wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள்

Total questions: 52

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

2.

பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.


எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.

a)

கிணற்றுத் தவளை

b)

நாக்கு நீளுதல்

c)

அவசரக் குடுக்கை

d)

ஓட்டை வாய்

3.

திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

______________________________________________________

a)

செயற்கரிய செய்கலா தார்

b)

தீயினும் அஞ்சப் படும்

c)

செயற்கரிய செய்க லாதார்

d)

செயற்கரிய செய் கலாதார்

4.

இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.

a)

மூலை முடுக்கு = ஓர் இடத்தில்

b)

நன்மை தீமை = உயர்வு

c)

தான தர்மம் = கொடை தருதல்

d)

பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்

5.

புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

இலைமறை காய் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

d)

மலரும் மணமும் போல

6.

திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.

a)

தட தட

b)

மினு மினு

c)

தக தக

d)

பள பள

7.

உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.

a)

கல்வி கேள்வி

b)

அருமை பெருமை

c)

வரவு செலவு

d)

பேரும் புகழும்

8.

திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது

a)

கிணற்றுத் தவளை

b)

முழுமூச்சு

c)

தெள்ளத் தெளிதல்

d)

முயக் கொம்பு

9.

மரபுத் தொடரின் பொருளை தேர்வு செய்க


நாக்கு நீளுதல்

a)

அதிகம் பேசுதல்

b)

மகிழ்ச்சியாகப் பேசுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

d)

பொய் பேசுதல்

10.

கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.

a)

எலியும் பூனையும் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

மலரும் மணமும் போல

d)

காட்டுத் தீ போல

11.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல?

a)

ஒப்புர வொழுகு

b)

இயல்வது கரவேல்

c)

ஓய்தல் ஒழி

d)

உடையது விளம்பேல்

12.

விமான தாக்குதலின் போது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் ______________ வென சரிந்து விழுந்தது.

a)

மட மட

b)

தட தட

c)

மள மள

d)

சர சர

13.

தேசிய அறிவியல் போட்டியில் வெற்றிப் பெற்ற பினாங்கு, இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

a)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

14.

"அப்பொழுதே அப்பா எச்சாரித்தார் இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாமென.... நான் தான் கேட்கவில்லை.."

a)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

d)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

15.

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்

a)

புத்திமான் பலவான்

b)

நிறைகுடம் தளும்பாது

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

16.

"வாணி, எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கற்ற கல்வித்தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது அல்லவா?"

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற்வை யவை

b)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்

d)

மொருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து

17.

____________ கல்வி __________ எழுத்து

a)

இலமைக் , சிலையில்

b)

இளமைக் , சிலைமேல்

c)

இளமைக் , சிலையில்

d)

இளமையில் , சிலையில்

18.

நிக்கோல் டேவிட் விளையாட்டுத் துறையில் மலேசியாவின் மின்னும் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

இலைமறை காய் போல

19.

நாலப் பக்கமும்

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

மேடு பள்ளம்

d)

மல்லும் பகலும்

20.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

a)

குறை சொல்லுதல்

b)

புறம் பேசுதல்

c)

தீயச் செயல்

d)

ஏமாற்றுதல்

21.

அமுதனின் திருமணம் ________________________யின்றி சிறப்பாக நடந்தது.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங் கபடு

c)

தங்கு தடை

22.

'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.

b)

தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.

c)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

23.

பள்ளிக்கட்டணம் கட்ட இயலாத பரதனுக்குப் பாலு _____________________ உதவினான்.

a)

கை கொடுத்து

b)

தோள் கொடுத்து

c)

ஏட்டிக்குப் போட்டி

d)

வாழையடி வாழை

24.

சக்தி ___________________ படித்திருந்ததால் நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்.

a)

வெட்டிப் பேச்சு

b)

அரைப்படிப்பு

c)

ஏட்டிக்குப் போட்டி

25.

பாட வேளையின்போது குகனும் சிவாவும் பாடத்தில் கவனம் செலுத்தாது ________________________ பேசிக் கொண்டிருந்தனர்.

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

தோள் கொடுத்தல்

c)

வெட்டிப் பேச்சு

26.

கோகுலன் பணக்காரராக இருந்தாலும் மனிதர்களிடத்து ____________________ பார்க்காதவர்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

27.

__________________யின்றி வாழ்வதே சிறந்த செல்வ வாழ்வாகும்.

a)

தங்கு தடை

b)

கள்ளங் கபடு

c)

நோய் நொடி

28.

கோபி தன் இல்லத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களையும் _______________________ மலர வரவேற்றான்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

அகமும் புறமும்

d)

தங்கு தடை

29.

திருக்குறளின் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.

குணமும்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

மிகைநாடி மிக்க கொளல்

c)

சான்றோன் எனக்கேட்ட தாய்

30.

