NEW
Font size
Worksheetsஇலக்கியம்
Total questions: 12
Worksheet time: 6mins
இவற்றுள் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அப்பா தமது வேலைகளை மடமடவெனச் செய்து முடித்தார்.
குறும்பு செய்த யாழினியை அமுதன் தடதடவென இழுத்துச் சென்றான்.
வெளியே விளையாடிக் கொண்டிருந்த இனியன் தன் அப்பாவைக் கண்டதும் குடுகுடுவென ஓடி மறைந்தான்.
சரசரவெனும் ஓடும் நதியைப் பார்த்து அம்மா உள்ளம் மகிழ்ந்தார்.
நற்புகழன் எப்போதுமே மற்றவர்களின் குறைகளை மட்டுமே மிகைபடுத்திப் பேசுவான். யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது என்று அவனின் நண்பர்கள் அறிவுத்தியபோதும் அவன் திருந்தவில்லை.
மேற்கண்ட சூழலுக்குச் சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
போகவிட்டுப் புறஞ்சொல்லி திரிய வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
நெஞ்சார பொய்தனைச் சொல்ல வேண்டாம்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்
இத்திருக்குறளில் வள்ளுவர் உரைக்கும் நான்கு இழுக்குகள் யாவை?
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
பொறாமை, கோபம், கடுஞ்சொல், பொய்யுரைத்தல்
பேராசை, கோபம், கடுஞ்சொல், செருக்கு
பொறாமை, பிடிவாதம், கோபம், கடுஞ்சொல்
வாய்மை (1)______________ யாதெனின் (2)_________________
தீமை (3)________________ சொலல்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
1) யாதொன்றும்
2) எனப்படுவது
3) இலாத
1) இலாத
2) யாதொன்றும்
3) எனப்படுவது
1) எனப்படுவது
2) இலாத
3) யாதொன்றும்
1) எனப்படுவது
2) யாதொன்றும்
3) இலாத
சரியான இணைமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
நன்மை தீமை - நல்லது கெட்டது
அங்கும் இங்கும் - நாலாப்பக்கமும்
அரை குறை - மாண்பு
அல்லும் பகலும் - எந்தக் காலத்திலும்
கண்ணகி கோவலன் இறந்ததைக் கேட்டு ______________________ துடித்தாள்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
அனலிலிட்ட மெழுகு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
கண்ணினைக் காக்கும் இமை போல
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட விளக்கத்திற்கும் பொருந்தும் செய்யுள் யாது?
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா(து) உலகில்
நிறைஇருளை நீக்கும்மேல் நின்று. 10 - நன்னெறி
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
செல்வத்தைத் தேடி , அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்.
ஏற்ற உலக நீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
நிலையில்லக் காரியத்தை நிருத்த வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
கொரோனா நச்சுயிரியைப் பற்றிய பல நம்பகத்தன்மையற்ற செய்திகள் ஊடகங்களில் பரவுவதை எவரும் நம்ப வேண்டாம்; பிறருக்குப் பகிரவும் வேண்டாமென்று காவல்துறை அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
வள்ளுவர் ஏன் அனிச்சம் பூவை விருந்தினரோடு உவமை படுத்துகிறார்?
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் மலர வரவேற்றால் அனிச்சம் பூ மலர்வது போல் அவர்களின் முகமும் மலரும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், தொட்டால் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், நுகர்ந்தவுடன் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடிவிடும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், கொய்ததும் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடிவிடும்.
இவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
எலியும் பூனையும் போல : எப்பொழுதும் நட்போடு இருத்தல்
பசுத்தோல் போர்த்திய புலி போல : தீயவன் போல் நடிக்கும் நற்குணம் உள்ளவன்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல - எவராலும் அறியப்படாத ஒருவரின் திறமை
இலைமறை காய் போல : ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
நளவேந்தன் (1) _________தன் வேலைகளைச் செய்து முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் (2)_________வென மின்னிய மோதிரத்தைக் கண்டான். அது யாருடையதாக இருக்குமென்று அறியாது (3)_________வென விழித்துக் கொண்டிருந்தான்.
(1) குடுகுடு, (2) பள பள, (3) திரு திரு
(1) மள மள, (2) மினுமினு, (3) திரு திரு
(1) மள மள, (2) பள பள, (3) சிடுசிடு
(1) மள மள, (2) பள பள, (3) திரு திரு
