Worksheetsபருப்பொருளின் பண்புகள்
Total questions: 15
Worksheet time: 8mins
x மற்றும் y என்ற இரு கம்பிகளைக் கருதுக. x கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y – இன் மீதான தகைவு
x- இன் தகைவுக்கு சமம்
x - இன் தகைவைப்போல் 3 மடங்கு
x-இன் தகைவைப்போல் 9 மடங்கு
x - இன் தகைவில் பாதி
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
1
2
3
4
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு –நீட்சி வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?
கம்பி 1
கம்பி 2
கம்பி 3
அனைத்தும் ஒரே தடிமன் கொணடவை
கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணகத்தில் (31) பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம்
0
0.25
0.3
0.5
5. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் வீதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?
22
23
23
24
. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் ∆l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?
2F
4F
8F
16F
வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே
அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
அதிகரிக்கும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் அதிகரிக்கும்
குறையும் மற்றும் குறையும்
ஒரு முழு திண்மப் பொருளின் யங்குணகம்
0
1
0.5
முடிவிலி
. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?
பாகுநிலை
பரப்பு இழுவிசை
அழுத்தம்
தகைவு
கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால், அதன் யங்குணகம்
மாறாது
குறையும்
அதிக அளவு உயரும்
மிகக்குறைவான அளவு உயரும்
மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்த கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி ∆l. Y ஆனது யங்குணகத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர்க்கோடாகும்?
∆l எதிராக V
∆l எதிராக Y
∆l எதிராக F
∆l எதிராக l1
ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனம் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்
ஆற்றல்=4VT(r1−R1)வெளியிடப்பட்டது
ஆற்றல்=3VT(r1+R1)உட்கவரப்பட்டது
ஆற்றல்=3VT(r1−R1)வெளியிடப்பட்டது
ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல
கீழ்க்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?
நீளம் = 200 cm , விட்டம் = 0.5 mm
நீளம் = 200 cm , விட்டம் = 1 mm
நீளம் = 200 cm , விட்டம் = 2 mm
நீளம் = 200 cm , விட்டம் = 3 mm
ஒரு பரப்பை ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது
பாகுநிலை
பரப்பு இழுவிசை
அடர்த்தி
பரப்புக்கும் திரவத்திற்கும் இடையே உள்ள சேர்கோணம்
மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாயில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 m s-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 m s-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது.
8
16
24
32
