wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனிய சொற்றொடர்கள் (1)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குமுதாவின் தம்பி அவளுடைய புத்தகத்தைக் கிழித்தான். அதனால் அவளுக்குக் கோபம் _______________ .

a)

உடலில் பரவியது

b)

தலைவிரித்தாடியது

2.

கீதா தன் நண்பனின் பேனாவைத் தொலைத்துவிட்டாள்.

அதனால், ____________________________________

a)

கோபத்தில் அவன் முகம் மலர்ந்தது.

b)

கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன.

3.

உலக அதிசயங்களில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு ___________

____________.

a)

கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை

b)

கொள்ளை ஆசை

4.

மாலா தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாள். அதனால் அவள்_____________

a)

மகிழ்ச்சியில் முகம் வாடினாள்

b)

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்

5.

நேற்று சோவென்று __________________ பெய்தது.

a)

கனத்த மழை

b)

இனிய மழை

6.

ஒரு முரடனிடமிருந்து தப்பிய மாதவன் _______________ ஓடினான்.

a)

மின்னல் வேகத்தில்

b)

இடி வேகத்தில்

7.

நேற்று மாலை திடீரென்று ___________________. பிறகு மழை தூற ஆரம்பித்தது.

a)

பூமி வெடித்தது

b)

வானம் இருண்டது

8.

என் தங்கை வண்ணப்பொம்மைகளைக் ______________ பார்த்துக்கொண்டிருந்தாள்.

a)

கண் கொட்டாமல்

b)

கண் வலிக்க

c)

கண் மூட

d)

கண் எதிரே

9.

நான் செய்த தவற்றைப் பார்த்த என் தாயார் கோபத்தில் என்னை ____________போல் பார்த்தார்.

a)

பஞ்சு தொடுவது

b)

காற்று வீசுவது

c)

எரித்துவிடுவது

d)

தீயை அணைப்பது

10.

மேகலா தன் அப்பாவின் வருகைக்காக ________________வைத்துக்

காத்திருந்தாள்.

a)

பாதையில் விழிவைத்து

b)

சாலைமீது விழிவைத்து

c)

வழிமேல் விழி வைத்து

d)

வீட்டில் விழி வைத்து

11.

காவலர் நவீனின் செயலைப் பாராட்டியதும், அவன் ________________ நீந்தினான்.

a)

ஆழக்கடலில்

b)

பெருங்கடலில்

c)

துன்பக் கடலில்

d)

ஆனந்தக்கடலில்

12.

தேர்வில் மிக சிறப்பாகச் செய்த கண்ணகி ________________ மேடைக்குச்

சென்று தன் சான்றிதழைப் (certificate) பெற்றுக்கொண்டாள்.

a)

வெற்றிநடை போட்டவாறு

b)

முகத்தைச் சுளித்தவாறு

c)

அமைதியாக நடந்தவாறு

d)

தலையைத் தூக்கியவாறு

13.

கரையோரப் பூங்காவில் இருக்கும் எழில்மிக்க பூக்களைக் கண்டு

திரு லீமின் குடும்பத்தினர் __________________________ ரசித்தனர்.

a)

கண்மறந்து

b)

உணர்வு இன்றி

c)

மெய்மறந்து

d)

உயிர் மறந்து

14.

இன்று காலையில் கதிரவன் _____________________. அதனால் எல்லோரும் சூடு

தாங்க முடியாமல் தவித்தனர்.

a)

விறுவிறுவென

ஜொலித்தது

b)

தகதகவென ஜொலித்தது

c)

கமகமவென

ஜொலித்தது

d)

சுடுசுடுவென ஜொலித்தது

15.

நேர்மையற்ற செயலை செய்த கபிலன் தன் தவற்றை எண்ணி ________________ குனிந்தான்.

a)

மயக்கத்தில் தலை

b)

கம்பீரமாக தலை

c)

வெட்கித் தலை

d)

பெருமையில்

16.

அவன் முகத்தில் வியர்வை துளிகள் ________________

a)

வைரமாக ஜொலித்தன

b)

முத்துக்களாகத் தோன்றின

c)

கற்களாக மாறின

d)

பனியாக விழுந்தன

17.

இடைவேளை மணி ஒலித்ததும் மாணவர்கள் உணவகத்தை

நோக்கி __________________________ .

a)

நடந்து பார்த்தனர்

b)

விழுந்து சென்றனர்

c)

ஆமையைப்போல் நகர்ந்தனர்

d)

சிட்டாகப் பறந்தனர்

18.

அவன் செய்த அந்த நல்ல செயல் _____________________ பரவியது.

a)

காட்டுத்தீ போல்

b)

வில்லிலிருந்த அம்பு போல்

c)

சிறுத்தைப் போல்

d)

கனத்த மழை போல்

19.

இன்று கதிரவனின் ஒளி பலரை __________________

a)

கொன்றது

b)

தாக்கியது

c)

சுட்டெரித்தது

d)

வெந்தது

20.

தன் மகனின் தீய செயலைப் பற்றி கேட்ட தாயின் மனம் ______________

உடைந்தது.

a)

மெதுவாக

b)

துண்டுத்துண்டாக

c)

சுக்குநூறாக

d)

சிதறி