NEW
Font size
Worksheetsபுதிர் போட்டி
Total questions: 15
Worksheet time: 15mins
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு பழமொழியைத் தேர்ந்தெடுக.
எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
ஊருடன் கூடி வாழ்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
வாக்கியத்தில் காணும் நேர்க்கூற்றில் அடங்கிய சொற்கள் யாவை ?
"நீ நாளை எங்களுடன் கடற்கரைக்கு வருகிறாயா?" என்று கபிலன் கேட்டான்.
நீ , கேட்டான்
நாளை , எங்களுடன்
எங்களுடன் , கேட்டான்
நீ , நாளை , எங்களுடன்
படத்திற்குப் பொருத்தமான மரபு வழக்குச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
எய்தல்
முடைதல்
வனைதல்
வேய்தல்
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கல்
ஆய்வாலர்கள்
ஆய்வாலர்கல்
கீழே உள்ள சொல்லுக்குப் பொருந்தாத சொல் யாது ? ஐம்பொறி ஆட்சிகொள்
மூக்கு
காது
கால்
கண்
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
செய்துக் காட்டினான்.
கண்டு கொண்டேன்
கேட்டு பார்த்தான்
வந்துத் தந்தான்
கீழ்காணும் வாக்கியத்திலுள்ள செயப்படுபொருள் யாது?
உலகம் போற்றும் இராமயணத்தை இயற்றியவர் வால்மீகி.
உலகம்
வால்மீகி
இயற்றியவர்
இராமாயணத்தை
பிழையான இடைச்சொல்லைத் தேர்தெடுக. அடுத்த வாரம் பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது._______________________, மாணவர்கள் தங்கள் படைப்புகளைச் சரி பார்த்துக் கொண்டனர்.
இருப்பினும்
அதனால்
ஆகவே
எனவே
கண்ணகி பாடுபட்டு ___________________ உழைப்பிற்குப் பலன் கிட்டியது.
உழை
உழைத்த
உழைக்க
உழைத்து
சரியான மரபுத் தொடரையும் அதன் பொருளையும் கொண்டிருக்கும் இணையைத் தெரிவு செய்க.
மனக்கோட்டை - கோட்டை கட்டுதல்
கங்கணம் கட்டுதல் - உறுதி பூணுதல்
கரி பூசுதல் - மதிப்பைக் கொடுத்தல்
கரைத்துக் குடித்தல் - ஒன்றனைப் பற்றி ஓரளவு அறிந்திருத்தல்
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி,வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அது ஓர் அழகிய வீடு.
அஃது ஓர் அழகிய வீடு.
அது ஒரு அழகிய வீடு
அஃது வீடு
கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.
அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.
மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.
நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை.
நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.
சேர்த்தெழுதுக. பசுமை + தமிழ் =
பைத்தமிழ்
பசுந்தமிழ்
பசுமைத் தமிழ்
பைந்தமிழ்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது ஆத்திசூடி அல்ல?
ஈவது விலக்கேல்
ஏற்ப திகழ்ச்சி
இளைத்தல் இகழ்ச்சி
ஒளவியம் பேசேல்
நாம் __________________ அறிந்து சிக்கனமாகச் செலவுச் செய்தால் சீறும் சிறப்புமாக வாழலாம்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
வரவு செலவு
பேரும் புகழும்
