Worksheetsவேற்றுமை
Total questions: 9
Worksheet time: 5mins
வாக்கியத்தை நிறைவு செய்ய சரியான விடையைத் தெரிவு செய்க.
"அம்மா ___________ சட்டையைக் காணவில்லை ____________ பார்த்தீர்களா?”
உன், என்
என், உங்கள்
உங்கள், என்
என், நீங்கள்
அரிச்சந்திரன் தன் வாழ்நாளில் பொய்யே பேசக்கூடாது என உறுதி கொண்டிருந்தான். ________ பல இன்னல்களுக்கு ஆளானான். _______ , உண்மையே பேசினான்.
ஆகையால், ஆயினும்
ஆகவே, அல்லது
எனினும், அதற்காக
ஏனென்றால், ஆகையால்
எட்டாம் வேற்றுமையை ___________ என்று கூறுவர்.
எழுவாய் வேற்றுமை
வினை வேற்றுமை
தொகை வேற்றுமை
விளி வேற்றுமை
கீழ்க்காணும் வாக்கியங்களில் மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குணவதி கார்த்திகை திருநாளன்று அகல்விளக்குகளை ஏற்றினாள்.
சிவபாலனின் ஓவியம் சிறந்த ஓவியத்திற்கான பரிசைத் தட்டிச் சென்றது.
அப்பாவோடு கடைக்குச் சென்ற தங்கை, பனிக்கூழ் வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க குணாளன் கடுமையாகப் பயிற்சி செய்தான்.
பொன் + விலங்கு. சேர்த்து எழுதுக.
பொண்விலங்கு
பொன்னிலங்கு
பொன்விலங்கு
பொற்விலங்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது என்பதைத் தெரிவு செய்க.
ஐயோ! வலிக்கிறதே!
உணர்ச்சி வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.
குமண வள்ளல் புலவரை இன்முகத்தோடு வரவேற்றார்.
குமண வள்ளல் புலவரால் இன்முகத்தோடு வரவேற்றார்.
குமண வள்ளல் புலவரால் இன்முகத்தோடு வரவேற்கப்பட்டார்.
புலவர் குமண வள்ளலால் இன்முகத்தோடு வரவேற்கிறார்.
புலவர் குமண வள்ளலால் இன்முகத்தோடு வரவேற்கப்பட்டார்.
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அங்கேக் கொடு
அவ்வளவுப் பெரிய
அந்தச் சிறுமி
இதுத் தவறு
சரியான விடையைத் தெரிவு செய்க.
நான்கு + நான்கு = நந்நான்கு
ஆறு + ஆறு = ஆறாறு
ஏழு + ஏழு = ஏழேழு
ஐந்து + ஐந்து = ஐந்தைந்து
