NEW
Font size
Worksheetsதொடர் வாக்கியம்_பயிற்சி 3
Total questions: 10
Worksheet time: 20mins
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
மலர்விழி திடலுக்குச் சென்றாள்.
மலர்விழி தன் தோழிகளுடன் கூடைப்பந்து விளையாடினாள்.
மலர்விழி திடலுக்குச் சென்றால். தன் தோழிகளுடன் கூடைப் பந்து விளையாடினாள்.
மலர்விழி திடலுக்குச் சென்று தன் தோழிகளுடன் கூடைப் பந்து விளையாடினாள்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
அணில் மரத்தில் ஏறியது.
அணில் கொய்யா பழத்தைக் கொறித்துத் தின்றது.
அணில் மரத்தில் ஏறி கொய்யா பழத்தைக் கொறித்துத் தின்றது.
அணில் மரத்தில் ஏறியது கொய்யா பழத்தைக் கொறித்துத் தின்றது.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
அத்தை கடைக்குச் சென்றார்.
அத்தை மீனும் இறாலும் வாங்கினார்.
அத்தை கடைக்குச் சென்றார். மீனும் இறாலும் வாங்கினார்.
அத்தை கடைக்குச் சென்று மீனும் இறாலும் வாங்கினார்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
இனியன் ஓவியம் வரைந்தான்.
இனியன் அழகாக வண்ணம் தீட்டினான்.
இனியன் ஓவியம் வரைந்து; அழகாக வண்ணம் தீட்டினான்.
இனியன் ஓவியம் வரைந்து அழகாக வண்ணம் தீட்டினான்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
ரூபிணி கவிதை எழுதினாள்.
ரூபிணி கவிதை வாசித்தாள்.
ரூபிணி கவிதை எழுதி வாசித்தாள்.
ரூபிணி கவிதை எழுதி; வாசித்தாள்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
நான் சிங்கப்பூர் சென்றேன்.
நான் அங்கு வானளாவிய கட்டடங்களைக் கண்டேன்.
நான் சிங்கபூர் சென்று வானளாவிய கட்டடங்களைக் கண்டேன்.
நான் சிங்கபூர் சென்று; வானளாவிய கட்டடங்களைக் கண்டேன்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
அம்மா சந்தைக்குச் சென்றார்.
அம்மா நிறைய காய்கறிகளை வாங்கினார்.
அம்மா சந்தைக்குச் சென்று நிறைய காய்கறிகளை வாங்கினார்.
அம்மா சந்தைக்குச் சென்றார்; நிறைய காய்கறிகளை வாங்கினார்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
கிள்ளான் துறைமுகத்தில் அரிசி வந்திறங்கியது.
கிள்ளான் துறைமுகத்தில் கோதுமை வந்திறங்கியன.
கிள்ளான் துறைமுகத்தில் அரிசி; கோதுமை வந்திறங்கியன.
கிள்ளான் துறைமுகத்தில் அரிசியும் கோதுமையும் வந்திறங்கியன.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
அமுதன் பூப்பந்து விளையாடினான்.
குமுதன் பூப்பந்து விளையாடினான்.
அமுதனும் குமுதனும் பூப்பந்து விளையாடினர்.
அமுதன்; குமுதன் பூப்பந்து விளையாடினர்.
தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
அப்பா பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினார்.
அப்பா பூச்செடிகளுக்கு உரமிட்டார்.
அப்பா பூச்செடிகளுக்கு நீர் ஊற்றி உரமிட்டார்.
அப்பா பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினார்; உரமிட்டார்.