NEW
Font size
WorksheetsP5 வேற்றுமை quiz 1
Total questions: 21
Worksheet time: 14mins
கரடி அந்தப் பெரிய _______________________ வெளியே வந்தது.
குகையை
குகையிலிருந்து
குகையின்
குகைக்கு
அன்னையர்களைச் மகிழ்விக்கச் சிறப்பு _______________________ அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிலிருந்து
கலைநிகழ்ச்சின்
கலைநிகழ்ச்சியுடன்
கலைநிகழ்ச்சிக்கு
மழை பெய்யப் போவதை அறிந்த ________________________ தாய் அவனை எச்சரித்தார்.
அவனுடைய
அவனை
அவனுக்கு
அவனால்
அவர்கள் விண்வெளிக்கப்பலைப் பார்த்து, _______________________ நின்றார்கள்.
அதிர்ச்சியில்
அதிர்ச்சியிலிருந்து
அதிர்ச்சியை
அதிர்ச்சிக்கு
மாணவர்த் தலைவன் வகுப்பு _________________________ அமைதியாக இருக்கச் சொன்னான்.
மாணவர்களை
மாணவர்களுடன்
மாணவர்களே
மாணவர்களின்
ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி இருந்தாள். ___________ பெயர் சிங்காரி.
அவளை
அவளுடைய
அவளால்
அவளுக்கு
அவள் தினமும் காய்கறித் தோட்டங்களுக்குச் சென்று வர, ஒரு_________________ வைத்திருந்தாள்.
மாட்டு வண்டியை
மாட்டு வண்டிக்கு
மாட்டு வண்டியால்
மாட்டு வண்டியின்
சிங்காரி அதிகம் பணம் சம்பாதித்தாலும் கருமித்தனமாக இருந்தாள். ஆனால், அவளின் கணவன் சிங்காரம், அவளது ___________________ எதிரானவன்.
குணத்தை
குணத்தால்
குணத்துக்கு
குணம்
சிங்காரம் கருமித்தனம் கொண்ட, தன் _______________ குணத்தை மாற்றப் பாடுப்பட்டான்.
மனைவிக்கு
மனைவியை
மனைவியால்
மனைவியின்
பல நாட்கள் முயன்ற பிறகு _____________ எண்ணம் ஈடேறியது.
சிங்காரத்தின்
சிங்காரனே
சிங்காரனை
சிங்கரனோடு
ஒரு நாள்_______________ தீப்பற்றியபோது, ஏழை வாடிக்கையாளர்கள் அவளைக் காப்பாற்றினர். அன்றிலிருந்து சிங்காரி, தனது கருமித்தனத்தை விட்டுவிட்டாள்.
சந்தைக்கு
சந்தையில்
சந்தையை
சந்தையால்
நவீனா மாடி __________________ அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
படியில்
படிக்கு
படியின்
படியை
மலாலாவின் உலகம் போற்றும் ___________________ நோபல் பரிசு கிடைத்தது.
சேவையால்
சேவையின்
சேவைக்கு
சேவையினது
____________________! அம்மா சொல்வதைக் கேள் என்று தாயார் கூறினார்.
கண்ணனுக்கு
கண்ணனிடம்
கண்ணனை
கண்ணா
பள்ளியில் ___________________ ஆசிரியரும் இன நல்லிணக்க நாளைக் கொண்டாடினர்.
மாணவர்களுக்கு
மாணவர்களின்
மாணவர்களோடு
மாணவர்களை
பேரங்காடியில் ________________ பையைத் பிடுங்கிகொண்டு திருடன் ஓடினான்.
பெண்மணிக்கு
பெண்மணியின்
பெண்மணியால்
பெண்மணியுடன்
குணா _______________ சிறப்பாகப் பேசியதால் பரிசு பெற்றான்.
மேடையில்
மேடைக்கு
மேடையின்
மேடையால்
மாலதி தன் _______________ மெதுவோட்டத்திற்குச் சென்றாள்.
தம்பியுடன்
தம்பியால்
தம்பியை
தம்பியிடம்
________________ வந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மன்னருடன்
மன்னரின்
மன்னரிடமிருந்து
மன்னரால்
சமூக மன்றங்கள் சிறுவர்களுக்கான கதை சொல்லும் ________________ நடத்துகின்றன.
போட்டிக்கு
போட்டியை
போட்டியால்
போட்டியின்
இளையர்கள் வீரதீரம் நிறைந்த சாகச ________________ ஆதரவு அளிக்கின்றனர்.
விளையாட்டுகளுடன்
விளையாட்டுகளுக்கு
விளையாட்டுகளில்
விளையாட்டுகளை
