NEW
Font size
Worksheetsஇடைச்சொல்
Total questions: 6
Worksheet time: 3mins
அடுத்த வாரம் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி நடைபெறவிருக்கிறது. ___________ , மாணவர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
A. ஆயினும்
B. ஆனால்
C. ஆகையால்
D. எனினும்
கணினியினால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். ___________________ , அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் அது நமக்கு தீமை விளைவிக்கும்.
A. காரணம்
B. எனவே
C. ஆனால்
D. இருப்பினும்
நாளை பள்ளி விடுமுறை; ________________ நான் என் பெற்றோர்களுடன் கேமரன் மலைக்குச் சுற்றுலா செல்லவிருக்கிறேன்.
A. ஏனென்றால்
B. ஆகவே
C. ஆனால்
D. ஆயினும்
“நாளை அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. ___________________, அனைவரும் தவறாது பள்ளிக்கு வரவேண்டும்,” என்றார் ஆசிரியர்.
A. எனவே
B. ஆயினும்
C. காரணம்
D. ஆனால்
“நீ புரதச் சத்து நிறைந்த உணவை அதிகமாக உட்கொள்ள வேண்டும். _________________, உன் உடம்பில் புரதச்சத்து மிகவும் குறைவாக உள்ளது”, என அம்மருத்துவர் அரவிந்தனிடம் கூறினார்.
A. ஆகையால்
B. ஏனெனில்
C. எனினும்
D. ஆனால்
“நீ நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். _______________ , அப்பொழுதுதான் உன் காயம் முழுமையாக குணமடையும்,” என்று காற்பந்து பயிற்றுனர் கூறினார்.
A. எனினும்
B. ஆனால்
C. ஆகையால்
D. ஏனென்றால்
