wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 1 - மின்னூட்டங்கள் (பகுதி 1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எது மின்காந்த விசை அல்ல?

a)

கம்பியின் இழுவிசை

b)

பரப்பின் செங்குத்து விசை

c)

உராய்வு விசை

d)

ஈர்ப்பு விசை

2.

பட்டு துணியால் தேய்க்கப்பட்ட கண்ணாடி பெறும் மின்னூட்டம் ______(i)_______ மற்றும் கம்பளியால் தேய்க்கப்பட்ட இரப்பர் பெறும் மின்னூட்டம் _____(ii)_____

a)

(i) எதிர் மின்னூட்டம்

(ii) எதிர் மின்னூட்டம்

b)

(i) எதிர் மின்னூட்டம்

(ii) நேர் மின்னூட்டம்

c)

(i) நேர் மின்னூட்டம்

(ii) எதிர் மின்னூட்டம்

d)

(i) நேர் மின்னூட்டம்

(ii) நேர் மின்னூட்டம்

3.

எபோனைட் தண்டை கம்பளியால் தேய்க்கும் போது எபோனைட் நிகர எதிர்மின்னூட்டத்தையும், கம்பளி அதற்கு சமமான நிகர நேர்மின்னூட்டத்தையும் பெறுகின்றன. இது எதைக் காட்டுகிறது?

a)

ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்ய மட்டுமே இயலும்

b)

மின்னூட்டங்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது

c)

எந்தவொரு இயற்கை நிகழ்விலும் மொத்த மின்னூட்ட மாற்றம் சுழியாகும்

d)

அனைத்தும் சரியானவை

4.

கூலும் விதிப்படி

a)

F  α  Q1 Q2F\ \ \alpha\ \ Q_{1\ }Q_2

b)

F  α 1r2F\ \ \alpha\ \frac{1}{r^2}

c)

விசையின் திசையானது இரு மின்துகள்களை இணைக்கும் கோட்டின் திசையிலேயே இருக்கும்

d)

அனைத்தும் சரியே

5.

காற்றில் இரு மின்துகள்கள் குறிப்பிட்ட தொலைவில் உள்ளபோது அவற்றிக்கிடையேயான விசை FF என்க.

அவ்விரு மின்துகள்களை அதே இடைதொலைவில் தண்ணீரில் ( ϵr =80\epsilon_r\ =80 ) வைக்கும் போது அவற்றிக்கிடையேயான விசை Fநீர்F_{நீர்} ஆனது

a)

Fநீர் =F80F_{நீர்\ }=\frac{F}{80}

b)

Fநீர் =80 FF_{நீர்\ }=80\ F

c)

Fநீர் = FF_{நீர்\ }=\ F

d)

Fநீர் =0F_{நீர்\ }=0

6.

கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு

a)

k =14 π ϵ0=9×109 N m2 C2k\ =\frac{1}{4\ \pi\ \epsilon_0}=9\times10^9\ N\ m^2\ C^{-2}

b)

ϵ0 =8.854×1012 C2 N1 m2\epsilon_0\ =8.854\times10^{-12}\ C^{2\ }N^{-1}\ m^{-2}

c)

ϵr=ϵϵo=Fகாற்றுFஊடகம்\epsilon_r=\frac{\epsilon}{\epsilon_o}=\frac{F_{காற்று}}{F_{ஊடகம்}}

d)

காற்றில் : ϵr = 1\epsilon_r\ =\ 1

மற்ற ஊடகங்களுக்கு : ϵr <1\epsilon_r\ <1

7.

கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு

a)

1 C மின்னூட்ட மதிப்பு கொண்ட இரு மின்துகள்கள் 1 m இடைவெளியில் உள்ளபோது செயல்படும் விசை 9×109 N9\times10^9\ N

b)

கூலூம் விதிப்படி, இரு நேர்மின்துகள்களுக்கு இடையேயான விசையின் வெக்டர் வடிவம்,

 F21 =14 π ϵoq1q2r2r21\ \overrightarrow{F_{21}\ }=\frac{1}{4\ \pi\ \epsilon_o}\frac{q_1q_2}{r^2}\overline{r_{21}}

c)

நிறை குறைவான பொருள்களுக்கு ஈர்ப்பு விசையைக் காட்டிலும் நிலைமின்னியல் விசையின் மதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்

d)

கூலூம் விதியானது புள்ளி மின்துகள்களுக்கு மட்டுமல்லால் அனைத்து வகையான மின்னூட்ட பரவலுக்கும் பொருந்தும்

8.

கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

a)

மின்னூட்டம் என்பது நிறையைப் போன்ற உள்ளார்ந்த அடிப்படை பண்பாகும்

b)

மின்னூட்டத்தின் S IS\ I அலகு கூலூம் ( CC )

c)

இயற்கையில் கிடைக்கப் பெறும் சிறும மின்னுட்ட மதிப்பு e=1.6×1019 Ce=1.6\times10^{-19}\ C

d)

எலக்ட்ரானின் மின்னுட்ட மதிப்பு +e+e மற்றும் புரோட்டானின் மின்னூட்ட மதிப்பு  e-\ e ஆகும்

9.

+4 C+4\ C மற்றும் +8 C+8\ C மதிப்புடைய இரு ஒத்த கோளப்பந்துகள் 1 m1\ m இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச்செய்து விட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன. எனில் அவற்றிக்கிடையேயான விசை

a)

முன்பை விடக் குறைவாக இருக்கும்

b)

அதே அளவு இருக்கும்

c)

முன்பை விட அதிகமாக இருக்கும்

d)

சுழி

10.

இரு ஒத்த ஓரின மின்துகள்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விலக்கு விசை FF ஆகும். அவ்விரு மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பை இருமடங்காக அதிகரித்தும், இடைத்தொலைவை பாதியாக குறைத்தும் சார்பு விடுதிறன் ϵr=16\epsilon_r=16 கொண்ட ஊடகத்தில் வைக்கப்படும் போது புதிய விசை F!F^! ஆனது

a)

F! =F16F^!\ =\frac{F}{16}

b)

F! = 16 FF^!\ =\ 16\ F

c)

F!=FF^!=F

d)

F! = 4 FF^!\ =\ 4\ F