Font size
WorksheetsPEEL உத்திமுறை
Total questions: 5
Worksheet time: 18mins
ஒரு கருத்தை நாம் எழுதும் போது, "PEEL" என்பது எதைக் குறிக்கிறது?
பத்தி, ஆதாரம், விரிவாக்கம், இணைப்பு
கருத்து, எடுத்துக்காட்டு, விளக்கம், இணைப்பு
நோக்கம், ஆதாரம், விளக்கம், இணைப்பு
முன் எழுதுதல், திருத்துதல், மதிப்பீடு செய்தல், இணைத்தல்
“ஆகவே, நல்வழியில் நடப்பதன் மூலம் மன திருப்தியுடன் நம்மால் உலகத்தில் வாழ முடியும்.” இந்த வாக்கியம் பத்தியில் எந்த கூறாக வரக்கூடும்?
கருத்து
எடுத்துக்காட்டு
விளக்கம்
இணைப்பு
"மனிதனுக்குத் தேவைப்படும் பண்புகளில் பணிவு மிகவும் முக்கியமான பண்பு ஆகும். பணிவு ஒருவனுடைய வளர்ச்சிக்கு வித்திடும்." இந்த வாக்கியம் பத்தியில் எந்த கூறாக வரக்கூடும்?
கருத்து
எடுத்துக்காட்டு
விளக்கம்
இணைப்பு
வாழ்க்கையில் முன்னேற பொறுமை மிகவும் ஒரு முக்கியமான பண்பு ஆகும். பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும் கூட, பிரச்சனைகள் ஏற்படும் போதும், அமைதியாக இருக்கும் குணம் ஆகும். என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பது, மௌனமாகச் சிரமங்களைச் சகித்துக்கொள்வது என்பதே பொறுமை. “பதறாத காரியம் சிதறாது” என்பார்கள். நம் வாழ்க்கை பாதையை நாம் தேர்ந்தெடுக்கும்போது, பொறுமையாக சிந்தித்து நாம் முடிவெடுப்பது மிகவும் இன்றியமையாததாகும். வாழ்க்கையில் பிரச்சனைகளும் சவால்களும் வருவது இயல்பு. ஆனால் எத்தருணத்திலும் நாம் நம் பொறுமையை இழந்துவிடாமல் நடப்பதே மிகவும் முக்கியமான பண்பு ஆகும். ஆகவே, வாழ்க்கையில் நாம் வெற்றி பெற இந்த நிலம் போல பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
இந்த பத்தியைப் படித்து, பத்தியை PEEL உத்தி முறையின் அடிப்படையில் பிரித்துக் காட்டுங்கள்.
உங்களுடைய எழுத்துப் படைப்பைப் பொறுத்த வரையில் நீங்கள் மேம்பாடு காணக்கூடிய கூறுகள் யாவை?
