல் எழுத்து

22.

மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?


நாதன் :.........................................................................................

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

23.

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்


அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?

24.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

25.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

26.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

ஒற்றுமையே பலம

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

27.

சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

d)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

28.

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை


கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உப்புக் கொடுத்தவரை

b)

உப்பு வாங்கியவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

உணவு வாங்கியவரை

29.

கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

a)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

b)

அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்

c)

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

d)

நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.

30.

விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

31.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

32.

கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.

a)

இளமை கல்வி சிலை மேல் எழுத்து

b)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

c)

சிறுகக் கட்டி பெருக வாழ்.

d)

ஒற்றுமையே பலம்

33.

கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?


ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!


மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

34.

இறைவனை நம்பி வழிபடுவேருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்டடார்

35.

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

36.

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

a)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

b)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

37.

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

38.

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

39.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

40.

எந்தவொரு செயலில் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

41.

ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

42.

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

ஊருடன் கூடி வாழ்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

43.

ஒருவருடைய மன உணர்வை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

44.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

45.

அமுதாவின் அண்ணன் குபேரன் கவிதை பாடுவதில் சிறந்தவர். எனினும், அவர் எளிமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்வார்.

a)

புத்திமான் பலவான்.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே.

46.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

b)

வருந்தினால் வாராதது இல்லை.

c)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

47.

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

______________ தளும்பாது.

a)

அரைகுடம்

b)

நிறைவாளி

c)

மரைவாளி

d)

நிறைகுடம்

48.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?


ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.

a)

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

49.

ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

A. ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

50.

________________ அருமை __________ தெரியும்.

a)

வெயிலின், நிழலில்

b)

ஆற்றில், சேற்றில்

c)

ஆழம், காலை

d)

நிழலின், வெயிலில்

51.

10. தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த தோழி பள்ளி மாற்றலாகி சென்றதால் அபினயா பாடம் படிக்கச் சிரமப்பட்டாள்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றில் ஒரு கால்

d)

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

52.

பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.

வருந்தினால் வாராதது இல்லை.

a)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

b)

முயற்சியெடுத்துக் கொண்டால் நாம் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை.

c)

அன்பாக நடந்து கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

d)

கடுமையாக நடந்து கொண்டால் நாம் எதையும் செய்து முடிக்க முடியாது.

53.

தன் தாயின் தியாக உள்ளத்தை உணராத தயாளன், அவர் இறந்த பிறகு அதனை நினைத்து வருந்தினான்.

a)

வருந்தினால் வாராதது இல்லை.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

d)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

54.

இலட்சுமி எல்லாப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தாலும், எப்போதுமே அவள் அடக்கத்துடனும் அமைதியுடனும் காணப்படுவாள்.

a)

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

d)

புத்திமான் பலவான்.

55.

இசையையும் தையற்கலையையும் கற்றுக் கொண்டிருந்த சஞ்சனா இறுதியில் எதையும் திறம்பட கற்கவில்லை.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.

d)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.