WorksheetsTamil Quiz 1
Total questions: 50
Worksheet time: 25mins
வாக்கியங்களில் உள்ள பிழையான வினைமரபைத் தெரிவு செய்க.
அனிதா மலரைக் கொய்தாள்.
வேடன் அம்பை எய்தினான்.
இலட்சுமி கூடையை முடைந்தாள்.
குயவன் பானையைச் செய்தான்.
பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
தோன்றல்
திரிதல்
கெடுதல்
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
ஆகவே
எனவே
எனினும்
திணை எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
மூன்று
ஆறு
நான், யான்,நாம்,யாம் என்பன
தன்மைப் பெயர்கள்
முன்னிலைப்பெயர்கள்
படர்க்கைப் பெயர்கள்
மரபு
சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணி மணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ள மாட்டாயா?
கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன். பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு
சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே?
மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?
சர்வ+அதிகாரி =
சர்வஅதிகாரி
சர்வாதிகாரி
சர்வதிகாரி
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்,
காய்கறிகளை அறிந்து சமைத்தார்
உளியை அறம் கொண்டு தீட்டினான்
பறவைகள் இறையைத் தின்றன
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்
வாடிக்கையாளர்: ஜயா,இந்தப் புத்தகங்களின் மொத்த விலை எவ்வளவு ?
கடைக்காரர் : இப்புத்தகங்களின் விலை எண்பது ரிங்கிட் மட்டுமே.
உரையாடலில் கோடிடப்பட்ட சொல் ___________விகாரப் புணர்ச்சியாகும்.
திரிதல்
தோன்றல்
கெடுதல்
இயல்பு
எண்ணும் பெயர்புணர்ச்சிக்கு ஏற்ற ஓர் எடுத்துக்காட்டினைத் தேர்ந்தெடு
தென்னாடு
முப்பது
வண்டிச்சக்கரம்
தம்பி சட்டை
சரியான இணையைத் தேர்ந்தெடு.
இரண்டு + இரண்டு = இரண்டிரண்டு
பத்து +பத்து= இருபது
நான்கு + நான்கு = நன்நான்கு
எட்டு + எட்டு = எவ்வெட்டு
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
வரவு செலவு
பேரும் புகழும்
திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது
கிணற்றுத் தவளை
முழுமூச்சு
தெள்ளத் தெளிதல்
முயக் கொம்பு
1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
1. கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________
A. கரி பூசினாள்.
B. கங்கணம் கட்டினாள்.
C. ஒற்றைக் காளில் நின்றாள்.
D. கை கொடுத்தாள்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
A. மனப்பால் குடித்தல்
B. செவி சாய்த்தல்
C. கம்பி நீட்டுதல்
D. குரங்குப் பிடி
கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.
A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனைத் திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.
B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.
C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.
D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.
இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.
நாக்கு நீளுதல்
அரக்க பரக்க
அள்ளி இறைத்தல்
எடுப்பார் கைப்பிள்ளை
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.
அள்ளி இறைத்தல்
அரக்க பரக்க
வாரி இறைத்தல்
மனப்பால் குடித்தல்
கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
அறம் செய விரும்பு
ஈவது விலக்கேல்
முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
பின்வரும் வாக்கியத்தை நேர்க்கூற்றாக மாற்றுக.
தன் திறன்பேசியை விற்கப் போவதாக மாறன் கூறினான்.
நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்" என்று மாறன் கூறினான்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்," என்று கூறினான் மாறன்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்." என்றான் மாறன்.
செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
படித்தான், செய்தான்
பாடங்களை, தேர்வினை
முறையாகப், சிறப்பாகச்
பாடங்களைப் படித்தான்
நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் ஆண்பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.
வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று எச்சரித்தார்.
நக்கீரன்
மிருகங்களை
மக்களிடம்
புலி
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான பலர்பால் பயன்பாட்டைக் கொண்ட வாக்கியத்தைக் கண்டெடுக.
வானில் குருவிகள் பறந்தன
சரவணன் வேகமாக ஓடினான்.
மலேசியா மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள்.
ஆற்றில் மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.
மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.
பழநி
தண்டாயுதபாணி
சுவாமி
பக்தர்கள்
அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.
கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.
சிறுவன், பாடகன்
சிருவன், பாடகர்
சிறுவர், பாடகன்
சிறுவர்கள், பாடகன்
சரியான ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாத்தா தம்பியிடன் கடைக்குச் சென்றார்.
சிறுவர்கள் இரு குழுவாக திடலில் பந்து விளையாடினர்.
அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.
மானவர்கள் சிற்றுண்டியில் வரிசையாக நின்று உணவு வாங்கினர்.
முகநூல் பயன்பாட்டினால் பல தீமைகள் விளைகின்றன. ___________ மக்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
எனவே
ஆனாலும்
மேலும்
படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
5. சரியான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
குயவர்கள் மட்பாண்டங்களை _________________________ சந்தையில் விற்றனர்.
முடைந்து
வனைந்து
எய்து
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
கோபத்தை அடக்கிக் கொண்டு
கோபத்தை வருவித்துக் கொண்டு
கீழ்க்காணும் செய்யுளின் கருத்து யாது?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லர் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதழ் பூவிற்கும் உண்டு.
நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பிறரிடம் கூறக் கூடாது
நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது.
நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளை அப்படியே விட்டுவிடக் கூடாது.
பட்டமளிப்பு விழாவில் தம் மகன் முனைவர் பட்டத்தைப் பெறும் காட்சியைப் பார்த்த அந்தத் தாய், இதுநாள் வரை தாம் பட்ட துன்பங்களை மறந்து _________________ .
தலை எடுத்தார்.
தோள் கொடுத்தார்.
உச்சிக் குளிர்ந்தார்.
மனப்பால் குடித்தார்.
இரங்கல் கூட்டத்தில் மறைந்த கவிஞரின் ____________ பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.
இன்ப துன்பங்களைப்
ஆடை அணிகலன்களைப்
அருமை பெருமைகளைப்
கல்வி கேள்விகளைப்
அறநெறி வழிநின்று வாழ்பவரைச் சிறப்பாகக் கூறும் குறட்பா யாது?
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
குணசேகரன் மிகவும் சுறுசுறுப்பானவர். தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று அவர் வெறுமனே இருப்பதில்லை. தம் வீட்டுக்கு அருகிலுள்ள நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு வருமானத்தைத் தேடிக் கொள்கிறார்.
இளைத்தல் இகழ்ச்சி
காலம் அழியேல்
ஏறுபோல் நட
ஓய்தல் ஒழி
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்குச் சாகாத்தன்மையைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
ஏவா மக்கள் மூவா மருந்து
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஐயோ! கால் வலிக்கிறதே!
மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் புதுமணத் தம்பதிகளை _________ இணைப்பிரியாமல் வாழவேண்டுமென வாழ்த்தினர்.
பசுமரத்தாணிப் போல
அழகுக்கு அழகு செய்வது போல
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
மாட்டுக்கார வேலன் தன் மாடுகளைச் சாட்டையால் ___________ அடித்தான்.
பளீர்பளீர்
பளார்பாளார்
கடுகடு