திருக்குறளின் விடுப்பட்ட முதல் அடியைத் தேர்ந்தெடுக.

——————————————————

இழுக்கா இயன்றது அறம்.

a)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

b)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

c)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

31.

கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட சொற்களின் பொருளைத் தேர்ந்தெடுக.


விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

பாலில் நெய்யும் விறகில் தீயும் மறைந்திருப்பது போல

b)

விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல

c)

தீயும் நெய்யும் பாலில் விறகும் மறைந்திருப்பது போல

32.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் -மன்னற்குத்

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

சென்ற இடமெல்லாம்.

a)

கற்றோன் மன்னனின் சிறப்புடையன் மன்னற்குத்

b)

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

c)

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

33.

ஆசிரியர் கற்பித்த செய்யுளை மாணவன் மனனம் செய்து __________வென ஒப்புவித்தான்.

a)

கிடுகிடு

b)

வெடவெட

c)

நசநச

d)

கடகட

34.

நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் ________வென ஆட்டங்கண்டன.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

கடகட

35.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி என் உடல் ___________வென்றிருந்தது.

a)

நசநச

b)

கடகட

c)

வெடவெட

d)

கிடுகிடு

36.

அடைமழை பொழிந்தாலும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் எவ்வித ___________இன்றி சிறப்பாக நடைப்பெற்றது.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

d)

தங்கு தடை

37.

செல்வந்தரான இலக்கியன் _____________ பாராமல் ஏழை எளியோருக்குப் பல உதவிகளைச் செய்தார்.

a)

நோய் நொடி

b)

அகமும் புறமும்

c)

உயர்வு தாழ்வு

d)

கள்ளங் கபடு

38.

சரியான உணவும் உடற்பயிற்சியும் ஒரு மனிதனை _____________இன்றி நெடு நாள் வாழ வழி வகுக்கும்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

39.

கோமதியும் வாணியும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இணைப்பிரியாமல் _______________ பழகி வருகின்றனர்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

பசுமரத்தாணி போல

c)

மணியும் ஒலியும் போல

d)

இலைமறை காய் போல

40.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தால் அப்பழக்க வழக்கங்கள் நாளடைவில் அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.

a)

இலைமறை காய் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

41.

கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

a)

அதிக இனிப்புச் சுவை

b)

பழமும் பாலும் உண்ணல்

c)

இன்பத்துக்கு மேல் இன்பம்

d)

துன்பத்துக்கு மேல் இன்பம்

42.

அக்கோயில் திருவிழாவில் செங்குட்டவன் குடும்பத்திற்குத்தான் ___________________ பரிவட்டம் கட்டி மரியாதைச் செய்வது வழக்கம்.

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

வாழையடி வாழை

c)

வெட்டிப் பேச்சு

d)

தோள் கொடுத்தல்

43.

முத்து எப்பொழுதும் தன் தம்பியுடன் விதண்டாவாதம் செய்வதே வேலையாகிவிட்டது.

a)

வெட்டிப் பேச்சு

b)

ஏட்டிக்குப் போட்டி

c)

அரைப்படிப்பு

d)

வாழையடி வாழை

44.

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

வாழையடி வாழை - விதண்டாவாதம்

b)

அரைப்படிப்பு - நிரம்பாக் கல்வி

c)

தோள் கொடுத்தல் - வீண் பேச்சு

d)

வெட்டிப் பேச்சு - முழுமையற்ற படிப்பு

45.

__________________ மாதவி பிறருடைய உதவியை எதிபார்க்காமல் தானே சுயமாகத் தனது வேலைகளைச் செய்து முடித்து விடுவாள்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

46.

_________________என்பதற்கொப்ப சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வாசன் சிறு தொழில் ஒன்றினைத் தொடங்கினான்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

47.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

d)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

48.

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க

__________________________________________________

இழுக்கா இயன்றது அறம்

a)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

b)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

c)

அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்

49.

திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

a)

ஒருவரின் பண்புநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

b)

ஒருவரின் பண்புநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் என முடிவு செய்யலாம்

c)

ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

d)

ஒருவரின் குற்றத்தை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

50.

திருக்குறளில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

___________________எனக்கேட்ட தாய்

a)

ஆன்றோன்

b)

ஈன்றோன்

c)

சான்றோன்

d)

கேட்டோன்

51.

கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மானனிச் சோதியன்

_____________________________________________

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

உறவு கலவாமை வேண்டும்

b)

பெரியவர் கேண்மை பிறைபோல் நாளும்

c)

சென்ற இடமெல்லாம் சிறப்பு

d)

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

52.

கீழ்க்காணும் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

a)

சிறப்புற

b)

பிழையற

c)

உயர

d)

சிறப்பில்லை